மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்
சென்னை: மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு வெளியே போயிருந்த நிலையில் அங்கு இருந்த பென்ஸ் காரை பார்த்து வியந்து போய் அதை தொட்டதற்காக அங்கு பிரச்சனை ஏற்பட்டு அந்த காரின் உரிமையாளர் அவரை அடித்துவிட்டார் என்ற ரகசியத்தை பல வருடங்கள் கழித்து பிரபல நடிகரான ஆர் ஜே பாலாஜி கூறி இருக்கிறார்.
ஆனால் காரை தொட்டதற்காக மயில்சாமியை ஒருவர் அடித்துவிட்ட நிலையில் அதற்கு பிறகு மயில்சாமிக்கு அவருடைய குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தனர் என்ற தகவலையும் ஆர்.ஜே பாலாஜி கூறியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சாதாரண மக்களாக இருந்தாலும் சரி சின்ன சின்ன நடிகர்களாக இருந்தாலும் சரி கார் என்பது எல்லோருக்கும் கனவுதான். சிலருக்கு ஆடம்பரமாகவும் பலருக்கு அது அடிப்படையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தங்களுக்கு மனதிற்கு பிடித்த காரை வாங்க முடியவில்லை என்றாலும் அது தங்கள் கண்முன்னே போகும்போது ஒரு இனம் புரியாத ஒரு சந்தோஷம் பலருக்கு ஏற்படத்தான் செய்யும் .
அந்த வகையில் பல நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு கூட தயாரிப்பு நிறுவனம் காரில் தான் போக முடியும். சினிமாவில் நடித்து வரும் பல நடிகர்களுக்கு கார் கிடையாது. அதனால் அவர்களுக்கான கார் வாங்குவது ஒரு பெரிய லட்சியமாக வைத்திருக்கின்றனர். அந்த அதுபோல மறைந்த நடிகர் மயில்சாமிக்கும் பெரிய ஆசை இருந்திருக்கிறது. நடிகர் மயில்சாமி பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்திருக்கிறார்.
அதுபோல சின்ன சின்ன நடிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கூட தன்னால் முடிந்த உதவிகளை செய்து இருக்கிறார். அதனால் தான் அவருடைய மறைவுக்கு பலரும் அவர் செய்த உதவிகளை சொல்லி ஃபீல் பண்ணி இருந்தனர். இப்போ வரைக்கும் அவருடைய மறைவை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு புயல் பாதிப்பு ஏற்பட்ட போது கூட மயில்சாமி வாழ்ந்த பகுதி மக்கள் எல்லாரும் மயில்சாமி இருந்திருந்தால் எங்களுடைய நிலைமை நல்லா இருந்திருக்கும்.
எங்களுக்கு சில உதவிகளை அவர் செய்திருப்பார் என்று ஃபீல் பண்ணி பேசி இருந்தனர். அந்த அளவிற்கு மயில்சாமி பலருக்கும் உதவி செய்திருந்தாலும் அவருடைய வாழ்க்கையிலும் சில அவமானங்கள் ஏற்பட்டிருக்கிறது.. ஒருமுறை மயில்சாமி ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்த பென்ஸ் காரை ஆசையாக தொட்டு பார்த்திருக்கிறார்.
அப்போது அந்த காரின் சொந்தக்காரருக்கும் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. காருக்கு சொந்தக்காரர் மயில்சாமியை எப்படி என் காரின் மீது கை வைக்கலாம் என்று கேட்டு பிரச்சனை செய்ய அதற்கு ஆரம்பத்தில் மயில்சாமி பொறுமையாக பேசிக் கொண்டிருந்தாலும் பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.
அப்போது காரின் சொந்தக்காரர் மயில்சாமியை அடித்துவிட்டாராம். ஆனால் அதே மயில்சாமிக்கு அவருடைய ஐம்பதாவது பிறந்த நாளில் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் சேர்ந்து அவருக்கு ஒரு பென்ஸ் காரை பரிசாக வாங்கி கொடுத்தார்கள் என்று ஆர்.ஜே பாலாஜி பேட்டி ஒன்றில் நிகழ்ச்சியோடு பேசி இருக்கிறார். அந்த மாதிரி தான் யாருக்கு எப்போது வாழ்க்கை மாறும் என்று சொல்ல முடியாது .
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications