"நடிப்பை விட்டு விலகுகிறேன்" எல்லோரும் ஏமாத்துறாங்க! எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மோகன் வைத்யா உருக்கம்
சென்னை: பிரபல இசைக் கலைஞரும், நடிகருமான மோகன் வைத்யா தனது மனைவி மறைவுக்குப் பிறகு தனிமையில் தவிப்பதாகவும், நடிப்புத் துறையில் சந்தித்த ஏமாற்றங்கள் காரணமாக மன உளைச்சலில் இருப்பதாகவும் ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார். மன உளைச்சல் காரணமாக சென்னையிலிருந்து விலகிச் செல்ல முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை - ஆழ்ந்த சோகம்
பொதுவாக கனவனோ மனைவியோ இறந்து விட்டால் அவர்களுடைய துணை மீதம் உள்ள வாழ்க்கையில் வாழ்வதற்கு அதிகமான பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதிலும் தங்களுக்கு பிடித்தமான துணைவி இந்த உலகத்தில் இல்லாத போது ஒவ்வொரு நாளும் நரக வேதனையோடு தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. அது போல தான் தானும் தன்னுடைய மனைவி பிரிவால் சோகத்திலும் இருப்பதாக மோகன் வைத்யா எமோஷனலாக பேசியிருக்கிறார்.
தனது மனைவி விபத்தில் இறந்த பிறகு அவர் அடைந்த ஆழ்ந்த துயரத்தையும் அதை சமாளிப்பதில் உள்ள சிரமத்தையும் மோகன் வைத்யா பகிர்ந்து கொண்டார். "என் மனைவியுடன் கழித்த ஒவ்வொரு நிமிடமும் இன்றும் என் நினைவில் உள்ளது" என்று கூறிய மோகன் வைத்யா "அவளை அலங்கரிப்பது கூந்தல் கோதி விடுவது பூ வைப்பது போன்ற சிறிய விஷயங்கள் கூட நினைவில் பசுமையாக உள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அவரது நினைவுகள் நிறைந்த வாழ்க்கையில் மற்றொருவரை இணைப்பது நியாயமில்லை என்பதால் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்றும் மோகன் வைத்யா கூறினார். தனது மகனை சார்ந்து வாழ விரும்பவில்லை என்றும் தனித்து வாழ்வதையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
நடிப்புத் துறையில் ஏமாற்றங்கள்
மோகன் வைத்யா நடிப்புத் துறையில் எதிர்கொண்ட ஏமாற்றங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். "பலமுறை ஆடிஷனுக்கு அழைத்து பின்னர் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் புறக்கணித்த சம்பவங்கள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன" என்றும் அவர் கூறினார். இந்த தொழில்முறை அற்ற தன்மை தன்னை மிகவும் பாதித்ததாக அவர் குறிப்பிட்டார். நடிப்புத் துறையில் ஏற்பட்ட இந்த எதிர்மறை அனுபவங்கள் காரணமாக மோகன் வைத்யா திடீர் முடிவை எடுத்துள்ளார். நடிப்பை முழுமையாக நிறுத்திவிட்டு மீண்டும் தனது இசைப்பயணத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
சென்னையில் இருந்தால் மீண்டும் நடிப்பு வாய்ப்புகளைத் தேடும் எண்ணம் வரும் என்பதால் சென்னையிலிருந்து வெளியேறி வேறு ஒரு இடத்தில் தனது இசைப் பள்ளியைத் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்
சமீபத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'எதிர்நீச்சல்' சீரியலில் தனது கதாபாத்திரம் திடீரென இறந்து போனது குறித்துப் பேசிய மோகன் வைத்யா "தனது கதாபாத்திரம் இறக்கப் போவது குறித்து இயக்குநர் தன்னிடம் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை" என்று கூறினார். "டப்பிங் ஸ்டுடியோவில் ஸ்கிரிப்டைப் பார்த்தபோதுதான் தனக்கு இந்த உண்மை தெரியவந்ததாகவும் இதனால் தான் முதலில் மிகவும் வருத்தமடைந்ததாகவும்" குறிப்பிட்டார். இருப்பினும் தனது உணர்திறன் காரணமாக இயக்குநர் தன்னை வருத்தப்பட வைக்க விரும்பவில்லை என்பதைப் பின்னர் புரிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications