Malar serial: என்ன கொடுமை கண்ணீர் விடாத நாட்களே மலருக்கு இல்லையே!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியலில் மலர் தற்காப்புக்காக ஒரு கொலையை செய்துவிட்டு, கடந்த மூன்று வருடங்களில் ஆரம்பித்து இன்று வரை தினம் தினம் என்று அவள் கண்ணீர் விடாத நாட்கள் இல்லை.
இந்த விஷயம் தங்கை சுவாதிக்கு மட்டுமே தெரியும் என்பதால்,அவள்தான் அவ்வப்போது மலருக்கு ஆதரவாக பேசி, அவளை சிரிக்க வைப்பது .சகஜமாக்கி விடுவது என்று பாசக்கார தங்கையாக இருக்கிறாள்.
இந்த நேரத்தில் கல்யாணம்கூடி வருகிறது மலருக்கு.அதுவும் அசிஸ்டென்ட் கமிஷனர் மாப்பிள்ளை. எப்படி இருக்கும் அவளுக்கு? கடவுளே மாப்பிள்ளைக்கு என்னை பிடிக்க கூடாதுன்னு வேண்டிக்கறா...ஆனா,காட்டினா உன்னைத்தான் கட்டுவேன்னு சொல்றான் மாப்பிள்ளை கதிர்.

முடிந்தது திருமணம்
ஒரு வழியாக நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பது போல.மலர் கல்யாணம் கிட்டே நெருங்குதே நெருங்குதே என்று கவலையில் இருக்க, கதிருடன் கல்யாணமும் முடிந்து விட்டது. சரி இனிமேலாவது அசிஸ்டென்ட் கமிஷனர் கதிரின் விருப்பப்படி, அவன் தன் மீது வைத்திருக்கும் காதலை எண்ணி,அவனுடன் மகிழ்வுடன் வாழலாம் என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள் மலர்.

இபோதுதானா சொல்வது?
மலர் முதலிரவில் கதிரிடம் ஐ லவ் யூ சொல்லிடலாம். இது எனக்கான வாழ்க்கை. எனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் ஒடி ஒளியாமல் எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்தத்தான் வேண்டும் என்று மனசுக்குள் சங்கல்பம் செய்து மன திடத்துடன் இருக்கிறாள். படுக்கை அறைக்கு வந்த கதிர், அவளை வர்ணித்து அவளை மூடாக்கி, கடைசியில் போட்டான் ஒரு போடு.

மனைவியாக வந்த நேரம்
நீ மனைவியாக வந்த நேரம், எனக்கு ஒரு கேஸ் கொடுத்து இருக்கார் கமிஷனர். கவுசிக்னு ஒருத்தனை யாரோ கொலை செத்துட்டாங்க. அந்த கேஸை என்னிடம் குடுத்து இருக்கார்னு சொல்வானா? அந்த கொலையை செய்தவளே மலர்தான், வியர்த்து விறுவிறுத்து மயங்கி விழுந்துடறா. இப்படி தினம் தினம் அழ நல்ல காரணம் கிடைச்சுருது.

கவுசிக் நண்பன்
கதிர் கவுசிக்கின் உயிர் நண்பனை கண்டுபுடித்து, அவனிடம் விசாரிக்க எனக்கு எதுவும் தெரியாது சார். அவன் கமிஷனர் பையன், பணக்காரன். பணம் வேணும்னா அவனிடம் கேட்பேன் அவ்ளோதான்னு சொல்லிடறான் .ஆனால், மலர் சாலையில் நடந்துகொண்டு சென்று இருக்கும்போது, இவள் கவுசிக் காதலிச்ச பொண்ணாச்சேன்னு கண்டுபிடிச்சுடறான்.
இவனுக்கு இருக்கும் கடன் தொல்லையில், அவளை பணம் கேட்டு டார்ச்சர் செய்ய ஆரம்பிக்கிறான். இப்படி மலர் அழாத நாளே இல்லை.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications