Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐயோ தியேட்டர்ல பார்க்காம தப்பு பண்ணிட்டோமே.. ஓடிடியில் மெய்யழகன் பார்த்துவிட்டு உருகும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான 'மெய்யழகன்' திரைப்படம், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் அக்டோபர் 25ம் தேதி வெள்ளிக்கிழமை (இன்று) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம், கடந்த மாதம் 27-ஆம் தேதி திரைக்கு வந்தது. சூர்யா-ஜோதிகா தம்பதி தயாரித்த இந்த படம், திரையரங்குகளில் வெளியான போது நீளம் காரணமாக சில காட்சிகள் நீக்கப்பட்டிருந்தன. ஆனால், ஓடிடி தளத்தில் முழுமையான படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இங்கும் கத்தரி போட்ட காட்சிகள்தான் வந்தன. ஆனால் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றுள்ளது. கட் செய்த காட்சிகளையும் படத்தில் வையுங்கள் என கேட்கும் அளவுக்கு பாராட்டுகளை பெற்று வருகிறது என்றால் பாருங்களேன்.

meiyazhagan ott

திரையரங்குகளில் நீளமாக இருப்பதாக சிலர் நெகட்டிவிட்டியை பரப்பியிருந்தனர். ஆனால், ஓடிடியில் பார்த்த பலரும் படத்தை அருமையாக உள்ளது, ஃபீல்குட் மூவி என புகழ்ந்து தள்ளுகின்றனர். குறிப்பாக, படத்தின் உணர்வுபூர்வமான காட்சிகள் மற்றும் பாச உறவுகளை சித்தரிக்கும் விதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதற்கு முன்னர், மாரி செல்வராஜ் இயக்கிய 'வாழை' திரைப்படம் திரையரங்குகளில் பாராட்டப்பட்டாலும், ஓடிடியில் விமர்சனங்களை பெற்றது. ஆனால், 'மெய்யழகன்' படத்தில் இந்த நிலைமை மாறி உள்ளது. பலரும் இந்த படத்தை 'இன்னொரு அன்பே சிவம்' என புகழ்கின்றனர்.

meiyazhagan ott

ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள 'மெய்யழகன்' படம், பிரேம்குமார் இயக்குனருக்கு மீண்டும் ஒரு வெற்றியை தந்துள்ளது. இப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. எனவே முதலுக்கு மோசமில்லைதான். ஆனால் ஓடிடியில் இது பல மடங்கு புகழ்ந்து தள்ளப்படுகிறது. ஒரு சில யூட்யூப் விமர்சகர்களின், நெகட்டிவ் கமெண்ட் காரணமாக தியேட்டருக்கு போய் படத்தை பார்க்காதவர்கள் இப்போது வருத்தப்பட்டு பதிவுகளை போடுவதை பார்க்க முடிகிறது.

சித்தப்பா மகளான தங்கையின் காலில் கொலுசு போடும் காட்சியை தியேட்டரில் வந்தபோது கிரிஞ் சீன் என சிலர் நெகட்டிவாக கேலி பேசினார்கள். ஆனால் இப்போது பார்த்த அனைவரும் தங்கள் கண்களில் கண்ணீர் வந்ததாக தெரிவித்துள்ளனர். வெட்கமில்லாமல் அழுதேன் என்று ஒரு நெட்டிசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

meiyazhagan ott television
meiyazhagan ott television

ஒரு நெட்டிசன், ஐயோ தப்பு செய்துவிட்டோமே என்று நினைத்து இப்போது தியேட்டருக்கு ஓடிப் போய் படம் பார்த்ததாக டிக்கெட்டின் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். "ஒரு நல்ல படம் என்ன செய்யும்? OTT யில் பார்த்து முடித்து அதன் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் இதை தியேட்டரில் பார்க்காமல் விட்ட குற்ற உணர்வை போக்கும் வண்ணம் கடன் வாங்கி டிக்கெட் எடுத்து தானாகவே உங்களை திரையரங்கிற்கு அழைத்து செல்லும்" என்று தனது உணர்வுகளை அவர் பதிவாக வெளியிட்டுள்ளார்.

மற்றொரு நெட்டிசன், "பேரன்பு ஒருவனை என்ன செய்யும்? அடித்துத் துவைத்து, உயிரை உருவி, உலர்த்தி, மனதில் இருக்கும் அத்தனை மாசு மரு நீக்கி, உன்னைச் சலவை செய்து புது மனிதானாய்த் தரும்!" என்று மெய்யழகன் திரைப்படத்தை புகழ்ந்துள்ளார்.

meiyazhagan ott

ரசிகன் என்ற பெயரிலான நெட்டிசன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், இப்படி பாராட்டியுள்ளார்: தியேட்டரிலேயே பார்க்க நினைத்தது. நம்மாளுகதான், ஓவர் செண்ட்டிமென்ட், ரெண்டு குடிகாரனுக நைட் ஃபுல்லா அனத்துறதுதான் கதைன்னு சொல்லி எதிர்பார்ப்பே இல்லாம இருந்தது. Waiting for OTT and watched... இயக்குனர் ப்ரேம்குமார் கைல நாலைஞ்சு முத்தங்கள் கொடுக்கணும்னு தோணுது. Spoiler லாம் இல்லை. நமக்குத் தெரிஞ்ச கதைதான். நம்ம வாழ்க்கை நமக்குத் தெரியாத Superman, superstar படங்களை ரசிக்க, நம்மால் பண்ணமுடியாத விசயங்களை ஹீரோ செய்யும் ஃபேண்டஸிக்காக ரசிக்கிறோம். அந்தமாதிரி இந்தப்படமும் ஒரு வகைல ஃபேண்டஸிதான்.

என்ன ரொம்ப அதிகமா இல்லை. நம்ம நார்மல் வாழ்க்கையை விட ரெண்டு சென்டிமீட்டர் அதிகமான ஃபேண்டசிதான் படம். இப்படி எல்லாருமே நல்லவங்களா இருக்கமுடியுமான்னு யோசிக்கத் தேவையில்லை. ஓரளவு மனசாட்சியோட வாழும் எல்லாரும் அரவிந்தசுவாமி, கார்த்தி கேரக்டர்கள்ள நம்மை எளிதாப் பொருத்திப் பார்க்கலாம். அந்த ரெண்டு செமீ முடியாத ஃபேண்டஸிக்குக் காரணம் இப்ப இருக்க பரபரப்பான வாழ்க்கைச் சூழல் என்று பொய் காரணங்களைச் சொல்லிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆக மொத்தம், எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது மெய்யழகன் திரைப்படம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+