கோலங்கள் சீரியல் பாடலுக்காக அந்த நடிகர் கூப்பிட்டு சொன்ன வார்த்தை! மறக்க முடியாது.. இமான் ஓபன்
சென்னை: இசையமைப்பாளர் இமான் திரைப்படங்களில் இசை அமைப்பதற்கு முன்பே சீரியல்களில் இசை அமைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக கோலங்கள் சீரியலில் டைட்டில் பாடலை இவர்தான் இசையமைத்திருந்த நிலையில் அது குறித்து இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்த எம்.எஸ் விஸ்வநாதன் தன்னிடம் சொன்ன வார்த்தை குறித்து இமான் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். இது பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
ஒரு சிலருடைய பாடல்கள் கேட்கும் ரசிகர்களின் கவலைகளை கரைத்து விடும். மீண்டும் மீண்டும் அந்த பாடல்களை கேட்க தூண்டிக் கொண்டிருக்கும்.. அந்த மாதிரி பல பாடல்களை இசையமைத்தவர் தான் இசையமைப்பாளர் இமான். இவருடைய பல பாடல்கள் ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கின்றன.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இசையமைத்துக் கொண்டிருக்கும் இசை அமைப்பாளர் இமான் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதிலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அதிகமான திரைப்படங்களில் இசையமைத்திருக்கிறார். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களுக்கு இமான் தான் இசை அமைத்திருந்தார்.
ஆனால் பிறகு அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விலகி இருக்கின்றனர். அதோடு சில மாதங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் குறித்து இமான் பட்டும்படாமலும் சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில் அது பெரிய அளவில் அந்த நேரத்தில் பேசப்பட்டது. அதுபோல தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களின் மனதை துள்ளல் போடும் பாடல்களையும் மயக்கும் பாடல்களையும் இமான் கொடுத்திருக்கிறார்.
அதிலும் அவர் இசையமைத்த "கண்ணான கண்ணே" பாடல் பல அப்பா மற்றும் மகள்களின் அன்பு, காதலை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. இந்த பாடலுக்கு தேசிய விருதும் இமானுக்கு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் அவர் பேசுகையில் நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சில சீரியல்களின் டைட்டில் பாடல்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்தேன்.
அப்படித்தான் நடிகை தேவயானி நடித்த கோலங்கள் சீரியலுக்கும் நான்தான் இசை அமைத்திருந்தேன். அந்த சீரியலின் டைட்டில் பாடலை எம்.எஸ். விஸ்வநாதன் அய்யா கேட்டு ரசித்திருக்கிறார். அவர் இந்த பாடலை யார் இசையமைத்தது என்று விசாரித்திருக்கிறார். அதற்குப் பிறகு என்னைப் பற்றி அவர் தெரிந்து கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு மியூசிக் யூனியன் நிகழ்ச்சிக்காக நான் சென்றிருந்தபோது அவர் என்னை அழைத்து நீதான கோலங்கள் சீரியலுக்கு மியூசிக் பண்ணுன? தினமும் அந்த பாட்டை கேட்பேன் என்று என்னை பாராட்டினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக காரணம் இதுதான்! பல ரகசியங்களை உடைத்த நடிகை சத்யா சாய்
எனக்கு அது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று அந்த பேட்டியில் இமான் கூறியிருக்கிறார். அதுபோல இமான் கோலங்கள் சீரியல் மட்டுமல்லாமல் கிருஷ்ண தாசி, சிகரம், மந்திரவாசல், கல்கி, திருமதி செல்வம் போன்ற சீரியல்களுக்கும் டைட்டில் பாடல் இசை அமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications