"அது முடிந்துபோன சேப்டர்!" பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல் குறித்து அதிரடியாகப் பேசிய விஜே மணிமேகலை!
சென்னை: விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினி மணிமேகலை, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சக தொகுப்பாளினியான பிரியங்காவுடன் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட மோதல் குறித்து அதிரடியாகப் பேசியுள்ளார். அந்தப் பிரச்சனைக்குப் பிறகு, இருவருக்கும் இடையேயான உறவு என்ன என்பது குறித்து பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

விஜய் டிவியில் இருந்து வெளியேறக் காரணம்
தொகுப்பாளினி மணிமேகலை, 15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் வலம் வருகிறார். சன் நெட்வொர்க் முதல் விஜய் டிவி வரை பல சேனல்களில் பணிபுரிந்த அவர், தனது கலகலப்பான பேச்சால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். விஜய் டிவியில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியபோது, அதில் போட்டியாளராகக் கலந்துகொண்ட விஜே பிரியங்காவுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது.
மணிமேகலை விளக்கம்
அப்போது, "இப்போது நான் தொகுத்து வழங்கும்போது பிரியங்கா ஓவராகத் தலையிடுகிறார். எனக்கு சுயமரியாதை ரொம்பவே முக்கியம்," என்று கூறி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் மணிமேகலை. மேலும், நடந்த சம்பவங்கள் குறித்து, பிரியங்காவின் பெயரைக் குறிப்பிடாமலேயே ஒரு பதிவையும் வெளியிட்டார். அந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, மணிமேகலைக்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுத்த நிலையில், விஜய் டிவி பிரபலங்கள் சிலர் பிரியங்காவுக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனால் பிரியங்கா இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் அமைதியாக இருந்தார்.
முடிந்துபோன சேப்டர்
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மணிமேகலை விஜய் டிவியில் இருந்து விலகி, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், பிரியங்காவுடனான மோதல் குறித்துப் பேசினார்.
"ஜீ தமிழில் இதற்கு முன்பு நான் நிகழ்ச்சிகள் செய்தது கிடையாது. ஒரு பெரிய சண்டை சச்சரவுக்கு பிறகு அந்த வாய்ப்பு வந்தது. அது நல்லதாகத்தான் இருக்கும் என என்னுடைய உள்மனது சொல்லியது. நான் எப்போதுமே என்னுடைய உள்மனது என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்பேன் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது நல்ல அனுபவம்," என்று கூறினார்.
பெரிய சண்டை
பிரியங்காவுடனான உறவு குறித்து அதிரடியாகப் பேசிய அவர், "கடந்த ஆண்டு பிரியங்காவுடன் நடந்த சம்பவத்துக்குப் பிறகு அவருடன் பேச வேண்டிய அவசியம் இல்லை. என்னைப் பொறுத்தவரை அது முடிந்துபோன மேட்டர்," என்று கூறினார். மணிமேகலையின் இந்த நேர்மையான பேச்சு, பல வருடங்களாக அவரது ரசிகர்கள் மனதில் இருந்த கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications