மணிமேகலை பேசிய “பஞ்ச்” வசனம்.. இது பிரியங்காவிற்கு பதிலடியா? இப்படி ஒரு அல்டிமேட் மாற்றமா? செம
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுபாளினியாக இருக்கும் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் பேசிய விஷயம் தான் இப்போது சோசியல் மீடியாவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியை விட்டு விலகிய மணிமேகலை அதற்கு காரணம் பிரியங்கா என்ற ஒரு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இப்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மணிமேகலை பேசியதாக ரசிகர்கள் மணிமேகலையை பாராட்டி வருகிறார்கள்.
பொதுவாக எந்த ஒரு இடத்தில் வேலை பார்த்தாலும் அங்கு அந்த வேலையை கெடுப்பதற்காகவும், நம்முடைய வேலையை குறை சொல்லி கெடுப்பதற்காகவும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தங்களுடைய வேலையில் கவனமாக அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் அவமானப்படும்போது அந்த இடத்தில் இருந்து பிரச்சனை ஏற்படுத்தாமல் கிளம்பி விடுவது தான் சாமர்த்தியம் என்று சில மாதங்களுக்கு முன்பு மணிமேகலை பரபரப்பாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

ஆரம்ப காலம்
ஸ்டார் மியூசிக்கில் தொகுப்பாளினியாக வேலைக்கு சேர்ந்திருந்தார். பிறகு விஜய் டிவியில் தன்னுடைய கணவரோடு போட்டியாளராக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் இரண்டாவதாக தேர்வாகிரார். பிறகு விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ள மணிமேகலைக்கு வாய்ப்பு வந்தது. முதல் நான்கு சீசன்களாக கோமாளியாக இருந்த மணிமேகலை ஐந்தாவது சீசனில் தொகுப்பானினியாக மாறி இருந்தார்.
மணிமேகலை வீடியோ
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து தான் நிகழ்ச்சி முடிவடைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு மணிமேகலை திடீரென்று விலகி இருந்தார். அதற்கு காரணம் "இந்த சீசனில் போட்டியாளராக வந்த தொகுப்பாளினி தான். அவர் என்னுடைய வேலையை செய்ய விடாமல் தடுக்கிறார். அவருடைய பேச்சை கேட்டு நடந்து கொள்ளணும் என்று அவர் வற்புறுத்துகிறார்" என்று பெரிய குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.
மணிமேகலை குற்றச்சாட்டு
மணிமேகலை இப்படி குற்றச்சாட்டு வைத்தது பிரியங்காவை தான் என்று அப்போது எல்லோரும் பேசி வந்தனர். மணிமேகலை சப்போர்ட்டாக பிரியங்காவை திட்டி வந்தனர். விஜய் டிவி பிரபலங்கள் சிலர் பிரியங்காவிற்கு ஆதரவாக மணிமேகலையை திட்டிக் கொண்டிருந்தனர். இப்படியான சூழ்நிலையில் சில மாதங்கள் கழித்து மணிமேகலைக்கு ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் தான் ஒரு என்டர்டெய்னர் என்று உண்மைகளை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

மணிமேகலையின் பஞ்ச் வசனம்
இதன் மூலம் மணிமேகலைக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றனர். மணிமேகலையின் முடிவை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் தர லோக்கல் குத்து ரவுண்டு நடைபெற்றது. அதில் மணிமேகலை தொகுப்பாளராக மட்டுமல்லாமல் போட்டியாளர்களோடு சேர்ந்து ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த வீடியோவின் ஆரம்பத்தில் மணிமேகலை பேசும் வசனம் இருக்கிறது. அதில், அங்கிருக்கும் நான் நடன கலைஞர்கள் மணிமேகலையிடம் "எப்படிக்கா உங்களை மட்டும் இங்கிருக்கும் எல்லாரும் இப்படி பாசமாகவும் மாஸாகவும் பார்க்கிறாங்க" என்று கேட்க, அதற்கு மணிமேகலை, "நம்மளை விரோதியா பாக்குறவங்களை கூட நாம நண்பனா தான் பாக்கணும். ஏன்னா நம்முடைய டீமே நட்பே துணை" என்று மணிமேகலை அதில் பேசியிருக்கிறார்.
ரசிகர்கள் கமெண்ட்
இந்த வீடியோவை ஜீ தமிழ் தொலைக்காட்சி தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் மணிமேகலை டேக் செய்து போஸ்ட் செய்து இருக்கின்றனர். அந்த பதிவுக்கு கீழே அதிகமான ரசிகர்கள் மணிமேகலையின் பஞ்ச் வசனம் செம என்று பாராட்டுகிறார்கள். இன்னும் ஒரு சிலர் பிரியங்காவிற்கு மணிமேகலை கொடுக்கும் பதிலடி என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications