தம் அடிக்கிறாங்க! பிக்பாஸ் டைட்டில் வெல்லும் தகுதி அர்ச்சனாவுக்கு இல்லை.. ஜேம்ஸ் வசந்தன் பரபரப்பு
சென்னை: பிக்பாஸ் டைட்டில் வெல்ல ஒரு தகுதி வேண்டாமா, அது அர்ச்சனாவுக்கு இல்லை என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கேங் கேங்காக விளையாடி வருவதாக விமர்சனங்கள் உள்ளன.
இதில் மாயா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, பூர்ணிமா, அர்ச்சனா , விசித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஜோவிகாவும் பிரதீப் ஆண்டனியும் எவிக்ட் ஆகிவிட்டார்கள்.

இந்த நிகழ்ச்சி தற்போது 85 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த விளையாட்டில் முதலில் 23 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் இதுவரை 11 பேர் வெளியேற்றப்பட்டனர். பாவா செல்லத்துரை அவராகவே போட்டியிலிருந்து விலகி விட்டார். அது போல் வலுவான போட்டியாளராக கருதப்பட்ட பிரதீப் ஆன்டணி, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் 84 ஆவது நாளான இன்று யார் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. விசித்ரா, ரவீனா, சரவண விக்ரம் ஆகிய மூன்று பேர் நாமினேஷனில் உள்ளது. இவர்கள் விக்ரம்தான் வெளியேறுவார் என்பது சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் நம்பப்படுகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சரவண விக்ரம் வெளியேற போவதாக தகவல்கள் வந்துள்ளன. அவர் 80 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்தார். இதற்காக அவருக்கு ஒரு எபிசோடுக்கு 18 ஆயிரம் ஊதியம் பேசப்பட்டது. அவருக்கு 14. 94 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும். இவருக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் விசித்ரா, ரவீனா, பூர்ணிமா, நிக்ஸன், மாயா, மணிசந்திரா, தினேஷ், அர்ச்சனா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
இவர்களில் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகிய 3 இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டனர். அவர்கள் இனி எவிக்ஷனில் இருக்க மாட்டார்கள். இனி மாயா, பூர்ணிமாஸ நிக்ஸன், விஷ்ணு, மணி, ரவீனா ஆகியோருக்கு இடையேதான் போட்டி. இந்த நிலையில் இறுதி சுற்றுக்கு போன 3 பேரில் அர்ச்சனாதான் டைட்டில் பட்டத்தை வெல்வார் என பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இது குறித்து ஒரு வீடியோவை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அர்ச்சனாவை விமர்சித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிப்பதற்கென்றே ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அர்ச்சனா அடிக்கடி சென்று வருவதுடன் மற்றவர்களையும் துணைக்கு அழைத்து செல்கிறார் என்ற பேச்சு பரவலாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது: அர்ச்சனாவிற்கும் புகை பிடிக்கும் பழக்கம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அது அவரவரின் விருப்பம். அதில் எந்த மாற்றும் இல்லை. ஆனால் பொதுவெளியில் உலகம் முழுவதும் பார்க்கும் ஒரு பிக்பாஸில் புகைப்பிடிப்பதை மறைக்காமல் அர்ச்சனா துணிவுடன் செய்கிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் புகைப்பிடிக்காமல் அர்ச்சனா கட்டுப்பாட்டோடு இருந்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை. சிறுவர்களும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதால் அவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருந்து விடக் கூடாது. பிக்பாஸ் பட்டத்தை வெல்வோருக்கு நல்லதொரு தகுதி இருக்க வேண்டும். தற்போது இருப்போரில் ஒப்பீடு செய்து பார்த்தால் விசித்ரா, மணி, தினேஷ், அர்ச்சனா, பூர்ணிமா, மாயா ஆகியோரில் விசித்ராவுக்கு வழங்கலாம். அவர் சிறந்த ரோல் மாடலாக இருப்பார்.
விசித்ராவை பார்த்து யாராவது ஒரு விஷயத்தில் கெட்டு போய்விடுவார்களா, அவரிடம் தான் குறைவான தவறுகள் உள்ளன. எனவே அவருக்குத்தான் அந்த பட்டம் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலம் அர்ச்சனா வந்தார். இவர் ராஜா ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் மக்களிடையே அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications