ஆஹா மருமகள்... ஓஹோ மாமியார்... நம்புங்கய்யா நம்புங்க.. மெய்யாலுமேதான்!
சென்னை: சன் டிவியில் ரோஜா சீரியல் படு பிரபலமாகிட்டு வருது. ஸ்டார் காஸ்ட்டா வடிவுக்கரசி கதையில நல்ல மாமியாரா இருக்காங்க.
காயத்ரி வடிவுக்கரசிக்கு மருமகளா, கல்பனா ரோலில் நடிக்கறாங்க. அப்புறம் நம்ம பிரியங்கா.. இவங்கதான் கதையின் நாயகி ரோஜா. மதியம் 3 மணிக்கு இப்போ ஒளிபரப்பாகிட்டு இருந்த இந்த சீரியலுக்கு, இன்னும் புது வடிவம் கொடுத்து வரும் திங்கள் முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்ப இருக்காங்க.
வடிவுக்கரசிக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போகுது. அந்த நேரத்தில் அரிய வகை ரத்தமான ஏ பாசிட்டிவ் ரத்தம் தேவைப்படுது. ஒருமுறை, இறந்துபோன முதல் பெண்ணின் ரத்தம், அவளது மகளின் ரத்தம், தனது ரத்தம் எல்லாம் இந்த வகை ரத்தம்தான்னு வடிவுக்கரசி சொன்னது நினைவுக்கு வர பேத்தி, அனுவை ரத்தம் கொடுக்க சொல்லி கூப்பிடறாங்க.

பாட்டிக்கு சேராது
என்னோட ரத்தம் பாட்டிக்கு சேராது, என்னை விட்ருங்க ப்ளீஸ்னு அனு ஒதுங்கிக்கறா. இவதான் ரோஜாவுக்கு வில்லி. அதாவது, அனுவும், ரோஜாவும் ஒரே ஆஷ்ரமத்தில் வளர்ந்தவங்க. ஆனா, அனாதைன்னு சொல்ற ரோஜா ரத்தம் பாட்டிக்கு சரியா இருக்கு.ரோஜா ரத்தம் குடுக்கறா.

நீ மகள்தான்
மருமகளே.. உன்னை மாதிரி ஒரு மருமக கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும். எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யற...எனக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போற..இதுவரைக்கும் நீ எனக்கு நல்ல மருமகளா இருந்திருக்கே. உன்னை இன்னொரு மகள்னுதான் சொல்லணும்னு வடிவுக்கரசி கண்ணீர் விடறாங்க.

எனக்கு அம்மா
நீங்களும் எனக்கு நல்ல மாமியாராத்தான் அத்தை இருக்கீங்க. எனக்கு அம்மா மாதிரி நம்ம வீட்டுல வச்சே என்னை பார்த்துகிட்டு, பிரசவம் பார்த்தீங்க. பிரசவம் முடிஞ்ச நேரத்துல, நல்ல பத்திய சாப்பாடு செய்து குடுத்து என்னை பார்த்துக்கிட்டீங்க.நீங்க எனக்கு அம்மாதான் அத்தைன்னு இவளும் சொல்றா.

எனக்கு
உங்களுக்கு நான் நல்ல மருமகளா அமைஞ்ச மாதிரி எனக்கும் ரோஜா நல்ல மருமகளா அமைஞ்சி இருக்கா அத்தை.... உங்களுக்கு உடம்பு சரியில்லேன்ன உடனே துடிச்சு போயி ரத்தம் குடுத்தா அத்தை. உங்களுக்குத்தான் அத்தை ரோஜாவைப் பத்தி சரியா தெரியலைன்னு சொல்றா கல்பனா.

அனு
ரோஜா இடத்துல என் செத்துப்போன மகள் வயித்து பேத்தி அனு இல்லையேன்னுதான் எனக்கு கவலையே தவிர, ரோஜாவை எனக்குப் பிடிக்காதுன்னு ஒண்ணும் இல்லை மருமகளே... என்னதான் அனாதை ஆஷ்ரமத்துல வளர்ந்தாலும் அவளும் ஒரு நல்ல அம்மா வயித்துலதானே பிறந்திருப்பான்னு வடிவுக்கரசி சொல்றாங்க
குடும்ப பாசத்தை பின்னிப் பிணைந்ததாக ரோஜா சீரியல் இப்போதைக்கு கண்கள் கலங்க வைப்பதா இருக்கு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications