கோலா உருண்டையில் விழுந்த ஷாருக்கான்.. பாலிவுட்டை ஈர்த்த சிவாஜி வீட்டு "மட்டன் பால்ஸ்".. யாரந்த செஃப்
மும்பை: நடிகர் திலகம் வாழ்க்கை வரலாறு குறித்த 'சிவாஜி கணேசன்' என்ற நூலை சில வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் முனைவர் கா.வெ.சே மருது மோகன், எழுதியிருந்தார்.. இந்நிலையில், ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ள மருதுமோகன், அன்னை இல்லம் வீட்டு உணவு குறித்தும், சிவாஜி கணேசனுக்கு பாலிவுட் நடிகர்களிடமிருந்த தொடர்பு குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்.. இதனை சிவாஜி ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
Wow Tamizhaa என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மருது மோகன், "நடிகர் திலகம் சிவாஜிக்கு மீன் மிகவும் பிடிக்கம்.. முதல் மரியாதையில் மீன் சாப்பிடுவதைபோலதான், நிஜமாகவே சிவாஜி மீன் சாப்பிடுவார்..

கமலுக்கு தந்த விருந்து
தினமும் சிவாஜி வீட்டில் மீன் உணவு இருக்கும். அதிலும், விரால் மீன் என்றால் பிரியம். இதற்கெனவே பிரத்யேகமாக கொண்டு வருவார்கள். அதேபோல மதுரை அயிரை மீன் என்றால் பிடிக்கும். இதற்கெனவே மதுரையிலிருந்து ஃபிளைட்டில் அயிரை மீனை கொடுத்தனுப்பும் ஆட்களும் இருந்தனர்..
நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் வந்து 50 வருட நிறைவையொட்டி, சிவாஜி வீட்டில் விருந்து தரப்பட்டது.. யானை தந்ததால் செய்யப்பட்ட டைனிங் டேபிளில் 20 பேர் அந்த டேபிளில் உட்கார முடியும். அன்றைய தினம் உணவு பரிமாறியது சிவாஜி வீட்டு பெண்கள், பையன்கள், பேரப்பிள்ளைகள்தான்.
தாய்வீட்டு சீதனம்
பாலிவுட்டிலும் அனைவரிடமும் நல்ல நட்பை வைத்திருந்தார் நடிகர் திலகம்.. அமரதீபம் இந்தியில் எடுத்தபோது, தேவ் ஆனந்த்திடம் பழகினார்.. லதா மங்கேஷ்கரிடம் கடைசிவரை சகோதர பாசம் நீடித்தது.. ஒவ்வொரு தீபாவளிக்கும் லதா மங்கேஷ்கர் வீட்டுக்கு, தாய் வீட்டு சீதனமாக நிறைய கிப்ட்களை சிவாஜி கொடுத்தனுப்புவார். அவங்களும் சென்னை வரும்போதெல்லாம் அன்னை இல்லம் வீட்டில்தான் தங்குவார்..
அந்தகாலத்தில் படங்களுக்கு பர்மிட் கிடைக்காமல், இதற்கெனவே மும்பையிலிருந்து சிவாஜி வீட்டக்கு வந்த நடிகர்கள் அதிகம்.. சிவாஜி மீது ஷாருக்கானுக்கு நிறைய பக்தி உண்டு..
நடிகர் ஷாருக்கான்
ஒருமுறை தாஜ் ஓட்டலில் ஷாருக்கான் தங்கியிருந்தபோது, நல்ல சாப்பாடாக கொடுங்க என்று ஓட்டலில் கேட்டிருக்கிறார்.. உடனே சிவாஜி வீட்டுக்கு போன் செய்த தாஜ் ஓட்டல்காரர்கள், சிவாஜி வீட்டில் வேலை பார்க்கும் சமையல்காரர்களை தாஜ் ஓட்டலுக்கு வர சொல்லியிருக்கிறார்கள்..
எப்போதுமே சிவாஜி வீட்டில் மட்டன் கோலா உருண்டை செய்தால், அதனை தேங்காய் நாரினால் செய்யப்பட்ட கூடையில் வைப்பது வழக்கமாகும்.. அதுபோலவே ஷாருக்கானுக்கும் தாஜ் ஓட்டலில் கோலா மட்டன் உருண்டை செய்து தந்திருக்கிறார்கள் சிவாஜி வீட்டு சமையல்காரர்கள்..
மட்டன் பால்ஸ்
இது எதுவுமே தெரியாமல், ஷாருக்கானும் அந்த உருண்டைகளை பார்த்துவிட்டு, இது என்ன என்று கேட்டாராம்.. இது மட்டன் பால்ஸ் என்று ஓட்டல் ஊழியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.. உடனே ஒவ்வொன்றாக ஷாருக்கான் சாப்பிட துவங்கியிருக்கிறார்.. அந்த ருசி மிகவும் பிடித்துப்போய்விடவும், இனிமேல் இந்த மட்டன் பால்ஸ் சாப்பிடுவதற்காகவே தாஜ் ஓட்டல் வருவேன் என்றாராம்..
அதற்கு பிறகுதான், சிவாஜி கணேசன் வீட்டு செஃப் உங்களுக்காகவே இங்கே வந்து, இந்த மட்டன் பால்ஸ்சமைத்து தந்தார் என்று சொல்லியிருக்கிறார்கள்.. மும்பையில் ஷாருக்கான் பிளைட்டிலிருந்து இறங்கியதுமே, இதைத்தான் செய்தியாளர்களிடம் முதல் விஷயமாக சொல்லி மகிழ்ந்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications