முதலிரவை முடித்த கையோடு இந்த முல்லை செய்த வேலை இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கையில் குழந்தையை வைத்துக் கொண்டு பாண்டியன் ஸ்டோர் முல்லை செய்த செயல்தான் தற்போது வைரலாக பரவிவருகிறது.

சீரியலிலும் இப்ப எல்லாம் சினிமாகளை மிஞ்சி கதைகளை கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி தான் இதுவரைக்கும் குடும்ப பாங்காக போய்க் கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது ரசிகர்கள் முகம் சுளிக்கிற அளவிற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதிர் ஜோடி தான் அனைத்து ரசிகர்களின் பேவரைட் ஜோடி அவர்களின் காதல் கதையை ரசிக்காத ரசிகர்களே இல்லை. அனைவருக்கும் பிடித்தமான ஜோடிகளுக்கு ரசிகர்களிடம் தனி மரியாதை இருக்கிறது.

முல்லை ஜோடி

முல்லை ஜோடி

தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையில் புது வசந்தம் வீசத் தொடங்கியிருக்கிறது. இப்போது இந்த சீரியலில் அவர்களின் முதலிரவு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுதான் இப்போது ஹைலைட்டாக வைரலாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில்.

முகம் சுளிக்கிற மாதிரியா

முகம் சுளிக்கிற மாதிரியா

இதைப் பார்த்து பலர் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றாக இருந்து பார்க்கும் சீரியல் அதிலும் கூட இந்த மாதிரி சூழ்நிலை இப்படி காட்டுகிறார்களே என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஆனாலும் இந்த சீரியலில் இவர்களின் தீவிரமான ரசிகர்கள் இந்த சீனுக்காக தான் இவ்வளவு நாளா காத்துகிட்டு இருந்தோம் என்று ரொம்ப ஆர்வமாக பார்த்து ரசித்து இருக்கின்றனர்.

புரோமோவைக் கிழித்த ரசிகர்கள்

புரோமோவைக் கிழித்த ரசிகர்கள்

இந்த சீரியல் ப்ரோமோ அடிக்கடி போட்டுக் காட்டி விஜய் டிவி கோபத்திற்கும் ஆளாகி இருந்தது. இந்த ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை போட்டு கிழி கிழி என்று கிழித்து வந்தனர். இந்த நிலையில் ஒரு வழியாக இவர்களின் முதல் இரவு சீனை முடித்து விட்டார்கள். அதன் பிறகு முல்லை வெளியிட்ட புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

முதலிரவை முடித்த கையோடு

முதலிரவை முடித்த கையோடு

சீரியலில் முதலிரவை கொண்டாடி அடுத்த நாளே கையில் குழந்தையுடன் இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சீரியலில் மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது போல சீன் வைத்து மீனாவின் குழந்தையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அந்த குழந்தையை வைத்து கொஞ்சி விளையாடி அதை வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார்.

சித்துவின் ரசிகர்கள்

சித்துவின் ரசிகர்கள்

இந்த வீடியோக்களை பார்த்து அவரது ரசிகர்களும் மீண்டும் மீண்டும் இந்த வீடியோக்களை பரப்பி வருகிறார்கள். எப்போதுமே சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களை வெளியிடும் சித்துவும் சித்துவின் ரசிகர்களும் தற்போது வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலவகையாக வறுத்து எடுத்து வருகிறார்கள்.

முத்தத்தால் நின்றதாக கல்யாணம்

முத்தத்தால் நின்றதாக கல்யாணம்

அதிலேயும் திடீரென்று ஒரு வதந்தியை பரப்பி வருகிறார்கள். இந்த முத்தக்காட்சியில் இவர் நடித்ததால் இவரது திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் பலரும் அவருக்கு ஆறுதல் கூறியும் வருகிறார்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+