Malar Serial: ஏற்கனவே பாவம் மலர்...இதுல மாமனார் ஸ்டிரிக்ட் ஆஃபீசர் வேற!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியலில் மலருக்கு ஏற்கனவே மன உளைச்சல் அதிகம். இதில் அவளின் மாமனார் ஓய்வு ராணுவ அதிகாரி. வீட்டில் இவர் ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் வேற. இதனாலும் பாவம் மலர் கஷ்டப்படறா.
மலர் தற்காப்புக்காக கவுசிக் என்பவனை கொலை செய்துவிடுகிறாள். இது தங்கை சுவாதிக்கு மட்டுமே தெரியும். தங்கை சுவாதி அவ்வப்போது கொடுக்கும் தைரியத்தால் மலர் நார்மலாக இருக்கிறாள்.
இந்த சமயத்தில்தான் மலரை பெண் பார்க்க வந்த காவல் துறை உதவி ஆணையர் கதிருக்கு மலரை ரொம்ப பிடித்துவிடுகிறது. கட்டினால் உன்னைத்தான் கட்டுவேன்னு மலர்கிட்டேயே சொல்லிட்டு வந்துடறான்.

கதிர் மலர்
மலர் கதிரின் கல்யாண வேலைகள் ஆரம்பமாகுது. அவ்வப்போது கதிர் வந்து மலரைப் பார்த்து பேசுவது, வெளியில் அழைத்துப் போவது என்று இருந்தாலும், மலருக்கு கதிரை பிடித்து இருந்தாலும், தான் ஒரு கொலைகாரி என்பதால்,இந்த கல்யாணம் நடக்க கூடாது சுவாதின்னு அடிக்கடி தங்கச்சிக்கிட்டே சொல்ல்கிட்டே இருக்கிறாள் மலர். ஆனாலும், கல்யாணத்துக்கு முதல் நாள் கதிரிடம் நடந்த உண்மைகளை சொல்லிவிடலாம் என்று போகும்போது, கண்முன் தான் கைதாகும் சம்பவங்களும், அப்பா நெஞ்சை பிடித்துக் கொண்டு விழும் காட்சிகளும் வந்து போக சொல்லாமல் விட்டுட்டுடறா

முடிந்தது திருமணம்
கதிர் மலர் இருவருக்கும் திருமணம் நல்லபடியாக முடிந்தது. ஆனாலும், மலரின் பயம் அதிகமாக்கும்
படிதான் சம்பவங்கள் நிகழ்கிறது. முதலிரவில் மலர் நல்ல மூடில் இருக்க, கவுசிக்ன்னு ஒருத்தன் காணாமல் போன கேஸை என்கிட்டே கொடுத்து இருக்காங்கன்னு கதிர் சொல்ல, வியர்த்து விறுவிறுத்து மயங்கி விடுகிறாள் மலர். அப்போது அவளுக்குள் இன்னும் பயம் அதிகரிக்கிறது. புது மனைவியிடம் எதை பேசணும், பேசக் கூடாதுன்னு தெரியாத முட்டாளாவா இருப்பான் கதிர்?

விருந்துக்கு கமிஷனர்
கமிஷனர் கதிர் மலர் ஜோடியை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருக்கிறார். தங்கச்சி சுவாதி அக்காவுக்கு நிறைய தைரியம் சொல்லி.மாமா மனசு கஷ்டப்படற மாதிரி நடந்துக்காதேன்னு சொல்லி அனுப்பறா. மலரும் தற்காப்புக்காக செய்த இந்த கொலைக்கு நான் பொறுப்பு இல்லைன்னு மனசுக்குள் சொல்லிக்கிட்டு விருந்துக்கு போகிறாள். கடைசியில் அவள் கொலை செய்த கவுசிக், கமிஷனர் வீட்டு பையன். எப்படி இருக்கும் மலருக்கு?

மிளகு ரசம்
விருந்துக்கு போய் வந்த அதிர்ச்சியில் இருக்கும் மலரை மிளகு ரசம் வைக்க சொல்றாங்க மாமியார். உன் மாமனார் ரசம் வைக்க சொன்னார். எனக்கு தலை சுத்துது... நான் சொல்றேன், அந்த பக்குவத்தில் ரசம் வைன்னு சொல்றாங்க அத்தை. அவளும் சொல்லிக் கொடுத்த மாதிரி, வச்சுட்டு, அதிகமா ரசத்தை கொதிக்க வச்சுடறா. மாமனார் சாப்பிட உட்கார்ந்துட்டு, மிளகு ரசம் மட்டும் போதும், வேற எதுவும் வேணாம்னு சொல்றார். ரசத்தை ஊற்றியதும் வாயில் வச்சுட்டு, யார் ரசம் வச்சதுன்னு கேட்க, எனக்கு உடம்பு சரியில்லை மலர்தான் வச்சான்னு சொல்ல, எழுந்துடறார்.
உடம்பு சரியில்லேன்னா என்கிட்டே சொல்லணும் என்று மனைவியிடமும், எதை செய்தாலும் சரியா செய்யணும் என்று மருமகள் மலரிடமும் சொல்லிட்டு கிளம்பிடறார்.
திரும்பின பக்கம் எல்லாம் பிரச்சனை என்றால், மலர் என்னதான் செய்வாள் பாவம்!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications