இளையராஜாவுக்காக காத்திருந்த அப்பாவின் உயிர்! அறை கதவை திறந்ததும்..! மலேசியா வாசுதேவன் மகள் உருக்கம்
சென்னை: இளையராஜா சாருக்காக என் அப்பாவோட உயிர் காத்திருந்தது என மலேசியா வாசுதேவனின் மகள் பிரசாந்தினி வாசுதேவன் உருக்கமாக தெரிவித்துள்ளார். இவர் 8000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
கேரளாவை பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவை சேர்ந்த சத்து நாயர்- அம்மாளு தம்பதிக்கு 8ஆவது மகனாக பிறந்தவர் வாசுதேவன். மலேசியாவில் பிறந்ததால் மலேசியா வாசுதேவன் என அழைக்கப்பட்டார். இவர் மலேசியாவில் தமிழர் இசைக் குழுவில் முக்கிய பாடகராக இருந்தார்.

சென்னை வந்து திரைப்பட வாய்ப்புகளை தேடிய போது பாலு விக்கிற பத்தம்மா என்ற பாடலை பாடி அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கமலுக்காக 16 வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடலை பாடினார். இதையடுத்து ஏராளமான படங்களை பாடியிருந்தார்.
படங்களில் வில்லன்
மேலும் படங்களில் வில்லனாகவும் நடித்திருந்தார். இவர் 85 படங்களில் நடித்துள்ளார். இவர் 1980-களில் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். இவர் ரஜினிகாந்த் , கமல்ஹாசனுக்காக நிறைய பாடல்களை பாடியுள்ளார்.
கணீர் சப்தம்
அவர் பாடும் பாடல் அந்த நடிகர்களே பாடும்படியாக இருக்கும். குரலில் அத்தனை கணீர் சப்தம் இருக்கும். ஆட்டுக் குட்டி முட்டையிட்டு பாடலை எஸ்பிபிதான் பாட வேண்டும். ஆனால் அன்றைய தினம் அவருக்கு குரலில் ஏதோ பிரச்சினை இருந்ததால் அந்த வாய்ப்பு மலேசியா வாசுதேவனுக்கு கிடைத்தது.
பூ முடித்து சின்னக்கா
அது போல் செவ்வந்தி பூ முடித்து சின்னக்கா பாடலும் மிகவும் புகழ் பெற்றது. ஒரு தங்க ரதத்தில், தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி, கோடை கால காற்றே, பூங்காற்று திரும்புமா, வெட்டி வேரு வாசம், ஒரு கூட்டு கிளியாக , பொதுவாக என் மனசு தங்கம், தானந்தன கும்மிகொட்டி, பொட்டு வச்ச தங்ககுடம், ஆசை நூறு வகை, என்னம்மா கண்ணு சவுக்கியமா உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அன்னபூரணி
இவர் அன்னபூரணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யுகேந்திரன், பிரசாந்தினி, பவித்ரா ஆகிய பிள்ளைகள் உள்ளனர். இதில் யுகேந்திரன் திரைப்படங்களில் நடித்தும் பாடல்களை பாடியும் உள்ளார்.
பிரசாந்தினி
பிரசாந்தினி, வாரணம் ஆயிரம் படத்தில் முன்தினம் பார்த்தேனே பாடலை பாடியிருந்தார். இவர் தனது தந்தை மலேசியா வாசுதேவன் குறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அப்பாவின் உடல் நிலை சரியில்லாமல் போனது.
அப்பாவால பேச முடியலை
அவரை மருத்துவமனையில் சேர்ந்திருந்தோம். அங்கு நாங்கள் பார்க்க போயிருந்தோம். அப்போது அப்பாவால் பேச முடியவில்லை. எங்களை பார்த்ததும் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்தது. நாங்கள் அவருக்கு தைரியம் சொன்னோம்.
இளையராஜா சாருக்காக
இளையராஜா சாருக்காக அவருடைய உயிர் காத்துக் கொண்டிருந்தது என நான் நினைக்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதுமே இளையராஜா சார், மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.
அறையின் கதவு
அப்பா இருந்த அறையின் கதவை திறந்து அவர் உள்ளே வந்ததும் அப்பாவின் உயிர் பிறந்தது. இளையராஜா சார், வாசு வாசு என அழைத்து பார்த்தார். நண்பர்கள் என்றால் அடிக்கடி பார்த்துக் கொள்வார்கள், வெளியே போவார்கள். அப்படியெல்லாம் இல்லை. இவங்க நட்பு கொஞ்சம் வித்தியாசமான நட்பு.
இப்படிப்பட்ட நண்பர்கள்
அடிக்கடி தொடர்புல இருக்கிற நட்பு கிடையாது. மனசுக்குள்ள பேசிப்பாங்கன்னு சொல்வாங்க இல்லையா அது போன்ற ஒரு நட்புதான் இவர்களது என நான் நினைக்கிறேன். இவ்வாறு பிரசாந்தினி உருக்கமாக தெரிவித்திருந்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications