என்னை ஏமாத்திட்டாருன்னு அழுதாங்க! மூத்த பொண்ணு நம்பல.. மனோஜ் பாரதிராஜா வீட்டு பணிப்பெண் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று முன்தினம் உடல்நிலை குறைபாட்டால் திடீரென காலமானார். இந்த செய்தி சினிமாத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் மனோஜ் பாரதிராஜாவின் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் அவர்களுடைய குடும்பத்தினர் பற்றி சில தகவல்கள் பகிர்ந்து இருக்கிறார்.

நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழ் சினிமா ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைக்கும் செய்தி வந்து சேர்ந்தது. அதுவும் அந்த செய்தி வந்த போது எல்லோரும் இது உண்மையாக இருக்காது, வதந்தியாக இருக்கும்... உண்மையாக மட்டும் இருந்துவிட கூடாது என்று பதறிக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசியில் அந்த செய்தி உண்மையாகிவிட்டது. ஆமாம் இயக்குனர் மற்றும் நடிகராக பிரபலமான மனோஜ் பாரதிராஜாவின் இறப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Manoj Bharathiraja

சோகத்தில் திரை உலகம்

பொதுவாக சினிமாவில் பல பிரபலங்களின் வாரிசுகள் பிரபலங்கள் போல வெற்றி அடைய முடியாத சூழ்நிலை தான் இருக்கிறது. என்னதான் திறமையும் அதற்கு ஏற்ற உழைப்பும் இருந்தாலும் அவர்களுக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. அதற்கு பலர் உதாரணமாக சொல்லலாம். ஆனால் தமிழ் சினிமா உலகில் பெரும் புரட்சி செய்த பாரதிராஜாவின் மகனுக்கும் அதே நிலைமை ஏற்பட்டது தான் அது கொடுமையின் உச்சம்.

பெருமை வாய்ந்த பாரதிராஜா

தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிராஜாவையே சேரும். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உண்டு. அதில் மகன் இயக்குனராக வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே முயற்சி செய்து இருந்தாலும் தன்னுடைய அப்பா பாரதிராஜாவின் ஆசைக்காக நடிகராக அறிமுகமானார்.

மனோஜ் பாரதிராஜா நடித்த படங்கள்

அவர் நடிப்பில் தாஜ்மஹால், வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம் என்ற ஒரு சில திரைப்படங்கள் வெற்றி பெற்றது. ஆனால் சில திரைப்படங்கள் வெற்றியடையவில்லை. அதுபோல எப்படியாவது இயக்குனராகி சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு இருந்த மனோஜ்க்கு கடந்த வருடத்தில் தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை. இது அவருக்கு பெரிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

எதிர்பாராத இறப்பு

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் அவருக்கு இதயத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்தது. சிகிச்சை முடிவடைந்து வீட்டிற்கு வந்த ஒரு சில நாட்களில் அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்து உயிர் பிரிந்திருக்கிறது. இந்த அதிர்ச்சியான தகவல் அனைவரையும் வருத்தமடைய செய்திருக்கிறது.

மனோஜ் பாரதிராஜாவின் குணம்

இந்த நிலையில் மனோஜ் பாரதிராஜா வீட்டில் பணி செய்த பெண் மனோஜ் மற்றும் அவருடைய குடும்பத்தை குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் மனோஜ் ரொம்பவும் நல்ல மனுஷன். வீட்டில் வேலை பார்க்கப் போகும்போது சாப்பிட்டாச்சா என்று தான் முதலில் கேட்பார். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அவருடைய வீட்டில் வேலை பார்க்கவில்லை. அவருடைய எதிர் வீட்டில் தான் வேலை பார்த்தேன் ஆனாலும் அவர் வெளியே போகும் போதெல்லாம் எங்களை பார்த்துவிட்டால் காரை நிறுத்தி சாப்பிட்டாச்சா என விசாரிச்சிட்டு போவார்.

திடீர்னு வந்த ஆட்கள்

என் பொண்ணு பிறந்த நாளுக்கு ஒவ்வொரு வருஷமும் ஏதாவது கிப்ட் அனுப்புவார். நம்ம வீட்டில் தான் இப்போ வேலை செய்யலையே நாம எதுக்கு இவங்க கிட்ட பேசணும் என்று நினைக்க மாட்டார். அதுபோல பணக்கார வீட்டு பையன் என்ற நினைப்பு அவருடைய மனதில் கொஞ்சம் கூட இருக்காது. நேற்று முன்தினம் ஸ்ட்ரக்சரை கொண்டு திடீரென ஆட்கள் மாடிக்கு போனாங்க.

இறப்பு செய்தி

அப்போ நாங்க பாரதிராஜா சாருக்கு தான் ஏதோ உடம்பு சரியில்ல போல அதனால தான் ஹாஸ்பிடலில் இருந்து வந்திருக்காங்க என்று நினைத்தோம். சிறிது நேரம் கழிச்சு தான் ஒருத்தங்க வந்து சொன்னாங்க மனோஜ் சார் இறந்துட்டாருனு. நாங்க அதை நம்பல. பிறகு இன்னொரு ஹாஸ்பிடலில் இருந்து வந்து செக் பண்ணி பாத்துட்டு அவங்களும் அதேதான் சொன்னாங்க.

குடும்பத்தினரின் கண்ணீர்

அதற்கு பிறகு நான் அவங்க வீட்டுக்கு போனேன். அப்போ மனோஜ் சார் மனைவி ரொம்பவும் அழுதுட்டு இருந்தாங்க. அவங்க கிட்ட என்னாச்சு அக்கா என்று கேட்டேன் மனோஜ் என்னை ஏமாத்திட்டு போயிட்டாரு என்று மட்டும்தான் சொல்லிக்கொண்டு அழுதுட்டு இருக்காங்க. அவருடைய மூத்த பொண்ணு இதை கொஞ்சம் கூட நம்பவே இல்ல. நீங்க பொய் சொல்றீங்க என்று காதிலும் முகத்திலும் அடித்து அழுது கொண்டே இருக்கிறது.

மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மீது மனோஜ் சாருக்கு ரொம்பவும் பாசம். அவங்க எல்லாருக்கும் மனோஜ் சார் ரொம்ப பிடிக்கும். இந்த இழப்பில் இருந்து அவங்க எப்படி மீண்டு வர போறாங்கன்னு தெரியல என்று அழுதபடியே அந்தப் பெண் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+