சூப்பர் சிங்கர்..வென்றார் மூக்குத்தி முருகன்.. அனிருத் இசையில் பாட வாய்ப்பு.. ரூ. 50 லட்சத்தில் வீடு
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் கிராண்ட் ஃபினாலேயில் முதல் இடத்தைப் பிடித்த மூக்குத்தி முருகனுக்கு அனிருத் இசையில் பாட அருமையான வாய்ப்பு கிடைச்சு இருக்கு. கூடவே ரூ. 50 லட்சம் மதிப்பிலான வீடும் பரிசாக கிடைத்துள்ளது.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் கிராண்ட் ஃபினாலே நிகழ்சசி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இந்த இறுதி நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். நேரலையாக இது ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பிற்பகல் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி மிக சுவாரஸ்யத்துடன் நேரம் போவது தெரியாமல் சென்றுகொண்டு இருந்தது.போட்டியாளர்கள் முதல் சுற்று இரண்டாவது சுற்று என்று பாடல்களை தேர்வு செய்து பாடினர்.

தலையாய பாட்டாக
அனிருத் இசையில் அவரே தல அஜீத்துக்கு பாடிய ஆலுமா டோலுமா பாடலை பாடி அசத்தினார். அரங்கமே அதிரும்படி மேல் நோக்கியே ஒன் டூ .த்ரீ,ஃபோர் என்று நான்கு ஸ்டெப்ஸ் ரசிகர்களை போட சொல்லி ஆலுமா டோலுமா பாடலை பாடினர். அரங்கமே அதிரும் படியான ரசிகர்களின் கூச்சல் அனிருத் எனர்ஜி லெவலை கூட்டுவதாக இருந்தது.

ஐவர் இறுதிப் போட்டிக்கு
இறுதிப் போட்டியில் சாம் விஷால், கெளதம், புன்யா, மூக்குத்தி முருகன், புன்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் ஒவ்வொருவரும் தலா 2 பாடல்களை இறுதிப் போட்டியில் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
மூக்குத்தி முருகன் எங்கே நிம்மதி பாடலை தனது முதல் சுற்றிப் பாடி அத்தனே பேரையும் மிரள வைத்தார். அடுத்த சுற்றில் இவர் பாடியது பில்லா படத்தில் வந்த வெத்தலையைப் போட்டேண்டி... மற்றவர்களும் போட்டிப் போட்டு பாடி அனைவரையும் அதிர வைத்தனர்.

மூக்குத்தி முருகன் வெற்றி
இறுதியில் மூக்குத்தி முருகனுக்கே பட்டம் கிடைத்தது. முதல் பரிசு தட்டிச் சென்ற முருகனுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக கிடைத்தது. கூடவே அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. எளிய கலைஞனான இவருக்கு பரிசு கிடைத்ததில் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

ஷ்யாம் புண்யா
முதல் ரன்னர் அப் பரிசு சாம், புன்யா இருவருக்கும் கிடைத்தது. யாழ்ப்பாணத்தைப் பூர்வீமாகக் கொண்ட புன்யா, லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் தமிழர். முதலில் சங்கீதம் கற்றுக்கொண்டு. இதில் ஒன்றும் தேற முடியாது என்று, டாக்டருக்குப் படித்தவர். பின்னர் இப்போது ஏன் திரும்ப மியூசிக்கை கையில் எடுக்கக் கூடாது என்று நினைத்த கையில் எடுத்த நேரம் ரொம்ப நல்ல நேரமாக அமைந்து சூப்பர் சிங்கரில் வாய்ப்பு கிடைத்து இரண்டாம் இடத்தைப் பிடித்தும் சாதித்து இருக்கார். விக்ரம், கெளதமுக்கு 2வது ரன்னர் அப் பரிசு கிடைத்தது.
|
எளிமையான பாடகர்
மூக்குத்தி முருகன் கேள்வி ஞானத்தில்தான் விஜய் சூப்பர் சிங்கரில் கலந்துக் கொண்டார். உண்மையில் இவர் ஒரு வரை பட கலைஞர். குறிப்பாக சுவற்றில் அரசியல்வாதிகள், பிரபலங்களை வரைவதில் வல்லவர். இவர் இந்த சீசன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் என்டெர்டெயினராகவும் இருந்து நிகழ்ச்சியைப் பார்க்க வைத்த பெருமைக்கு உரியவர்.
|
முகேன் பிக்பாஸ்
இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் 3 வின்னர் முகேனும் சிறப்பு அழைப்பாளராக வந்து பாடல் பாடினார். ராஜலட்சுமி செந்தில் நாட்டுப்புற கலைஞரின் பாடலும் இருந்தது. மொத்தத்தில் சூப்பர் சிங்கர் கிராண்ட் ஃபினாலே செம என்டெர்டெயின்மென்ட்! வழக்கமான இழுவை இல்லாமல், ஜாலியாக போனது இன்னொரு ஹைலைட்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications