Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதைவிட வேற என்ன வேணும்.. விஜய்யோடு எடுத்த போட்டோவை வெளியிட்டு மோனிஷா நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி மற்றும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த மோனிஷா பிளஸ்சி விஜய் நடிக்கும் 69ஆவது திரைப்படத்தில் தானும் நடிக்க போகிறேன் என்று விஜய்யோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.

பல பிரபலங்கள் சின்ன துறையிலிருந்து வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக மாறி கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கோமாளியாக வந்த மோனிஷா பிளஸ்சி இணைந்திருக்கிறார். இவர் சமீபத்தில் சன் டிவியில் முடிவடைந்த டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருந்தார்.

Television Monisha blessy

ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்திருந்தார். இப்போது விஜயின் கடைசி படம் என்று சொல்லும் தளபதி 69 ஆவது படத்தில் முக்கிய கேரக்டரில் தானும் நடிக்கப் போவதாக மகிழ்ச்சியோடு ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு இரண்டு லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த பலர் மக்கள் மனதில் பதிந்து விடுகிறார்கள் அதில் ஒருவர் தான் மோனிஷா. இவர் நடிகர் மைம் கோபியோடு இணைந்து மைம் மேஜிக் செய்தது பலரையும் கவர்ந்து இருந்தார். அதுபோல சார்லி சாப்ளின் கேரக்டராக மாறியது இவரை பார்த்து ரசிகர்களை வியக்க வைத்தது. அது மட்டும் இல்லாமல் தெய்வத்திருமகள் விக்ரம் கதாபாத்திரத்திலும் இவர் பலரையும் வியக்க வைத்திருந்தார்.

இந்த நிலையில் தான் மோனிஷா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியிலும் அவர் சிறப்பாக செய்து இருந்தார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்த நேரத்தில் இப்போது நடிகர் விஜய் நடிக்கும் 69 வது படத்திற்கான பட பூஜை சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அதில் மோனிஷாவும் கலந்து கொண்டார்.

அப்போது எடுத்த புகைப்படத்தை தன்னுடைய x பக்கத்தில் மோனிஷா பகிர்ந்து இருக்கிறார். அதில் "தளபதி 69 படத்தில் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் நன்றியுடன் ஆகவும் உணர்கிறேன். விஜய் சாரின் பெரிய ரசிகை நான் அவருடைய படத்தில் நடிப்பது எனக்கு கனவு. அது இப்போது நினைவாகிவிட்டது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமான லைக் பெற்று வருகிறது. அதுபோல விஜயின் 69 ஆவது படத்தில் பூஜா கெட்டே, பிரகாஷ்ராஜ், நரேன், பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகிய பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்காக விஜய் 275 கோடி சம்பளம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது போல இந்த திரைப்படம் வரும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+