மனோஜின் மனைவி தந்த தங்க நகைகள்.. அம்மா தந்த தாலி சரடு.. அழுதுகொண்டே வாங்கி.. பிரபலம் சொல்வது நிஜமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மரணம் பற்றியும், அவரது இறுதி அஞ்சலியில் நடந்த சம்பவங்கள் பற்றியும் தொடர்ந்து இணையதளங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அதேபோல, மனோஜூக்கு மனஅழுத்தம் ஏற்பட என்ன காரணம்? கடைசி நாட்களில் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும் பிரபலங்கள் பலர் வீடியோக்களில் பேட்டிகளாக தந்து கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், மூத்த பத்திரிகையாளர் அந்தணன், திண்டுக்கல் சரவணன் ஆகியோர் சொன்ன கருத்துக்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு திண்டுக்கல் சரவணன் தந்திருக்கும் பேட்டியில், "மனோஜ் தன்னுடைய உடல்நிலை பற்றி, தனக்குள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாரே தவிர, மனைவி, பெற்றோர், நண்பர்களுக்கு அதை பற்றி சொல்லவேயில்லை.. குடும்ப உறவினர்களுக்கும் சொல்லவில்லை.. முடிந்தவரை இதற்கு சிகிச்சை எடுத்து, சரி செய்துகொள்வோம், மற்றவர்களுக்கு இந்த விஷயத்தை சொல்லி சோகப்படுத்த வேண்டாம் என்று மனோஜ் நினைத்துவிட்டார்.

Television manoj bharathiraja gold jewellery

மனைவியை அதிக அளவு காதலித்தவர் மனோஜ். தன்னுடைய 2 பெண் குழந்தைகளும் இதைக்கேட்டு பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும் மனோஜ் நினைத்தார்.. அதனால்தான், தனிப்பட்ட முறையிலேயே மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வந்தார்.

தனக்குத்தானே மன அழுத்தம்

தனக்குள் இருக்கும் சோகத்தை பிறருக்கு சொல்லாமல், தனக்குதானே மன அழுத்தத்தை உண்டு பண்ணி கொண்டார். ஒருகட்டத்துக்கு மேல், அதற்கும் அவருக்கு உடல் ஒத்துழைப்பு தரல. மனோஜ் தன்னுடைய உடல்நிலை குறித்து வேறு யாரிடமாவது சொல்லியிருந்தால், கண்டிப்பாக அவருக்கான சிகிச்சை வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

பைபாஸ் செய்த டாக்டர்கள் ஸ்பெஷலிஸ்ட்கள் என்றாலும், வெளிநாட்டிலும் இதே சிகிச்சையை செய்திருக்கலாம். பைபாஸ் செய்வதற்கான தொகைக்குகூட நெருக்கடியான நிலைமை இருந்ததாக தெரிகிறது.

குடும்பத்தினர் தந்த நம்பிக்கை

ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னபோதுகூட, மனோஜுக்கு அதில் உடன்பாடு இல்லை.. மனைவி, குழந்தைகளை நினைத்து கவலைப்பட்டுள்ளார்.. அதனால், ஆபரேஷன் செய்யாமலேயே இப்படியே இருந்துவிடலாம் என்று நினைத்ததும், அவருக்கு மைனஸாகிவிட்டது.. டாக்டர்கள் சொன்னபோதுகூட, இப்படியே இருக்கேன் என்று தெரிவித்துள்ளார்.

பிறகு, சித்தப்பா உட்பட குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சொல்லிதான், அவரை சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்.. ஆபரேஷனும் சக்ஸஸ் ஆகியிருக்கிறது. அந்த நேரத்தில் அவருக்கிருந்த கிட்னி பிரச்சனையையும் டாக்டர்கள் ஓரளவு சரி செய்துள்ளனர். ஆனாலும், மன அழுத்தம் அதிகமாகவே இருந்தது.

பண உதவி செய்த மனோஜ்

அதற்கு காரணம், மனோஜ் கடைசியாக ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது, அதில் அவருக்கு ஒரு அழுத்தம் தரப்பட்டுள்ளது..
படத்துக்கு பணம் தேவைப்படுவதால், பண உதவியை கேட்டுள்ளனர்.. தனக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், தன்னிடம் பண வசதி இல்லை என்றாலும்கூட அதற்காக உதவ முயற்சித்துள்ளார்..

தன் அப்பாவிடம் பணம் கேட்க விரும்பாமல், அம்மாவிடம் தன் பிரச்சனையை சொல்லியுள்ளார். உடனே அம்மாவும் தாலி சரடு உட்பட நகைகளை எல்லாம் கழட்டி மகனுக்கு தந்துள்ளார்.. மனைவியும் தன்னுடைய நகைகள், பிள்ளைகளின் நகைகளையும் தந்திருக்கிறார். அந்த நகைகளை அழுதுகொண்டே மனோஜ் வாங்கினாராம்.

படம் வெளியாகிவிட்டால், மனோஜ் பழையபடி உற்சாகமாகிவிடுவார் என்ற நம்பிக்கையில், "கவலைப்படாதே" என்று நம்பிக்கை தந்து, தாயும், மனைவியும் நகைகளை தந்து அவருக்கு உதவியிருக்கிறார்கள்.,

இரட்டிப்பு மன அழுத்தம்

இவைகளை பணமாக்கி கொண்டுபோய் படத்தயாரிப்புக்கு தந்து பட வேலையை துவங்க சொல்லி உள்ளார் மனோஜ்.. படம் ரிலீஸானதுமே அந்த பணத்தையெல்லாம் திருப்பி தருவதாக மனோஜிடம் சொல்லப்பட்டுள்ளது.. ஆனால், அந்த நகைகள் திரும்பி மனோஜுக்கு வரவேயில்லை. இந்த மன அழுத்தம் மனோஜுக்கு இருந்துள்ளது.. அதேபோல, அந்த படமும் சுமாராகத்தான் போனது. இதுவும் அவருக்கு மனஅழுத்தத்தை தந்துவிட்டது. இதுதான் அவரது உடல்நிலை மோசமாகிவிட்டது" என்றெல்லாம் அதில் தெரிவித்துள்ளார்.

தாயின் நகைகள்

2 நாட்களுக்கு முன்பு மூத்த பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில் இதே கருத்தைதான் கூறியிருந்தார். "ஆயிரமாயிரம் போலி முகங்களை தற்போது காண முடிகிறது.. மனோஜ்ஜை வைத்து ஒரு படம் எடுக்கப்பட்டது. அதற்கு ரிலீஸ் நேரத்தில் பண சிக்கல் ஏற்பட்டதால், மனோஜிடம் பணத்துக்கு ஏற்பாடு செய்து தரும்படி உதவி கேட்கிறார்கள். மனோஜும் நெருங்கிய உறவுகளிடம் 10 லட்சம் கடன் வாங்கி தருகிறார். அதைதவிர தன்னுடைய அம்மாவின் நகைகளையும் அடகு வைத்து தந்துள்ளார்..

ஆனால், அந்த நகையை கடைசி வரை திரைப்படக்குழுவினர் மீட்டு தரவில்லை. அந்த நகைகளுக்கும் பொறுப்பும் ஏற்கவில்லை. தாயின் நகைகள் மூழ்கும்போதும் மீட்டு தராமல் போனால், மகனின் மனநிலைமை, மனவேதனை எப்படியிருக்கும்?

ஓபன் ஹார்ட் சர்ஜரி முடித்து வந்த நபர், இந்த நகை விவகாரத்தையும், 10 லட்சம் கடன் விவகாரத்தையும் எப்படி எதிர்கொள்வார்? இந்த நெருக்கடிகள்தான் மனோஜுக்கு ஏற்பட்டதாக தெரிகிறது" என்று கூறியிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+