ஒரே நாளில் ஃபேமஸான பிரவுன் பியூட்டியா இது! ஐஸ்வர்யா ராய் ரேஞ்சுக்கு மாறிட்டாங்களே! இதுதான் விஷயமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தர பிரதேச மாநிலத்தில் கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்று வந்த மோனலிசா போஸ்லே சமூக வலைத்தளம் மூலமாக பிரபலமடைந்ததை தொடர்ந்து இப்போது நடிகை ஐஸ்வர்யா ராய் போல அவர் கெட்டப் போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் சமூக வலைத்தளத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. எல்லோர் கைகளிலும் செல்போன் இடம் பிடித்திருக்கும் நிலையில் கண்ணில் பார்ப்பது எல்லாம் செல்போனில் படம் எடுப்பவர்கள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

television monalisa

அதிலும் தான் பார்த்த விஷயத்தை பலபேர் பார்க்கும் வகையில் சோசியல் மீடியாவில் உடனே போஸ்ட் போடுகிறார்கள்‌ அதுபோல காலை எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை என்னவெல்லாம் செய்கிறோமோ அத்தனையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவது சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஒரு சிலர் அத்துமீறி அந்தரங்க விஷயங்கள் கூட பகிர்ந்து வருகிறார்கள்.

அதுபோல சோசியல் மீடியாவில் வீடியோ போடுபவர்களை அதிகமானோர் ஃபாலோ பண்ணுவதால் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது. வருமானத்திற்காக சிலர் அடுத்தவர்களைப் பற்றி கவலைப்படாமல் கூட சிலர் போஸ்ட் போட்டிருக்கிறார்கள். அதுபோலத்தான் சில நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் யூடியூபர் ஒருவர் வெளியிட்ட புகைப்படத்தால் மோனலிசா என்ற பெண் பட்டி தொட்டிகள் எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார்.

கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்று வந்த மோனலிசாவின் கண்கள் மற்றும் வசீகரமான தோற்றத்தை பார்த்ததும் பலர் புகைப்படங்களை எடுத்து குவிக்க தொடங்கி விட்டனர். இதை அடுத்து அவருடைய புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலான நிலையில் அவரோடு புகைப்படங்கள் எடுப்பதற்காகவே பலர் அந்த கும்பமேளாவில் அவரை தேடி அலைந்தனர்.

television monalisa

ஆனால் கும்பமேளாவில் தேவையில்லாமல் தன்னுடைய மகளால் பதட்டம் ஏற்படுகிறது என்று அவருடைய பெற்றோர் அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டனர். அதற்குப் பிறகு மோனலிசாவுக்கு பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பை பிரபல இயக்குனர் வழங்கியதாக கூறப்பட்டது.

அதுபோல மோனலிசா தன்னுடைய youtube சேனலிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். கிராமத்தில் தான் சமைக்கும் சமையல் பற்றிய வீடியோக்கள் தன்னுடைய ஊரில் சிறுவர்களின் நடனம் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

television monalisa

தற்போது மோனலிசா பியூட்டி என்ற பேஸ்புக் பக்கத்தில் மோனலிசாவின் புது வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் மோனலிசா அழகு நிலையம் சென்று தன்னை அழகுபடுத்திய காட்சிகள் இருக்கிறது. அதோடு அவருடைய லேட்டஸ்ட் வீடியோவில் அவரை பார்ப்பதற்கு பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கிறார்.

இதை பார்த்ததும் ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாக ஒரு ஆள் வந்தாச்சு என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுக்கிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் இதுபோல சாதாரண மக்களுக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் கருத்து கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+