பச்சை சிக்னல் ஜாய்க்கு.. உறவை மறுக்க முடியுமா? ஆதாரம் இருக்கா? மாதம்பட்டி ரங்கராஜூக்கு கோர்ட் கேள்வி
சென்னை: தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க, ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுவானது, இன்று நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாய் கிரிசில்டா குற்றச்சாட்டுகளை மாதம்பட்டி ரங்கராஜ் ஆதாரங்களுடன் மறுக்க முடியுமா? என்று நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
எந்த அளவுக்கு புகழின் உச்சியில் வேகமாக சென்றாரோ, அதே வேகத்தில் சர்ச்சைகளிலும், அதுதொடர்பான நீதிமன்ற வழக்குகளிலும் சிக்கி உள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்..

காஸ்ட்லி சமையல்காரர் என்று பெயரெடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் மீது, பிரபல சினிமா காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிஸில்டா என்பவர் பரபரப்பு புகாரை கூறி, கோர்ட் வரை இழுத்துள்ளார்.
காஸ்ட்லி சமையல்காரர்
தன்னை திருமணம் செய்து மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாகவும், தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கோரி வருகிறார்.. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கானது பெண்கள் மீதான குற்றத்தை தடுக்கும் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அந்த பிரிவை சேர்ந்த அதிகாரிகளும், கடந்த வாரத்தில் ஜாய் கிரிஸில்டாவிடம் கிட்டத்தட்ட 6 மணி நேரம் விசாரணை செய்தனர்... அந்த விசாரணையில் பல விஷயங்களை ஜாய் வெளிப்படுத்தியதாகவும், சில ஆதாரங்களை போலீசில் தந்ததாகவும் தகவல் வெளியானது.. எனவே இதையடுத்து, மாதம்பட்டியிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டு வருகிறார்கள்.
2 குழந்தைகள்
இதனிடையே, தன்னை பற்றி அவதூறான வீடியோக்களையும், போட்டோக்களையும் ஜாய் இணையத்தில் வெளியிட்டுள்ளதால், தன்னுடைய நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்பட்டிருப்பதாகவும்; அந்த வீடியோக்களையும் போட்டோக்களையும் டெலிட் செய்ய உத்தரவிடுமாறும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.
தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்திருந்த மனுவானது, இன்று நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், "கடந்த 2013ம் ஆண்டு சமையல் கலை நிபுணர் ரங்கராஜ் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர் தொழிலில் வளர்ச்சியடைந்த நிலையில், ஆடை வடிவமைப்பாளரான கிரிசில்டாவுடன் தொழில்ரீதியாக பழக்கம் ஏற்பட்டது.
அனைத்துக்கும் ஆதாரம்
ஆனால், இருவருக்கும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், மோசம் செய்துவிட்டதாகவும் கிரிசில்டா பேட்டி மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், சமூகத்தில் ரங்கராஜ்க்கு இருந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. தொழிலில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக தனியாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது.
ஜாய் மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டார்.. ஜாய் கிரிஸில்டா தந்த பேட்டிகளால், தன்னுடைய 2 குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருப்பதால், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க, அவருக்கு தடை விதிக்க வேண்டும்" என்று மாதம்பட்டி தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
உறவை மறுக்க முடியுமா
இந்த வாதத்தை கேட்ட நீதிபதி செந்தில்குமார், "ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றச்சாட்டுகளை மாதம்பட்டி ரங்கராஜ் ஆதாரங்களுடன் மறுக்க முடியுமா அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளதா? தொடர்புக்கான காரணங்களை மறுக்க முடியுமா?
இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது" என்றுகூறி, மனுவுக்கு அக்டோபர் 22ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் கிரிஸில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications