பச்சை சிக்னல் ஜாய்க்கு! நிறுவனம் சார்பாக கோர்ட் வரை போன மாதம்பட்டி ரங்கராஜ்! நீதிபதி உத்தரவு பாருங்க
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது.. இது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
மிக குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்ற மாதம்பட்டி ரங்கராஜ், அதே வேகத்தில் சர்ச்சைகளிலும் சிக்கி, அதுதொடர்பான நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்து வருகிறார்..

ஜாய் கிரிசில்டா
தன்னை காதலித்து 2023ம் ஆண்டு திருமணம் செய்ததாகவும், தன்னுடைய குழந்தைக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் போர்க்குரல் எழுப்பி வருகிறார்.. இது தொடர்பாக காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளார்..
மேலும், மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்ததற்கான சில ஆதாரங்களை போலீசில் தந்து, அது தொடர்பான விசாரணையும் இரு தரப்பிலும் நடந்து வருகின்றன.
நவம்பர் 28-ல் விசாரணை
4 நாட்களுக்கு முன்பு இதுதொடர்பான விசாரணையில், ஜாய் கிரிசில்டா கர்ப்பிணியாக இருந்ததால் விசாரணைக்கு அழைப்பதில் சிக்கல் இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜாய் கிரிசில்டா அளித்த புகார் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 28-ம் தேதிக்கு வைக்கப்பட்டது.
மாதம்பட்டி ரங்கராஜ் அதிருப்தி
இதனிடையே, மாதம்பட்டி ரங்கராஜ் பற்றின தன்னுடைய அதிருப்திகளையும், ஏமாற்றங்களையும் பதிவுகளாக தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
ஜாய் கிரிசில்டா வெளியிட்டு வரும் இந்த புகார் மற்றும் சமூக வலைதள பதிவுகளால் தங்களது நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாக மாதம்பட்டி ரங்கராஜின் தந்தை நடத்தி வரும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்தது..
ஜாய் கிரிசில்டா பதிவால் ரூ.12 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டதாகவும், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கையும் தொடுத்தது.
மாதம்பட்டி தொடுத்த வழக்கு
இதற்கு கிரிசில்டா தரப்பில் வாதிடும்போது, "கிரிசில்டாவின் சமூக வலைதள பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் பற்றியோ, நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கை குறித்தோ எதையும் பதிவிடவில்லை.
11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லும்நிலையில், கேட்டரிங் ஆர்டர் எப்போது புக் செய்தனர்? எப்போது ரத்து செய்யப்பட்டது? எவ்வளவு அட்வான்ஸ் பெறப்பட்டது? எவ்வளவு அட்வான்ஸ் திரும்ப கொடுக்கப்பட்டது? என்ற விவரங்கள் தெரிவிக்கவில்லை. எனவே கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தானதற்கும், கிரிசில்டா கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று வாதிடப்பட்டது.
இன்று ஹைகோர்ட் தீர்ப்பு
இதையடுத்து இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி என். செந்தில்குமார், தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இந்தநிலையில், இந்த வழக்கில் இன்று நீதிபதி செந்தில் குமார் தீர்ப்பு தந்துள்ளார்.. அதில், ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications