மொத ராத்திரி படத்தில் கட்டில் காட்சி கடைசியில் வைத்த காரணம் இதுதான்.. ஓபனாக சொன்ன இயக்குனர்
சென்னை: மொத ராத்திரி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையிலேயே இப்போ ஓடிடியிலும் வெளியாகி அதிலும் அதிகமான பாராட்டை பெற்று வருகிறது. ரசிகர்கள், மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சி மட்டும் பலருக்கு புரியவில்லை. அதில் கட்டில் கல்யாண வீட்டிற்கு கொண்டுவரும் காட்சி இருந்தது. ஆனால் அந்தக் கட்டில் எதற்காக படத்தின் கடைசியில் வந்து சேர்ந்தது என்று இயக்குனர் சொன்ன பேட்டி வைரலாகி வருகிறது.
மொத ராத்திரி படத்தின் கதையை சொல்ல வேண்டும் என்றால் ஹீரோவிற்கு கல்யாணம் என்றே தெரியாமல் அவர் வெளிநாட்டிலிருந்து வரவைத்து கடைசியில் அவருக்கு கல்யாணம் நடத்துகிறார்கள். அதேபோல ஹீரோயினி இன்னொருவரை காதலிக்கிறார் அந்த விஷயத்தை தெரிந்ததும் குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டினரிடம் சொல்லாமல் அவசரமாக இந்த கல்யாணத்தை நடத்துகிறார்கள்.
மொத ராத்திரி பட கதை
மொத ராத்திரி நடக்கும் சமயத்தில் தான் பல விஷயங்கள் வெளியே தெரிய வருகிறது. இதுதான் இந்த படத்தின் கதை. ஆனால் இந்த கதையின் ஆரம்பத்திலேயே ஹீரோ ஹீரோயினிக்கு முதல் ராத்திரிக்கு மாப்பிள்ளையின் தங்கச்சியும் அவருடைய கணவரும் ஒரு கட்டில் வாங்கி கொடுப்பதாக சொல்லி இருப்பார்கள். அந்த கட்டில் ரெடியாகிவிட்டதா? என்றுதான் ஆரம்பத்திலேயே கதையை தொடங்குவார்கள். ஆனால் படம் முடியும்போது தான் அந்தக் கட்டில் கல்யாண வீட்டிற்கு வந்து சேரும். இதுதான் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இயக்குனர் பேட்டி
எதற்கு இந்த தேவையில்லாத சீன்? அடிக்கடி கட்டில் ரெடியாகிவிட்டதா? என்று மாப்பிள்ளையின் தங்கச்சி புருஷன் போன் பண்ணி கேட்டுக்கொண்டே இருக்கிறான். ஆனால் கட்டில்காரர் இப்ப வந்துடும்னு சொல்லி அலைய விடுறார். பிறகு நைட்டு முழுக்க வீட்டை கண்டுபிடிக்க சுற்றிக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு காட்சி தேவையா? என்று எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ராஜ் கருப்பன் இது பற்றி பேசியிருக்கிறார்.
முதல் இரவு ஹிண்ட்
அதில் அவர் சொல்லும்போது, அந்த படத்தில் ஒரு காட்சி இருக்கும். அதில் முதலிரவு நடக்கப் போகிறது என்றதும் என்ன பண்ண? அந்த பொண்ணு கிட்ட பேசுனது கூட இல்லையே என்ற குழப்பத்தில் ஹீரோ உட்கார்ந்து இருப்பார். அப்போ அவங்களோட தங்கச்சி பையன் வந்து என்ன மாமா நீ பயத்துல இருக்கியா? என்று கேட்பான். அப்போ ஹீரோ என்ன பயம் என்று கேட்க, இன்னைக்கு உனக்கும் அத்தைக்கும் முதலிரவு, நீங்க நைட்டு முழுக்க பேசிட்டு இருக்கணும்னு அப்பா சொன்னாரு. அதை நினைச்சு தான் நீ பயப்படுறியா?
மகுடம் படத்தில் இப்படியெல்லாம் லாஜிக்? ஆனால், விஷால் பெரிய விஷயத்தை மறந்துட்டாரே?
நான் மட்டும் உன் இடத்துல இருந்தேன்னா எப்படி பேசுவேன் தெரியுமா? என்று அந்த சின்ன பையன் கேட்க, ஹீரோ அவனிடமே என்ன பண்ணுவ என்று கேட்பார். அதற்கு அந்த சிறுவன் உனக்கு என்ன கலர் பிடிக்கும்? உனக்கு நாய்க்குட்டி பிடிக்குமா? அஜித்தா? விஜய்யா? என்று பேசிக்கிட்டே இருப்பேன் என்று சொல்லுவான். அது குழப்பத்தில் இருந்த ஹீரோவுக்கு ஒரு ஹிண்டு.

பூசாரி சொன்ன வார்த்தை
ஒரு இடத்தில் கூட பூசாரி சேத்தல் சொல்லுவார், புருஷன் பொண்டாட்டின்னா... பொண்டாட்டி சொல்லுறதை புருஷன் உம் சொல்லி கேட்கணும். அப்படி என்றாலே பாதி பிரச்சனை வராது. ஒரு புரிதல் வந்து விடும் என்று சொல்லுவாரு. அதே போல கடைசியில் ஹீரோயினி முத்து பேசிக்கொண்டே இருக்கும்போது ஹீரோ உம் சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பார். அதற்கு பிறகு தான் கட்டில் அங்கு வந்து சேரும். இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

கட்டில் ரகசியம்
புருஷன் பொண்டாட்டியாக அவர்கள் இப்போது மனம் ஒத்து சேர்ந்து விட்டார்கள். அதற்கு பிறகு கட்டிலில் அவர்கள் என்ன பண்ணுகிறார்களோ அது அவர்களுடைய பாடு.. என்று சிம்பாலிக்காக சொல்வதற்காக தான் அந்த காட்சியை கடைசியில் கொண்டு வைத்தேன் என்று வதந்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications
