மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளுக்குள் ஏற்பட்ட அடிதடி.. நாற்காலிக்கு நடந்த சண்டை
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் சீரியல் நடிகைகளுக்குள் ஏற்பட்ட அடிதடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூட்டிங் ஸ்பாட்டில் ஒன்றாக சில நடிகைகள் இருக்கும்போது அங்கிருந்த சோபாவில் இடம் கொடுக்காத காரணத்தால் சண்டை ஏற்பட்டதாம்.
அதோடு சீரியல் நடிகையான சசிலயா தாக்க பட்ட வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அதற்கு அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக நடிகை லயா நடித்து வருகிறார். லயா ஆரம்ப காலகட்டத்தில் டிக் டாக் செயலியில் தத்துவங்கள், கவிதைகளை இலங்கை தமிழ் கலந்து அழுத்தமாக பேசிக் கொண்டிருப்பார்.
இதனாலையே இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்தனர். அதுபோல டிக் டாக் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதிகமான ரசிகர்களையும் கவர்ந்திருந்தார். அதோடு நடிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்த லயாவிற்கு சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் வில்லியாக தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் லயா தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
சினிமாவில் கூட பரகாசுரன் என்ற திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அதுபோல மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இவர் வில்லியா அல்லது பாசிட்டிவ் கேரக்டரா என்று யூகிக்க முடியாத வகையில் தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
அதாவது சசிலயா நடித்துக் கொண்டிருக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலுக்கான சூட்டிங் சென்னை தண்டகத்தில் உள்ள நாச்சியார் ஹவுசிங்கில் வைத்து நடைபெற்றுக் கொண்டிருந்திருக்கிறது. அப்போது சக நடிகைகளோடு ஒரே சோபாவில் சசி லயா அமர்ந்திருந்த போது சீனியர் நடிகை ஒருவர் இருக்க இடம் கேட்டு சண்டையிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அப்போது சசி லயாவிடம் அந்த சீரியல் நடிகை சீனியர் இருக்கும்போது இருக்க இடம் தராமல் இப்படி அமர்ந்திருக்கலாமா என்று கேள்வி கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. அதுபோல தான் தாக்கப்பட்டது குறித்து சசிலயா இயக்குனரிடம் புகார் கொடுத்து இருந்தாராம். சசி லயாவும் அவரை தாக்கிய சீனியர் நடிகையும் தங்களுடைய செல்போனில் படம் பிடித்தபடியே சண்டை போட்டு இருக்கின்றனர்.
இவர்களுக்குள்ளே நடைபெற்ற சண்டையில் சீரியல் இயக்குனர் புகுந்து சமாதானம் செய்து வைத்திருக்கிறார். அதற்கு சசிலயா படப்பிடிப்பில் தன்னை ஜூனியர் நடிகை போல நடத்துவதாகவும், இருக்க இடம் கொடுக்கவில்லை என்பதற்காக நடிகை ஆர்த்தி ராவ் தன்னை பாய்ந்து தாக்கியதாகவும் பிரபல செய்தி சேனல் ஒன்றில் பேட்டி அளித்திருக்கிறார். ஆனால் இது குறித்து இரண்டு தரப்பிலிருந்து இதுவரைக்கும் காவல்துறையில் கம்பளைண்ட் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் சில நாட்களுக்கு முன்பு சசிலயா வெளியே சென்று இருந்த போது அங்கு திருநங்கைகள் ஒரு சிலர் சசிலயாவிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அதைத்தொடர்ந்து இப்போது சீரியல் சூட்டிங் ஸ்பாட்டிலும் சசிலயாவுக்கு அடுத்த பிரச்சனை வந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications