சொம்பை தூக்கியடித்த மணிமேகலை.. விஜய் டிவி பிரியங்கா பதில் சொல்லியாகணும்? செம வசி ஈழத்தமிழர்: பிரபலம்
சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பிரியங்காவிற்கு 2016ல் பிரவீன் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்தனர். இப்போது 2வது திருமணம் செய்துள்ளார்.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
BBt Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் பத்திரிகையாளர் பாண்டியன், "பிரியங்காவுக்கும், வசிக்கும் 15 வயது வித்தியாசம் உள்ளது.. பிரியங்காவுக்கு 32 வயது, வசிக்கு 50-க்குள் இருக்கும் என்கிறார்கள்.. பிரியங்காவுக்கு 2016-ல் திருமணம் நடந்துள்ளது.. 2022-ல் விவாகரத்து செய்துவிட்டார்.. அப்போதிருந்தே வசியுடன் நட்பில் இருந்தார் பிரியங்கா..

வெளிநாடுகளுக்கும் சென்றார் பிரியங்கா.. இதற்கு காரணம், வசியுடன் இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே வெளிநாடு சென்றார்.. வசிக்கும் ஏற்கனவே திருமணமாகி குடும்பம் தனியாக உள்ளது.. விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சி என்றாலும், தொகுப்பாளினி என்பதைவிட, பிரியங்காதான் அங்கே டானிமேஷன்.
கண்ணீரும் கம்பலையுமாய்
மணிமேகலை கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறிய காரணம் என்ன? குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை பெரிய அளவில் கொண்டுவந்தவர் மணிமேகலைதான்.. "என் வேலையை நீ செய்யாதே" என்று பிரியங்காவிடம் சொன்னார் செப் தாமு.. பிரியங்கா செட்டுக்குள் வந்தாலே எரிச்சலா இருக்கு என்று ஒரு காமெடி நடிகரும் சொல்லியிருந்தார்..
குக் விக் கோமாளி நிகழ்ச்சியில் நடிப்பது பற்றி, நிர்வாகத்திடம் மணிமேகலை புகார் கொண்டுசென்றார். உடனே பிரியங்காவிடம் மன்னிப்பு கேள் என்றது விஜய் டிவி நிர்வாகம்.. இந்த விஷயம் வெளியே தெரிந்தபிறகு பிரியங்காவால் பாதிக்கப்படுபவர்கள் நிறைய பேர் என்பது தெரியவந்தது. மணிமேகலைதான் பூனைக்கு மணிகட்டினார்.. மணிமேகலை செய்தி வெளிவந்தபோதுதான், பிரியங்கா பற்றின செய்திகளும் வெளியானது.
குக் வித் கோமாளி
"விஜய் டிவி நிறுவனத்தின் ஆதரவோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்தார் பிரியங்கா" என்பதுதான் மணிமேகலையின் குற்றச்சாட்டு.. முதல் கணவர் அங்கேயே வேலை பார்த்து கொண்டு, பிரியங்கா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.. இறுதியில் அது விவாகரத்து வரை சென்றுவிட்டது.. கணவரிடம்கூட இணக்கமாக இருக்க முடியாத பிரியங்கா, எப்படி சக கலைஞர்களுடன் நட்பாக இருப்பார்?
அதற்கு பிறகுதான் கனடா, லண்டன் கிளம்பி சென்றார் பிரியங்கா.. காரணம் அங்கே வசி இருந்தார்.. அவர்தான் பிரியங்காவுக்கு ஆறுதல், அடைக்கலம் தந்தார்.. ஒரு மாத காலம் வசியின் அரவணைப்பில்தான் பிரியங்கா லண்டனில் இருந்தார்.. இதெல்லாம் கடந்த காலம் கதை.. அதனால், பிரியங்கா அவரை திருமணம் செய்துள்ளது, மிகப்பெரிய விஷயம் கிடையாது.
கட்டாய கல்யாணம்
விஜய் டிவியிலிருந்தே நிறைய பேர் கல்யாணத்துக்கு செல்லவில்லை.. பிரியங்காவின் அம்மாதான், மகளின் எதிர்காலம் நினைத்து கவலைப்பட்டு, திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.. அம்மாவின் பேச்சை தட்ட முடியாமல் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளார் பிரியங்கா. இது அவர்களது குடும்ப விஷயம். ஆனால், தொகுப்பாளினிகளைகூட சரியாக வைத்துக் கொள்ளாமல், பழிவாங்கப்படுகிற நபராக இருக்கிறார் பிரியங்கா என்பதுதான் அவர்மீதான விமர்சனமாக உள்ளது.
தற்போது திருமணம் செய்திருக்கும் வசி என்பவர் ஈழத்தமிழர் ஆவார்.. லண்டன், கனடாவில் இசைக்குழு வைத்திருக்கிறார்.. ஈழத்தமிழர்களின் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.. இது ஐரோப்பாவில் புகழ்வாய்ந்த இசைக்குழுவாகும்..
வசியின் அண்ணன்
இவர்கள் லண்டனில் இருக்கிறார்கள்.. வசியின் அண்ணனும் இதே குழுவில்தான் உள்ளார்.. வசியின் இந்த இசைக்குழுவினருடன் விஜய் டிவியும் நீண்ட காலம் தொடர்பில் இருந்து வருகிறது.
பல மேகலைகளை விஜய் டிவி விரட்டி அடித்துள்ளது.. மணிமேகலையின் கண்ணீருக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை உள்ளது.. பிரியங்காவுக்கு இதுதான் இப்போது பிரச்சனையே.. விஜய் டிவி நிர்வாகம் முழுக்க முழுக்கக பிரியங்காவுக்கு ஆதரவாக உள்ளது.. பிரியங்கா, வசி இருவரும் நூறு ஆண்டு காலம் வாழ வாழ்த்துவோம்.. ஆனால், இனிமேல் மணிமேகலை சர்ச்சையை போல, பிரியங்கா வேறு எந்த பிரச்சனைகளில் சிக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மணிமேகலை பிரியங்கா மோதல் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, தன்னை விமர்சித்தவர்களுக்கு தவறாமல் பதிலடி தந்து கொண்டிருந்தார் மணிமேகலை.. "பிரியங்காவின் சொம்பு" என்று பதிவிட்டு, சொம்புக்கு எல்லாம் என்னடா மரியாதை? என்றும் கேள்வி எழுப்பியிருந்தது வைரலானது. அப்போதே மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் உள்ளிட்டோர் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications