15 வயசுல லவ் டுடே படத்தில் நடிச்சேன்.. என்னை ஏமாத்திட்டாங்க! விஜய் கூட அப்படி சொன்னாரு! மந்த்ரா எமோஷனல்
சென்னை: நடிகை மந்த்ரா பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தான் லவ் டுடே திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். அந்த படத்தில் தன்னை கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று கூப்பிட்டு விட்டு பிறகு என்னுடைய கேரக்டரை மாற்றி விட்டார்கள் என்று நான் அழுதேன். விஜய் கூட என்னை பார்த்து அப்படி சொன்னாரு என்று சில விஷயங்களை மந்த்ரா பகிர்ந்து இருக்கிறார்.
90ஸ் நடிகைகளில் ரம்பா, சிம்ரன், தேவயானி வரிசையில் அறிமுகமான நடிகை மந்த்ரா ஒரு சில திரைப்படங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கவில்லை. தற்போதும் தொடர்ந்து தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் எதனால் தமிழ் சினிமாவில் இருந்து விலகினேன் என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அப்போது தான் நடித்த திரைப்படங்களின் அனுபவங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

அதில் நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே நடிக்க தொடங்கி விட்டேன். 14 வயதில் தான் பிரியம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தேன். அந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பேன். அந்தப் படத்திற்கு பிறகு எனக்கு லவ் டுடே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் என்னிடம் கதை சொல்லும்போது நீங்கதான் ஹீரோயின் என்று சொன்னாங்க
ஆனால் படத்தில் நான் விஜய்க்கு தோழியாக நடிக்க வைத்து விட்டார்கள். இது எனக்கு ரொம்ப கஷ்டத்தை ஏற்படுத்தியது. இது பற்றி நான் எங்க அப்பாவிடம் சொல்லி அழுது இருக்கிறேன். என்னை கடைசி வரைக்கும் விஜய்க்கு தோழியாவே அந்த படத்தில் நடிக்க வச்சுட்டாங்கப்பா என்று வருத்தப்பட்டு அழுதேன். ஆனால் படம் வெளியான பிறகு எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
அந்த திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது விஜய் என்னிடம் என்னுடைய டான்ஸை பாராட்டினார். பிரியம் படத்தில் நீங்க "தில்ரூபா தில்ரூபா" பாட்டுக்கு டான்ஸ் ஆடுறது அருமையா இருந்தது. 15 வயசுல இவ்வளவு அழகா டான்ஸ் ஆடி இருக்கீங்க என்று என்னை பாராட்டினார். அதுபோல அஜித்துடன் இரட்டை ஜடை வயசு திரைப்படத்திலும் நடித்தேன். அவருக்கு ஜோடியாக நடித்திருந்தேன். அவர் சூட்டிங் ஸ்பாட்டில் துருதுருவென இருப்பாரு.
எங்க அம்மா உட்பட செட்டில் இருக்கும் எல்லோருடனும் கார்ட் விளையாடி கொண்டு இருப்பார். அவரை அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம் அப்படி இருக்கும். நான் சினிமாக்களில் துறுதுறு என கேரக்டரில் தான் நடித்திருப்பேன் ஆனால் நிஜத்தில் அப்படி கிடையாது. அதுபோல தமிழில் எனக்கு கேரக்டர்கள் எல்லாமே மாடர்ன் உடை அணிந்து கவர்ச்சிகரமான கேரக்டர் போல இருக்கும்.
ஆனால் நிஜத்தில் நான் அப்படியெல்லாம் கிடையாது. இப்போது என்னுடன் நடித்த நடிகர்கள் புகழின் உச்சத்தில் டாப் ஹீரோவாக இருப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு வருத்தம் தான், விஜய்க்கு ஜோடியாக நடிக்க முடியவில்லை என்று எனக்கு இருக்கிறது. விஜய்யின் டான்ஸ் அவ்வளவு அருமையாக இருக்கும். அவரைத்தான் எல்லோரும் பாராட்டுவார்கள். ஆனால் அவர் என்னுடைய டான்ஸை பாராட்டியதை என்னால் மறக்கவே முடியாது என்று அந்த பேட்டியில் மந்த்ரா பேசியிருக்கிறார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications