Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Throwback: தற்கொலை பண்ணிக்க நினைத்தேன், அவ்வளவு வலி.. என் இடத்தில் இருந்தால் தான் தெரியும்- மனோஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா நேற்று காலமானார். அவருடைய உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அவர் சில மாதங்களுக்கு முன்பு வருத்தமாக பேசிய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னைப் பற்றிய விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

நேற்று காலையில் நடிகரும் கராத்தே நிபுணருமான ஹுசைனி காலமானார். அவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ரத்த புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்குப் பிறகு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் தைரியமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக வீடியோக்களில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் காலமான செய்தி திரைத்துறையில் அதிகமாக பேசப்பட்டது.

Manoj Bharathiraja

மனோஜ் பாரதிராஜா மறைவு

இந்த நிலையில் மாலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார். அவருடைய உடலுக்கு இன்று திரைத்துறையில் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் பேசிய பழைய பேட்டி ஒன்று ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்திருக்கிறது. அதில், அவரிடம் உங்களால் உங்க அப்பாவை போல திரைத்துறையில் சாதிக்க முடியவில்லையே? நீங்கள் அதற்கு சரியாக உழைக்கவில்லையா? அல்லது நீங்கள் அதற்கு முயற்சி செய்யவில்லையா? என்று பல்வேறு கேள்விகள் கேட்பதால் வருத்தமாக பேசி இருந்தார்.

அந்த வலி தெரியாது

அதோடு இந்த மாதிரி கேள்வி கேட்கிறவர்கள் என்னுடைய இடத்தில் இருந்து பாருங்க நீங்க வெளியே இருந்து பேசுறீங்க நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று எனக்கு தான் தெரியும். நீ ஜாலியா கமெண்ட் போட்டுட்டு போயிடுவே அதனால் உண்டாகும் வலி என்னன்னு உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு வந்தால் தான் அது தெரியும். அதனால நீங்க என்ன வேணாலும் சொல்லிட்டு போங்க எனக்கு எந்த கவலையும் இல்ல ஆனால் கொஞ்ச நாளா மன உளைச்சலில் இருந்தேன்.

வருத்தத்தில் தவறான முடிவு

ஏன்டா நம்ம வாழ்க்கை இப்படி போகுதுன்னு தோணும். ஒரு எட்டு வருஷமா வெளியே எங்கேயுமே வரல. வாழ்க்கையில் உடைந்து போய் இருந்த நேரத்தில் எனக்கு முழு ஆதரவு தன்னம்பிக்கையும் கொடுத்தது என்னுடைய மனைவிதான். நான் எப்போதெல்லாம் துவண்டு போகிறேனோ அப்போது எனக்கு எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் மட்டும்தான் என் மனைவி சொல்லிக் கொண்டு இருந்தாங்க.

ஆரம்பத்தில் மன கஷ்டத்தில் இருக்கும் போது தற்கொலை பண்ணிக்கொள்ளலாம் என்று கூட நினைத்திருந்தேன். அதற்கு பிறகு என்னுடைய மனைவி அன்பு மற்றும் அக்கறையால் தான் நான் உலகத்தை புரிந்து கொண்டேன். பிறகு என்னைப் பற்றி வரும் கேள்விகளை தூக்கி போட்டு உனக்குன்னு ஒரு லைஃப் வரும் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன் என்று பேசியிருக்கிறார்.

அப்பா கொடுத்த அட்வைஸ்

அதுபோல ஹீரோவா நடிக்க தொடங்கிய பிறகும் எனக்கு வாய்ப்புகள் வரல என்று விரக்தியாக இருக்கும். அது குறித்து அப்பாவிடம் பேசுவேன். அப்போது அவர் நீ நம்பிக்கையோடு இரு ஒன்றை நீ நேசித்து இதுதான் பண்ணனும்னா அந்த பக்கம் போ காலம் கனியும் போது எல்லாம் கையில் கிடைக்கும் என்று சொல்லுவாரு என்று மனோஜ் பேசி இருக்கிறார்.

பாரதிராஜாவின் வருத்தம்

அதுபோல பேட்டிகளிலும் தன்னுடைய நண்பர்களிடமும் பாரதிராஜாவும் தன்னுடைய மகனை நினைத்துதான் அதிகமாக வருத்தப்படுவாராம். என்னுடைய மகன் எவ்வளவோ முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஆனால் அவனுடைய ஆசை கனவு மட்டும் நிறைவேறவில்லை. அது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருப்பாராம்.

பேரரசு சொன்ன விஷயம்

நேற்று காலையில் கூட இயக்குனர் பேரரசுவிடம் பேசும்போது தன்னுடைய மகனின் நிலைமையை சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார். ஆனால் மாலையில் மகன் இந்த உலகத்தை விட்டு போய்விடுவார் என்று தெரியவில்லை என பேரரசுவும் பாரதிராஜா குறித்து பேசி இருக்கிறார்.

இந்த நிலைமை வரக்கூடாது

பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள் எந்த ஒரு தகப்பனுக்கும் தன் பிள்ளைக்கு கொள்ளி வைக்கும் நிலைமை மட்டும் வரக்கூடாது என்று, 80 வயதை கடந்து நிற்கும் பாரதிராஜா தன் முன்பு தன்னுடைய ஒரே மகன் உடல் உயிர் அற்று கிடப்பதை பார்த்து வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்.

கஷ்டமான சூழ்நிலை

தமிழ் சினிமாவில் பல நடிகர்களை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை அவருக்கு தான் சாரும். அதுபோல பலருக்கும் பல்வேறு உதவிகளையும் செய்ததாக அவருடன் பழகியவர்கள் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவருடைய மகனின் இழப்பை இனி அவர் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்? இந்த கஷ்டமான சூழ்நிலையை தாண்டி வருவதற்கு பாரதிராஜாவுக்கு மனவலிமை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+