Minnale Serial: வசனத்தில் கவனம் வேணாமா?... யாரு சீரியல் இது...!
சென்னை: சன் டிவியின் மின்னலே சீரியல் ராதிகா சரத்துக்குமார் நிறுவனமான ரடான் டிவியோட தயாரிப்பு.
இந்த சீரியலில் கதையின் போக்கும், வசனங்களும் கிரியேட்டிவ் ஹெட் ராதிகா சரத்குமார் என்று சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று முன்பே சொல்லி இருந்தோம்.
இன்னும் கூட அப்படித்தான் இருக்கிறது. இதில் ராதிகா சரத்குமாரின் தங்கை நிரோஷா நடித்து வருகிறார்.

இரட்டை வேடம்
கதையில் நிரோஷாவுக்கு திடீரென்று இரட்டை வேடம் கொடுத்து சென்னை பாஷை பேசும் பெண்ணாக ஒரு கதாபாத்திரம் கொடுத்த இருக்கிறார்கள். உடன் பிறந்த அண்ணன் குடும்பத்தை கெடுப்பது, அண்ணன் பொண்ணு ஷாலினியை தனது பையனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கவில்லை என்று அவள் காதலிச்ச மாப்பிளையை கார் ஏத்தி கொல்ல நினைப்பது இப்படி இருந்த நிரோஷாவின் கதாபாத்திரம் திருந்தி விடுகிறது.

இன்னொரு கதாபாத்திரம்
இன்னொரு கதாபாத்திரம் வந்து ட்யூப்ளிகேட்டாக நிரோஷாவின் கமலா கதாபாத்திரத்தில் நடிக்க வீட்டுக்குள் வந்திருந்தாலும், அதே போன்றே கெடுதல் வேலைகளையே இந்த கதாபாத்திரமும் செய்கிறது. சீரியல் முழுக்க இப்படித்தான்..

ரடானின் சீரியல்
ரடானின் மதிய நேர சீரியல் என்றால் கூட அது சூப்பர் ஹிட்டான சீரியலாகத்தான் இதுவரை இருந்திருக்கிறது. தாமரை போன்ற சில சீரியல்களை சொல்லலாம். ஆனால், இந்த லிஸ்டில் கொஞ்சமும் இடம் பிடிக்க முடியாதபடி இருக்கிறது ரடானின் மின்னலே சீரியல்.

பேசும் வசனங்கள்
சீரியலில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறது. "ராஜேஷ் அம்மா அடிச்சே அடிச்சுட்டாங்க'ன்னு பொருள் இல்லாம கதாபாத்திரங்களை வசனம் பேச வச்சு நடிக்க வச்சு இருக்காங்க. இத்தனை நாள் திட்டுவாங்க.. இன்னிக்கு ஒரு படி மேலே போயி அடிச்சுட்டாங்கன்னு கூட புரியற மாதிரி எழுத முடியலை..இப்படி நிறைய சொல்லலாம்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications