இளையராஜாவுக்காக காத்திருந்த மலேசியாவின் உயிர்.. மலேசியா வாசுதேவன் மகள் இவங்களா? உருகிய பிரஷாந்தினி
சென்னை: இசைஞானி இளையராஜா சார்மீது, என்னுடைய அப்பாவுக்கு மரியாதை கலந்த நட்பு இருந்தது.. இத்தனைக்கும் ஒருவருக்கொருவர் அடிக்கடி சந்தித்து கொள்ள மாட்டார்கள்.. அதிகமான தொடர்பும் இருக்காது. ஆனால், மனதுக்குள்ளேயே பேசிக் கொள்வார்கள்" என்று கூறியிருக்கிறார் மலேசியா வாசுதேவன் மகள் பிரஷாந்தினி.
இயல்பிலேயே இசைஞானம் கொண்ட மலேசியா வாசுதேவன் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர்.. ஒரு பாட்டைக் கேட்டதுமே தப்பில்லாமல் திருப்பிப் பாடுவாராம். மலேசியாவில் நாடகங்களிலும் நடித்து கொண்டிருந்தவர்.

நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால், சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார்.. 1970-களில் சினிமாவில் பின்னணிப் பாட துவங்கினாலும், 16 வயதினிலே படத்தில்தான் அவருக்கு பாடகராக பிரேக் கிடைத்தது.
அடுத்தடுத்த வாய்ப்புகளால் உச்சத்துக்கு போன மலேசியா வாசுதேவன், தன்னுடைய குரலில் 8000-க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார்.. 80-க்கும் மேற்பட்ட படங்களில் கேரக்டர், வில்லன் ரோல்களில் நடித்துள்ளார்..
பிரஷாந்தினி: கடந்த 2011ம் வருடம், உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டாலும், மலேசியா வாசுதேவன் பாடல்களை இன்னமும் ரசிகர்கள் தினந்தோறும் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மலேசியா வாசுதேவன் மகளும் பின்னணி பாடகியுமான பிரஷாந்தினி, தன்னுடைய அப்பாவை பற்றின பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
behindwoods சேனலில் பேசிய பிரஷாந்தினி, "நான் பாடல்களை பாடும்போதெல்லாம் அப்பா மிகவும் சந்தோஷப்படுவார்.. நான் எஸ்பிபி சாருடன், "ஹைய்யய்யோ நெஞ்சு அலையுதடி" பாட்டை பாடும்போது, அவ்வளவு சந்தோஷப்பட்டார்.. அவரது நெருக்கமான நண்பருடன், நானும் சேர்ந்து பாடுவது தெரிந்ததுமே, அவ்வளவு சந்தோஷப்பட்டார்..
திருமணம்: வாரணமாயிரம் படத்தில், "முன்தினம் பார்த்தேனே" பாட்டை விரும்பி கேட்பார்.. தன்னுடைய மகள்களில் யாரையாவது ஒருத்தரை தன்னுடைய நாட்டில் திருமணம் செய்து கொடுக்க விரும்பினார்.. ஆனால், நான் மலேசியா போக மாட்டேன்னு சொல்லிட்டேன்.. அதனால் என்னுடைய அக்கா பவித்ராவை மலேசியாவில் திருமணம் செய்து தந்தார்.
இளையராஜா சாரும், அப்பாவும் மிகவும் நெருக்கமானவர்கள். ஆனால், என் அப்பாவுக்கு ராஜா சார் மீதிருந்தது, மரியாதை கலந்த நட்பாகும்.. எந்த மேடையாக இருந்தாலும் என் அப்பா சொல்ல மறக்காத விஷயம், "ராஜா சார் இல்லேன்னா நான் கிடையாது.. இன்னைக்கு மலேசியா வாசுதேவன் என்ற நபர், உலகத்துக்கு தெரிகிறது என்றால் அதற்கு காரணம் இளையராஜா சார்தான்" என்பார்..
வியந்தேன்: அவர் மரணத்தருவாயில் இருக்கும்போது, கடைசி நேரத்தில் ராஜா சார் வருகைக்காகவே அவரது உயிர் காத்திருந்தது. ராஜா சார் வந்ததும்தான் அவரது உயிர் பிரிந்தது. இவர்களது நட்பின் புரிதலை பற்றி அப்போதுதான் நான் வியந்து பார்த்தேன்.. இத்தனைக்கும் ஒருவருக்கொருவர் அடிக்கடி சந்தித்து கொள்ள மாட்டார்கள்.. அதிகமான தொடர்பும் இருக்காது. ஆனால், மனதுக்குள்ளேயே பேசிக் கொள்வார்கள். இதைத்தான் என் அப்பாவின் உயிர் பிரியும் தருணத்தில் உணர்ந்தேன்" என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications