Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தமா முடித்துவிட்ட முருகதாஸ்.. சிவகார்த்திகேயனுக்கு மிஸ்ஸான கால்குலேஷன்.. சென்டிமெண்ட்டை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு காமெடியனாக இருந்து ஆக்‌ஷன் ஹீரோவாக இதுவரை யாரும் வந்ததில்லை. அந்த வகையில் சிவகார்த்திகேயன் சாதனை படைத்துள்ளார்.. எனினும், யாராக இருந்தாலும் சிலசமயங்களில் கால்குலேஷன்கள் மிஸ்ஸாகிவிடும்.. அந்தவகையில் மதராஸி படமும் மிஸ்ஸாகிவிட்டதாக தெரிகிறது என்று சினிமா விமர்சகரும், பிரபல தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார்..

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு சிவகார்த்திகேயனை முடித்துவிட்ட முருகதாஸ் என்ற தலைப்பில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றை தந்துள்ளார்..

Television Sivakarthikeyan Murugadoss

அதில், மதராஸி படத்துக்கு சிவகார்த்திகேயனுக்கு 50 கோடி சம்பளம் தந்துள்ளார்கள்.. முருகதாஸ் 15 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.. அனிருத் 15 கோடி வாங்கியிருக்கிறார்.. மற்ற டெக்னீஷியன்கள், நடிகர்களுக்கு 10 கோடி.. புரொடக்‌ஷன் தயாரிப்பு 50 கோடி என மொத்தம் 140 கோடியில் படம் தயாரானது.. மதராஸி படம் ரிலீஸாகி முதல் ஒரு வாரம் தியேட்டடர்களில் நல்லாவே ஓடியது..

அதற்கு பிறகு சுமாராகவே படம் ஓடுகிறது.. ஆனால், முதல் ஒரு வாரம், 70 கோடிக்கு உலகளவிலான வசூலாகியிருக்கிறது.. அப்படியானால், 35 கோடி ரூபாய்தான் புரொடியூசருக்கு கிடைக்கக்கூடிய பணமாகும்..

இதனை தவிர, சாட்டிலைட் 5 கோடி, டிஜிட்டல் 50 கோடி, ஆடியோ ரைட்ஸ் 10 கோடி ரூபாய்க்கு தந்திருக்கிறார்கள்.. மற்ற மொழிகளின் உரிமை 10 கோடிக்கு தந்துள்ளார்.. ஆகமொத்தம் 110 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வசூலாகியிருக்கிறது.. ஆனால் படத்தின் தயாரிப்போ 140 கோடியாகும்.. அப்படியானால் 30 கோடி ரூபாய் நஷ்டமாகும்.

மதராஸி பட வசூல்

அமரன் படம் கிட்டத்தட்ட 330 கோடி வசூல் செய்தது.. இதற்கு பிறகுதான் முருகதாஸுடன் இணைந்து சிவகார்த்திகேயன் ஆக்‌ஷன் படம் ஒன்றில் நடிக்க முடிவெடுத்தார்.. இதற்கு காரணம், அன்று விஜய் டிவியில் காம்பேர் செய்து கொண்டிருந்தபோது, ஏழாம் அறிவு படத்தை காம்பேர் செய்வதற்காக சிவகார்த்திகேயனை கூப்பிட்டிருக்கிறார்கள்..

இதற்கு உடனே ஒப்புக்கொண்டார் சிவகார்த்திகேயன்.. ஆனால், 2வது நாளே, வேறு யாராவது பெரிய நடிகரை வைத்து காம்பேர் செய்தால் நன்றாக இருக்கும், நீங்கள் வேறு ஏதாவது ஸ்கிரிப்ட் செய்யுங்கள் என்று சிவகார்த்திகேயனிடம் சொல்லி உள்ளனர்..

இதற்கும் சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டார்.. எனவே சிவகார்த்திகேயனுக்கு பதிலாக அப்போது நடிகர் ஜெய் அந்நிகழ்ச்சியை காம்பேர் செய்திருந்தார்..

பிரபல நடிகர் ஜெய்

அந்தவகையில் ஜெய்க்கு நிகழ்ச்சியில் என்ன பேசவேண்டும் என்ற ஸ்கிரிப்ட்டை எழுதி தந்ததே சிவகார்த்திகேயன்தான்.. அப்போதுதான், மேடையில் முருகதாஸ், சூர்யா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உட்கார்ந்திருப்பதை சிவகார்த்திகேயன் பார்த்துள்ளார்.. இவர்களுடன் என்றாவது நாமும் சேர்ந்து நடிக்க மாட்டோமா? என்றும் ஏக்கத்துடன் சிவகார்த்திகேயன் நினைத்துள்ளார்.. இதற்கு பிறகுதான் முருகதாஸ் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து சிவகார்த்திகேயனுக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது..

அப்படி ஆரம்பிக்கப்பட்ட படம்தான் மான் கரேத்தே.. அது வெற்றிப்படமாகவும் அமைந்தது.. அப்போது அந்த மேடையில் பேசும்போது, டைரக்டர் ஷங்கர், முருகதாஸ் போன்றோரின் படங்களில் நடிப்பதே தன்னுடைய நீண்ட நாள் கனவு என்று பேசியிருந்தார்..

டிரோல் செய்யப்பட்ட சிவகார்த்திகேயன்

உடனே சிவகார்த்திகேயனின் இந்த பேச்சை, அப்போது சோஷியல் மீடியாவில் டிரோல் செய்தார்கள்..ஒன்றிரண்டு படங்கள் நடித்துவிட்டால் உடனே ஷங்கர், முருகதாஸ் படங்களில் நடிக்க ஆசையா? என்று இணையவாசிகள் கமெண்ட் அடித்தார்கள்.. இதுதான் சிவகார்த்திகேயன் மனதில் சுருக்கென குத்தியது.. தன்னுடைய திறமை, வியாபாரத்தை வளர்த்து கொண்டு, இதே ஷங்கர், முருகதாஸ் போன்றோரின் படங்களில் நடிப்பது என்று வைராக்கியம் கொண்டார் சிவகார்த்திகேயன்..

இப்படியெல்லாம் விமர்சனங்களை கடந்து வந்த சிவகார்த்திகேயன், தான் அன்று முடிவெடுத்தபடியே இன்று முருகதாஸ் படத்தில் நடித்துள்ளார்.. மேற்கண்ட தகவல்களை எல்லாம் மதராஸி பட ஆடியோ லான்ச் விழாவிலேயே சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.

சென்ட்டிமென்ட் முருகதாஸ்

அதுமட்டுமல்ல, தன்னுடைய அப்பா பெயர் தாஸ் என்பதால், முருகதாஸ் படத்தில் நடிப்பதிலும் தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாக சிவகார்த்திகேயன் சென்ட்டிமென்ட் காரணத்தையும் அப்போது கூறியிருந்தார்..

அமரன் வெற்றிக்கு பிறகு, ஆக்‌ஷன் படத்தை எடுப்பதற்கு டைரக்டர்கள் யாரும் அப்போதைக்கு கிடைக்கவில்லை.. நெல்சன், அட்லி, கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் என எல்லாருமே பிசியாக இருந்தால், முருகதாஸ் மட்டுமே கிடைத்தார்.. அந்த நேரத்தில் முருகதாஸை நம்பி, இந்த படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன்..

மிஸ்ஸான கால்குலேஷன்

ஏற்கனவே சிவகார்த்திகேயன் சொல்லியிருந்த வைராக்கியம், சென்ட்டிமென்ட் போன்ற காரணங்களால்தான், முருகதாஸ் படத்தில் நடிக்க முன்வந்தார் சிவகார்த்திகேயன்.. இப்படி தன்னை நம்பி தேதிகளை சிவகார்த்திகேயன் தந்ததும் 15 கோடி சம்பளம் பெற்றுக் கொண்ட முருகதாஸ், மதராஸி படத்தில் எந்த புது விஷயத்தையும் சொல்லவில்லை.. துப்பாக்கி படத்தையே தூசி தட்டி தந்துள்ளார்..

ஒரு காமெடியனாக இருந்து ஆக்‌ஷன் ஹீரோவாக இதுவரை யாரும் வந்ததில்லை. அந்த வகையில் சிவகார்த்திகேயன் சாதனை படைத்துள்ளார்.. எனினும், சிலசமயங்களில் கால்குலேஷன்கள் மிஸ்ஸாகவே செய்துவிடுகிறது" என்று தெரிவித்துள்ளார்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+