முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா.. திருமண நாளில் டமாகா!
சென்னை: செந்தில் ஸ்ரீஜா தம்பதி முதல்முறையாக தங்களுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் பிரபலமானவர்கள் செந்திலும் ஸ்ரீஜாவும். இவர் உண்மையில் காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தொடருக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை சீரியலில் நடித்தனர்.

மேலும் கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை என்ற வெப் சீரிஸிலும் அவர்கள் இருவருமே நடித்து வந்தனர். இந்த சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வெப்சீரிஸ் 3 சீசன்கள் ஓடியது. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன பிறகு கடந்த ஆண்டு ஸ்ரீஜா கர்ப்பம் ஆகியுள்ளார்.
அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டோக்களை செந்தில் தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் மகிழ்ச்சியாக பதிவு செய்திருந்தார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். செந்திலுக்கு சீரியலுக்கு பிறகு சினிமா வாய்ப்புகளும் வந்தன.
தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, கண் பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீஜா கேரளாவை சேர்ந்தவர். இவர் 30- க்கும் மேற்பட்ட சீரியல்களையும் வெப் சீரிஸ்களையும் நடித்துள்ளார். இவர்களுக்கு சரவணன் மீனாட்சிதான் திருப்பு முனையை அளித்தது. இவர்கள் நிஜ வாழ்வில் இணைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில் இருவரும் கடந்த 2014ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்கள். 2014 இல் திருமணம் ஆனாலும் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் இருந்த நிலையில் அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகும் நிலையில் குழந்தையின் முகத்தை சமூகவலைதளங்களில் காட்டியுள்ளனர்.
அந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் குழந்தை பாரப்பதற்கு ஸ்ரீஜா மாதிரியே இருக்கிறது என சொல்கிறார்கள். மேலும் குழந்தை சிறப்புடன் வளர வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள். அந்த போஸ்ட்டில் 9ஆவது திருமண நாளில் கைகளில் குழந்தை. இந்த ஆண்டு திருமண நாள் சிறப்பானதாகியுள்ளது. இந்த ஆண்டு திருமண நாளுக்கு கிடைத்த பரிசு. உங்களின் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications