உன் பேர் சொல்ல ஆசை.. “மின்சார கண்ணா” பட நடிகையை நினைவு இருக்கா? இப்போ இப்படி மாறிட்டாங்களே?
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா என்ற திரைப்படத்தில் உன் பெயர் சொல்ல ஆசை என்ற பாடல் மூலமாக பலருடைய மனதை கவர்ந்த மோனிகா காஸ்ட்லினோ இந்த திரைப்படத்தோடு காணாமல் போய்விட்டார்.
இந்த நிலையில் இவரை மீண்டும் அதிகமான 90ஸ் கிட்ஸ்கள் இப்போதும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் ஒரே திரைப்படத்தோடு காணாமல் போய் தற்போது சின்னத்திரையில் மோனிகா கலக்கிக் கொண்டிருக்கிறார். பற்றி விரிவான தகவல்களை பார்க்கலாம்.
பொதுவாக நடிப்பு துறையில் ஒரு சிலருக்கு மட்டும்தான் நடிப்பு வாய்ப்பு பல வருடங்களாக கிடைத்திருக்கிறது. ஒரு சில நடிகர்களோ, நடிகைகளோ முதல் திரைப்படத்தில் ஆக ஓஹோ என்று சொல்லும் அளவிற்கு புகழ் உச்சத்தில் அடைந்து பிறகு காணாமல் போய் விடுகிறார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை மோனிகா காஸ்ட்லினோ.

90 கிட்ஸ்களின் பேவரைட் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் இப்போதும் அவர்களுடைய whatsapp ஸ்டேட்டஸ்களில் இடம் பிடித்து விடுவது வாடிக்கைதான். அந்த வகையில் பலருடைய ஃபேவரைட் பாடல்களாக மின்சார கண்ணா திரைப்படத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் இருக்கும். அதிலும் நடிகை ரம்பாவுக்கு போட்டியாக அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யை காதலிக்கும் ஐஸ்வர்யா கேரக்டரில் மோனிகா நடித்திருப்பார்.
மின்சார கண்ணா திரைப்படமே பலருடைய ஃபேவரைட் திரைப்படம் தான். நடிகர் விஜய்யை வித்தியாசமான கோணத்தில் அந்த திரைப்படத்தில் பார்க்க முடியும். ஒரு காமெடி நடிகராகவும், காதல் என்று வந்துவிட்டால் அதில் கலக்கல் கண்ணன் ஆகவும் ஃபைட்டிலும் டப் கொடுத்து அசத்தி இருப்பார்.
இந்த நிலையில் மின்சார கண்ணா திரைப்படத்தில் நடிகை குஷ்புவுக்கு தங்கச்சியாக நடித்த மோனிகா மும்பையை தான் பூர்வீகமாக கொண்டவராம். இவருடைய திரை வாழ்க்கை ஹிந்தி சினிமாவில் தான் ஆரம்பித்திருக்கிறார். அதை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு காலியா என்ற ஹிந்தி படத்தின் மூலமாக முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார். அதற்கு பிறகு தான் மோனிகா தமிழில் அறிமுகமாகி இருக்கிறார்.

முதல் முதலாக தமிழில் நடித்த மின்சார கண்ணா திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்திருந்தாலும் அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் இருந்திருக்கிறது. இந்த நிலையில் இவர் மீண்டும் ஹிந்தி சினிமாவிற்கு திரும்பி இருக்கிறார். அப்போது பல ஹிந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்திருக்கிறார்.
அந்த நேரத்தில் தான் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ராகேஷ் சிங்க் என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஒரு வருடத்திற்குள்ளே இவர்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. விவாகரத்துக்கு பிறகு திரைப்பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்காததால் சீரியல் பக்கம் திரும்பி இருக்கிறார்.
திரைப்படங்களில் வாய்ப்பு இல்லாத நடிகைகள் பலர் சீரியல் பக்கம் திரும்பும் வகையில் இவரும் அந்தப் பக்கமாக திருப்பி இப்போது பல ஹிந்தி சீரியல்களில நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மோனிகா எப்போது தமிழுக்கு வருவார் என்று ஆர்வத்தோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications