Mari Selvaraj: "ஏன் பொண்ணுங்க வயசுல கம்மியான பையனை காதலிக்க கூடாது?" கேள்வியெழுப்பிய மாரி செல்வராஜ்
சென்னை: சமூகம், சாதி, மனித உரிமைகள் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்டுத் தனதுத் திரைப்படங்களின் மூலம் வலுவானக் கருத்துகளை வெளிப்படுத்தி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ், இப்போது திருமண வயது குறித்த ஒரு புதிய கருத்தை வெளியிட்டு, மீண்டும் மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார். சீமானின் பாராட்டுக்கு பிறகு, அவர் பேசிய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது.

மாரி செல்வராஜின் புதிய கருத்து
சமீபத்தில், தனது வெற்றி படமான 'பைசன்' தொடர்பான பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மாரி செல்வராஜ், சமூகத்தில் நிலவும் திருமண வயது குறித்த பொதுவான மனநிலைக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். "ஏன் பொண்ணுங்க வயசுல கம்மியான பையனை காதலிக்கக் கூடாது?" என்று மாரி செல்வராஜ் கேட்டுள்ளார். இந்த கேள்விக்கானத் தனது தரப்பு நியாயத்தையும் அவர் கூறியுள்ளார்.
"கல்யாண வாழ்க்கையில பொண்ணுங்களுக்குத் தான் அனுபவம் அதிகம் தேவை. குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிக்கணும். அதனால அவங்க mature-ஆ இருக்கிறது நல்லதுதானே?" என்று அவர் வாதிடுகிறார். "ஆனால், நம்ம சமூகத்தில் இன்னும் ஒரு மனநிலை இருக்கு... வயசு கம்மியாப் பொண்ணு இருந்தா அவங்க நம்ம சொல்லுறதை கேப்பாங்கன்னு" என்று இந்த கருத்தின் பின்னால் இருக்கும் ஆணாதிக்கச் சிந்தனையையும் சுட்டிக் காட்டினார்.
பைசன் மூலம் உடைக்க முயற்சி
"அதையே நான் 'பைசன்' படம் மூலம் உடைக்கணும் என்று நினைத்தேன்" என்று, தான் படங்களில் அந்தக் கருத்தைக் கொண்டு வந்ததையும் குறிப்பிட்டுள்ளது. மாரி செல்வராஜ் பேசிய இந்தக் கருத்துச் சமூக வலைத்தளங்களில் வெளியானவுடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, இதை ஒரு துணிச்சலானக் கூற்று எனப் பலரும் பாராட்டியுள்ளனர். திருமண உறவுகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அனுபவ வேறுபாடுகளைக் கூர்மையாகச் சுட்டிக் காட்டியதற்காகவும் அவர் பாராட்டப்படுகிறார். எனினும், இந்தக் கருத்து வழக்கம்போல் சமூக வலைதளங்களில்ச் சில விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
சீமானின் உற்சாக பாராட்டு
மாரி செல்வராஜ் இந்தக் கருத்தைப் பேசுவதற்கு முன், அவருடைய 'பைசன்' திரைப்படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாரி செல்வராஜை வெகுவாகப் பாராட்டி இருந்தார். சீமான், "என்னுடைய தம்பி மாரி செல்வராஜ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்றுள்ள 'பைசன்' படத்தைப் பார்த்தேன். அவரின் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியப் பதிப்பாக இருக்கும்" என்றுப் புகழ்ந்தார்.
தனிப்பட்ட வலி
"ஒவ்வொரு வசனமும் இந்த காலத்திற்கும், எதிர்க்காலத்திற்குமான படிப்பினையாக உள்ளது. மாரியின் வலி உரையாடல்களாகப் பதிவாகியிருக்கிறது" என்றும் சீமான் நெகிழ்ந்து பேசியிருந்தார்.
மாரி செல்வராஜ், ஒருபுறம் தனது படத்தின் வெற்றிக்கு பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும்போதே, இதுபோன்ற தனித்துவமான சமூகக் கருத்துகள் மூலம் தொடர்ந்து சிந்தனைகளைத் தூண்டி வருகிறார். சமூகத்தில் புரையோடி போயிருக்கும் நம்பிக்கைகளை தனது படங்கள் மூலமாகவும், பேச்சுகள் மூலமாகவும் உடைக்க முயற்சிக்கும் மாரி செல்வராஜ், தொடர்ந்துப் பேசுபொருளாகவே இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications