Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கும் 9 வயதிலேயே அப்பா இல்ல.. என்னை போலவே இவன்! நீயா நானா மாணவனுக்கு பைக் கொடுத்த “தமன்” உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வார எபிசோடில் தங்களுடைய குடும்ப கஷ்டத்திற்காக படித்துக்கொண்டே வேலை பார்க்கும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வலி, வேதனைகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது கோவில்பட்டியை சார்ந்த ஒரு மாணவன் தான் காய்கறி கடையில் வேலை பார்த்து படித்து வருவது பற்றி பேசியதை பார்த்த இசையமைப்பாளர் தமன் அந்த மாணவனுக்கு பைக் வாங்கி தருவதாக கூறியிருந்தார். இப்போது அந்த மாணவனை கூப்பிட்டு அவருக்கு பைக் வாங்கி கொடுத்து இருக்கிறார்.

விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி 10 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. பல நேரங்களில் இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் தலைப்புகள் மக்களின் அன்றாட பிரச்சனைகளில் இருந்து எடுக்கப்படுவதால் இதில் பலர் தங்களுடைய வலி, வேதனைகளை வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள்.

neeya naana vijay tv

அதனால் ஒரு சிலர் சமூக வலைத்தளத்தில் பெரும் பிரபலங்களாகவும் மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த வார நீயா நானா எபிசோடில் கோவில்பட்டியை சார்ந்த ஒரு மாணவர் பெரிய அளவில் பேசப்பட்டார். அந்த மாணவன் தான் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு காலையில் காய்கறி கடைக்கு வேலைக்கு செல்வேன், அங்கு இருக்கும் மூட்டைகளை தூக்கி சுமப்பது தான் தன்னுடைய வேலை என்று சொல்லி இருந்தார்.

மூட்டைகளை தூக்கி சுமப்பதால் தன்னுடைய கழுத்தில் ஒரு பக்கம் எப்போதும் வலி இருந்து கொண்டிருப்பதால் தன்னால் நேராக கழுத்தை வைக்க முடியவில்லை என்று வேதனையோடு கூறி இருந்தார். தன்னுடைய அம்மா ஆரம்பத்தில் வேலை பார்த்து வந்தார் ஆனால் இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டதால் குடும்ப கஷ்டத்திற்காக நான் வேலைக்கு போகிறேன் என்று அந்த மாணவன் கூறியிருந்தார்.

அதோடு தான் வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து அதற்கு பிறகு பள்ளிக்கு செல்லும்போது சில நாட்கள் பஸ்ஸை விட்டு விடுவேன், அப்படி சொல்லும் போது மூன்று கிலோமீட்டர் நடந்தே சென்று படிக்கப் போவேன் என்று சொன்னதை கேட்டு எல்லோரும் ஃபீல் பண்ணி இருந்தனர். கோபிநாத் இந்த வயதில் படிப்பை முதலில் முடி அதற்குப் பிறகு வேலை பார்க்கலாம் என்று அட்வைஸ் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த மாணவனின் வீடியோ சமூக வலைதளத்தில் பெரிய அளவில் ட்ரெண்டானது. அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் மாணவனின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவருக்கு கட்டில் மற்றும் மெத்தை வாங்கி கொடுத்திருக்கிறார். அதுபோல வீட்டிற்கு தேவையான பொருட்களும், அந்த மாணவனின் படிப்பு செலவுக்காக 25 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

neeya naana vijay tv

இந்த நிலையில் நம் இசையமைப்பாளர் தமன் அந்த மாணவனுக்கு தான் ஒரு பைக் வாங்கி கொடுக்க விரும்புவதாக தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் இன்று அந்த மாணவனை தன்னுடைய வீட்டிற்கே வரவழைத்து பைக் வாங்கி அந்த மாணவனுக்கு கொடுத்திருக்கிறார். அதோடு தான் இந்த முடிவு எடுத்ததற்கு முக்கிய காரணம் நான் ஒன்பது வயதிலேயே அப்பா இல்லாமல் கஷ்டப்பட்டேன், என்னுடைய அப்பா 9 வயதில் இறந்து விட்டார்.

அதற்கு பிறகு நான் படிப்பை விட்டு விட்டு 11 வயதில் மியூசிக் குரூப்பில் சேர்ந்து விட்டேன். எனக்கு இந்த மாணவனின் பேச்சு என்னையே பார்ப்பது போல இருந்தது. அதனால்தான் அவன் இனி நடந்து பள்ளிக்குப் போக வேண்டாம் என்பதற்காக அவனுக்கு பைக் வாங்கி கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது அதை செய்து விட்டேன் என்று அந்த மாணவன் இனி சிறப்பாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தமன் வாழ்த்து கூறி இருக்கிறார்.

இது இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தமனின் இந்த செயல் குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க? தமன் உதவியது சரி என்று நினைக்கிறீர்களா? அல்லது அந்த மாணவனின் அம்மா வேலை செய்வதற்கு ஏதாவது வழி செய்து கொடுத்து இருந்தால் நல்லது என்று நினைக்கிறீர்களா? படிக்கிற மாணவன் இப்போது பைக்கில் செல்வது சரியாக இருக்குமா? இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? கருத்தை தட்டி விடுங்க பாஸ்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+