அப்பா இறந்ததும் கங்கை அமரன் வந்து சொன்னதை மறக்க முடியாது.. இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உருக்கம்
சென்னை: இசையமைப்பாளர் தேவா காலமாகி சில நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவருடைய இழப்பிலிருந்து அவருடைய குடும்பத்தினரால் இன்னும் வெளியே வர முடியாத சூழ்நிலையில் தான் இருக்கின்றனர். இந்த நிலையில் தன்னுடைய அப்பா தேவாவின் புகைப்படத்திற்கு முன்பு நின்றபடி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா கங்கை அமரன் பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேனிசைத் தென்றல் தேவா
பாடகர், இசை அமைப்பாளர் என்பதையும் தாண்டி தேவாவை பலருக்கும் பிடிக்கும். அதற்கு காரணம் எப்போதுமே அவருடைய பேச்சில் பாசிட்டிவ் இருக்கும். தான் ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்கள் பற்றி பல இடங்களில் பேசி இருக்கிறார், ஆனாலும் தன்னுடைய கடந்த காலத்தை மறக்காமல் இப்போது உள்ள தலைமுறையினருக்கு வழிவிட்டு, அவர்கள் தனது பாடலை அவர்களுடைய படங்களில் பயன்படுத்தினால் கூட காப்பி ரைட் கேட்க மாட்டேன், காரணம் இப்போதைய இளம் தலைமுறை என்னுடைய பாடலை கேட்கிறார்கள் என்றால் என்னுடைய பாடல்களை இளம் தலைமுறை இயக்குனர்கள் அவர்களுடைய படங்களில் வைப்பது தான், அது எனக்கு ரொம்பவும் சந்தோஷம்தான் என்று பெருந்தன்மையாக பேசியிருந்தார்.
எதிர்பாராத இழப்பு
பூமியில் பிறந்தால் எல்லோருக்கும் ஒரு நாள் இறப்பு வரும் என்பது அனைவருக்கும் தெரிந்து இருந்தாலும் நமக்கு பிடித்தவர்களின் இழப்பின் வருத்தம் இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த வருத்தத்தோடு தான் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அதில் என்னுடைய அப்பா இறந்துவிட்டார் என்பதை இப்ப வரைக்கும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் திடீரென்று அப்பா இறந்து விட்டார் என்று சொன்னதும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நான் தவித்துக் கொண்டிருந்தேன்.
கங்கை அமரன் சொன்ன அட்வைஸ்
அந்த சமயத்தில் தான் கங்கை அமரன் சார் வந்து, என்கிட்ட அப்பாவை எப்படி அடக்கம் பண்ண போறீங்க என்று கேட்டார். எனக்கு எதுவுமே தெரியல என்று நான் சொன்னேன். அப்போது அவர் நீ தான் தைரியமாக இருக்க வேண்டும், நீ தான் இந்த வீட்டிற்கு இனி எல்லாமே. நீ இப்படி குழப்பமாக இருக்காத, இங்கே பொதுவாக எல்லோருக்கும் இறுதி சடங்கு செய்வதுபோல வேண்டாம். உங்களுடைய சொந்த ஊரில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யலாம், அப்போ நாளைக்கு சாமி கும்பிடுவதற்கும், அவர் நம்ம கூடவே இருப்பார் என்று அந்த நேரத்தில் எனக்கு அவர்தான் சொன்னார்.
பலருடைய ஆறுதல்
எனக்கு அதற்கு பிறகு தான் அந்த ஐடியாவே தோன்றியது. இல்லை என்றால் நான் குழப்பத்தில் தான் இருந்தேன், அப்பாவும் கங்கை அமரனும் சம்பந்தக்காரங்களாக இருந்தாலும் எனக்கு சரியான நேரத்தில் அட்வைஸ் கொடுத்தாரு. அவருக்கு ரொம்ப நன்றி. அதுபோல அப்பாவிற்காக நிறைய பேரு உண்மையாகவே ஆறுதல் தெரிவித்து எங்க குடும்பத்திற்கு துணையாக இருக்கிறார்கள், அதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை என்று உருக்கமாக அந்த வீடியோவில் ஸ்ரீகாந்த் தேவா பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
