பிக் பாஸ்க்கு பிறகு போஸ்ட் போட்டு வம்பில் மாட்டிய மாயா! “அந்த” வார்த்தைக்காக திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு பிறகு போட்டியாளர்கள் எல்லோரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கின்றனர். அதிலும் சில போட்டியாளர்கள் அடுத்தடுத்து போஸ்ட் போட்டுக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மாயா போட்ட போஸ்ட் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த பதிவில் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு அதிகமான சப்போர்ட் கொடுத்து வருவதாகவும் ஆனால் தனக்காக வேறு யாரையும் ரசிகர்கள் காயப்படுத்தக் கூடாது என்றும் தன்னை வெறுப்பவர்களை வெறுக்க வேண்டாம் வேணும்னா காதலிங்க என்று மாயா பதிவு வெளியிட்டிருக்கையில் அதற்கு நெட்டிசன்கள் பலரும் திட்டி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

 Maya got into trouble after posting a post after Bigg Boss

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த வாரத்தோடு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து சண்டை சச்சரவுகளோடு அடிக்கடி பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டு இருந்த இந்த சீசன் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும் இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் குறித்து இணையத்தில் அதிகமானோர் இப்போதும் திட்டி தீர்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் தான் அதிகமாக போட்டியாளர்களுக்குள் வன்மம் நிறைந்திருந்தது. போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து கொண்டு ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக் கொள்வதும் புறம் பேசுவதும் தான் அதிகாரமாக இருந்தது. இதனாலேயே இந்த சீசன் அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் இந்த சீசன் முடிவுக்கு வந்த பிறகும் போட்டியாளர்கள் சிலர் தங்களுக்குள் இருக்கும் வன்மத்தை மறைத்து வெளியே பூசி மொழுகி பாசமாக இருப்பது போன்று நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் ரசிகர்கள் அதையும் பங்கம் பண்ணி வருகிறார்கள். அந்த வகையில் இப்போது மாயா இணையத்தில் நெட்டிசன்களிடம் மாட்டி இருக்கிறார்.

அவர் தன்னுடைய twitter பக்கத்தில் நீண்ட ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் மை டியரஸ்ட் maya squad எல்லோருக்கும் என்னுடைய நன்றி. நீங்க என் மீது இவ்வளவு பாசம், அன்பு வச்சுருப்பீங்கன்னு நினைக்கல. என்னை நீங்க அன்பு மழையில நனைய வச்சுட்டீங்க. எனது மரியாதையும் நிபந்தனை அற்ற அன்பும் இறுதி வரை என் இதயத்தில் இருக்கும். நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து அந்த 105 நாட்கள் மரண படுக்கையிலும் மறக்காது.

உங்களுக்காக தான் வேலை பார்க்க போறேன். எல்லாமே உங்களுக்கு தான்... எனக்காக நீங்க நிறைய ஃபைட் பண்ணி இருக்கீங்க, அதுக்காக கடைசிவரை நன்றியோடு இருப்பேன். எனக்கு ஒரே ஒரு ஆசை. என் ரசிகர்களாக நீங்கள் இருந்தால் என்னை மட்டும் ரசியுங்கள், மற்றவர்களையும் ரசியுங்கள் ஆனால் வேரு ஒருவரை வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவர்களாக இருந்தாலும் கூட அவர்களை வெறுக்க வேண்டாம். வேணும்னா காதலிங்க..

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்... போய் நம்ம வேலையை பார்க்கலாம். மீண்டும் சந்திப்போம்! அன்புடன்... என்று, மாயா வெளியிட்ட பதிவுக்கு நெட்டிசன்கள் அதிகமாக மாயாவை கலாய்த்து போஸ்ட் போட்டிருக்கின்றனர். ஆனால் கடந்த சீசனில் போட்டியாளராக வந்த தனலட்சுமி மாயாவிற்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+