மணிமேகலை திருமண வாழ்க்கையை "அந்த” வார்த்தையால் கலாய்த்த நபர்.. ஸ்க்ரீன் ஷாட் உடன் கொடுத்த பதிலடி
மணிமேகலை மதம் மாறி திருமணம் செய்ததை குறித்து சமூக வலைத்தளத்தில் ஒரு நபர் கலாய்த்து இருக்கிறார்.
சென்னை: மணிமேகலை மதம் மாறி டான்ஸ் மாஸ்டர் உஹேனை காதல் திருமணம் செய்திருந்தார்.
திருமண நேரத்தில் மணிமேகலை வெளியிட்ட பதிவு மற்றும் அதற்கு பிறகு எடுத்த புகைப்படத்தை வைத்து ரசிகர் ஒருவர் கலாய்த்திருக்கிறார்.
ரொம்ப வலைத்தளத்தில் தன்னை கலாய்த்த ரசிகருக்கு மணிமேகலை அறிவுரை கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.

சன் மியூசிக்கில் பிரபலம்
சன்மியூசிக் புகழ் 'விஜே மணிமேகலை' 90'ஸ்கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை பெரும்பாலான இளைஞர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள்.அந்த அளவிற்கு தனது நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் ஸ்டைலால் பிரபலமாய் இருக்கிறார். இவர் ஒருமுறை சன் மியூசிக்கில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது.. அதனிடையே ஒளிபரப்பப்பட்ட லாரன்ஸ் பட பாடலில் ஆடிய இளைஞரின் நடனத்தால் கவரப்பட்டு.. அவரை பாராட்டுவதற்காக இவர் தொடர்பு கொண்டது இறுதியில் காதலில் வந்து முடிந்தது.அந்த இளைஞர் தான் தற்பொழுது விஜே மணிமேகலை காதலித்து திருமணம் முடித்து இருக்கும் சினிமா நடன உதவி இயக்குனர் ஹாசன் ஆவார்.

காதல் திருமணம்
மதத்தை காரணம் காட்டி இவர்களுடைய காதலுக்கு மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு கிளம்ப தன் பெற்றோரை எதிர்த்து உசேனை திருமணம் செய்து கொண்டார் .இவரது கணவர் டான்ஸ் சூட்டிங்கில் பிஸியாக இருக்க, இவரும் சின்னத்திரையில் போட்டியாளர்,வர்ணனையாளர், பேச்சாளர், என்ற பன்முகத் திறமை யோடு ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே தனியாக யூடியூப் சேனல்கள் வெற்றிகரமாக நடத்திவருகிறார். யூடியூப் சேனலில் தங்களது அன்றாட நடவடிக்கைகளை வீடியோவாக அப்லோட் செய்து வருவது இவர்களது பாலோயர்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திருமண பதிவு
இந்த நிலையில் மணிமேகலை திருமணத்தின்போது நான் ஹூசேமை திருமணம் செய்து இருக்கின்றேன். திடீரென்று எங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் முடிந்து விட்டது. என்னுடைய அப்பாவிடம் கன்வென்சில் செய்ய பார்த்தோம் ஆனால் எங்களால் செய்ய முடியவில்லை. அவர்கள் எங்களை ஒருநாள் புரிந்து கொள்வார்கள். காதலுக்கு மதம் தேவையில்லை. நான் உசேனை காதலிக்கிறேன். எனக்கு ஸ்ரீ ராமஜெயமும், அல்லாவும் ஒன்றுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்போது தன்னுடைய திருமண முடியும் போது எடுத்த புகைப்படத்தையும் அதில் பகிர்ந்து இருந்தார்.

நெகட்டிவிற்கு பதிலடி
அதற்குப் பிறகு மணிமேகலை தன்னுடைய கணவரோடு சேர்ந்து அவருடைய முஸ்லிம் முறைப்படி உடையை அணிந்து புகைப்படம் எடுத்து அதையும் வெளியிட்டு இருந்தார். தற்போது அதை ஸ்கிரீன்ஷாட் ஆக எடுத்த ஒரு ரசிகர் ஒருவர், எப்படி ஆரம்பித்தது? எப்படி முடிஞ்சிருக்கு பார்த்தீர்களா? லவ் ஜிகாத்.. மதமென பிரிந்தது போதும்.. என்று கேப்ஷன் கொடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதை ஸ்கிரீன்ஷாட் ஆக எடுத்த மணிமேகலை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இப்படி லைஃப் ஃபுல்லா உளறிக்கிட்டே இருக்குறதுக்கு போய் உருப்படியா உருப்படுற வேலையை பார்க்கலாம் அல்லவா? என்று நொந்தபடி அதற்கு பதில் கொடுத்திருக்கிறார். தற்போது இது சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications