10 ரெட் புல் பீர் கேட்ட மிரட்டல் நாயகன்! ரூ.4 லட்சம் டூ 2 கோடிக்கு எகிறிய தோட்டா ஜீவன்: பிரபலம் ஓபன்
சென்னை: ஆரம்பத்தில் தயாரிப்பாளர்கள் செய்யும் உதவியை பலரும் நினைப்பதில்லை.. மார்க்கெட் இல்லாத நேரத்திலும் கைதூக்கி விடும் தயாரிப்பாளர்களை பற்றி எந்த நடிகர்களும் நினைப்பதில்லை.. அட்வான்ஸ் பணத்தையும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் திருப்பி தருவதில்லை.. நடிகர்கள் செய்யும் அட்டகாசங்களால், ஒரு தயாரிப்பாளர் எதுக்காக செலவழிக்கிறார் என்பதே கணக்கில்லாமல் போய்விடுகிறது என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு மனக்குமுறலை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் வலியையும், வேதனையையும் சோஷியல் மீடியாக்களில் பதிவு செய்து வருபவர் பாலாஜி பிரபு.. ஆஸ்கார் மூவிஸ் பிரபல தயாரிப்பாளரின் மகனாகவும் மட்டுமல்லாமல், தானே ஒரு தயாரிப்பாளராகவும் உள்ளதால், தயாரிப்பாளர்களின் கஷ்டத்தையும், நெருக்கடிகளையும், வேதனையுடன் கூறிவருகிறார். அந்தவகையில், பட தயாரிப்பின்போது நடந்த அனுபவத்தின் வலியை மீண்டும் விரிவாகவே கூறியிருக்கிறார்.

MGR TV Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை பல பேர் உணர்வதில்லை.. மிரட்டல் நாயகன்" ஜீவன் பற்றி சொல்லியாக வேண்டும்.. 2005-ல தோட்டா என்ற படத்தை நாங்கள் தயாரித்தோம். அந்த நேரத்தில் ஜீவனுக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி ஆரம்பித்தோம்.
மூன்று பேருக்குமே மார்க்கெட் இல்லை
அவருக்கு அப்போது மார்க்கெட் எதுவுமே இல்லை. யூனிவர்சிட்டி என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.. அந்த படம் பெரிய தோல்வி.. காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்து ஹிட்டாகியிருந்தது.. இதையடுத்து, ஜீவனுக்கு 1 லட்சம் அட்வான்ஸ் தரப்பட்டு, ஹீரோவாக புக் செய்தோம்.
அதேபோல, இந்த படத்தை இயக்கிய டைரக்டர் செல்வா, ஹீரோயின் பிரியாமணி, ஜீவன் என மூன்று பேருக்குமே அப்போது மார்க்கெட் இல்லை.. ஆனால் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே, நான் அவன் இல்லை என்ற ஹிட் படத்தை செல்வா தந்தார்.. திருட்டு பயலே என்ற ஹிட்டை ஜீவன் தந்தார்.. பருத்தி வீரன் என்ற ஹிட்டை பிரியாமணி தந்தார்.. தோட்டா படம் முடிவதற்குள் மூன்று பேருமே பெரிய வெளிச்சத்துக்கு வந்துவிட்டார்கள்..
2 கோடி சம்பளம்
இதனிடையே, 80 லட்சம் முதலீடு செய்துவிட்டு, ஒருசில காரணங்களால் தோட்டா படம் நின்றது.. படங்கள் திடீரென நின்றுபோவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.. கமல் நடித்து, லைகா தயாரித்து, ஷங்கர் டைரக்ட் செய்த இந்தியன் 2 படமே நிற்கவில்லையா? எனினும், சிறிய இடைவெளி விட்டு, மீண்டும் தொடங்கினோம்..
ஆனால், அதற்குள் 2 கோடி சம்பளம் எங்களிடம் கேட்கிறார் ஜீவன்.. வெறும் 4 லட்சத்துக்கு சம்பளத்துக்கு அக்ரிமென்ட்டும் போட்டுவிட்டு, 2 கோடி தந்தால்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்..
ஜீவனுக்கு வேறு சம்பளம்
தயாரிப்பாளர் போடும் அக்ரிமெண்ட்டை பலரும் மதிப்பதில்லை. அதனால், அந்த அக்ரிமெண்ட்டை எடுத்துக் கொண்டு, தயாரிப்பாளர் சங்கத்தை நாங்கள் அணுகினோம். அதற்கு தயாரிப்பாளர் சங்கம், ஜீவனுக்கு வேறு ஒரு சம்பளத்தை நிர்ணயித்து தந்தது. அப்படியானால் எதற்கு அக்ரிமெண்ட் போடுகிறோம்? மார்க்கெட் இல்லாதவர்களை வைத்து, ரிஸ்க் எடுத்து படம் எடுக்கும்போது, அதற்கு ஒத்துழைக்க வேண்டுமா? குழிதோண்டி புதைக்கணுமா?
5 லட்சம் சம்பளம் பேசினோம்.. ஆனால், நான் அவன் இல்லை ஓடியதுமே உடனே 50 லட்சம் கேட்கிறார். வாழ்க்கை தந்தவர்களை,கை தூக்கி விடுபவர்களை பற்றி நினைப்பதே கிடையாது..
எத்தனையோ நடிகர்களிடம், அட்வான்ஸ் தந்துவிட்டு, அதை வாங்க முடியாமல், வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல், பல பல தயாரிப்பாளர்கள் தவிக்கிறார்கள்.. பல நடிகர்கள் தங்களது அட்வான்ஸ் பணத்தை தயாரிப்பாளர்களுககு திருப்பி தருவதே இல்லை..
கே பாலு தயாரிப்பாளர் குடும்பம் நிலைமை
கேபி பிலிம்ஸ் பாலு என்ற தயாரிப்பாளரின் அட்வான்ஸ் பணம், பல நடிகர்கள், நடிகைகளிடம் இன்றும் தேங்கி கிடக்கிறது.. கொரோனா நேரத்தில் உடலநலம் பாதித்து அவர் இறந்தே வீட்டார்.. ஆனாலும்கூட, அந்த தயாரிப்பாளரின் குடும்பத்துக்கு அந்த பணத்தை திருப்பி தரணுமா? வேண்டாமா? வந்தவரைக்கும் லாபம் என்றுதான் நினைக்கிறார்கள். 2 படம் ஓடினாலே, உலகத்துக்கே சூப்பர் ஸ்டார் என்று நினைக்கிறார்கள்.. அவர்களது ஆட்டம், பாட்டம் வேற மாதிரியாகிவிடுகிறது" என்று நொந்து சொல்கிறார்.
சமீபத்தில் வேறொரு யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த பாலாஜி பிரபு, நடிகர் ஜீவன் பற்றி பேசும்போது, 'இந்த ஷூ வாங்கி தந்தால் நன்றாக இருக்கும், இந்த ஜீன்ஸ் வாங்கி தந்தால் நல்லா இருக்கும் என்று ஆரம்பத்தில் எங்களிடம் வேண்டுகோள் விடுத்து கேட்டு கொண்டிருந்தவர், திடீர்னு, "இந்த பிராண்டில் இது வேண்டும்" என்று ஆர்டர் போட ஆரம்பித்துவிட்டார். தினமும் 10 ரெட் புல் கேட்பார்.. ஒருநாளைக்கு 2 ரெட் புல் மேல் சாப்பிடக்கூடாது என்பார்கள்.. ஆனால், 10 ரெட் புல் வந்தாக வேண்டும் என்று எங்களை தொந்தரவு செய்தார்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications