ஒரு பொண்ணு 2வது கல்யாணம் பண்ண கூடாதா? அவ்ளோ அசிங்கமா பேசினாங்க.. மைனா நந்தினி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி சீரியலில் பிரபலமான மைனா நந்தினி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் தன்னுடைய முதல் கணவர் இறந்த பிறகு தான் இரண்டாவது திருமணம் செய்யும்போது ஏற்பட்ட அவமானங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

மைனா நந்தினி சின்னத்திரையில் இருந்து இப்போது வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் விஜேவாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதற்குப் பிறகு சரவணன் மீனாட்சி சீரியல் தான் பெரிய அளவில் இவருக்கு பிரபலத்தை கொடுத்தது. அந்த சீரியலில் மைனா கேரக்டரில் கதாநாயகி ரச்சிதா மகாலட்சுமியின் தோழியாக நடித்திருப்பார்.

Vijay TV Myna Nandini

மைனா நந்தினி திருமணம்

சரவணன் மீனாட்சி சீரியலுக்குப் பிறகு ஜீ தமிழில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் 2017 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கார்த்திக்கும் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் திருமணமான ஆறு மாதத்திலேயே கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் யோகேஸ்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

மைனா நந்தினி பேட்டி

இந்த நிலையில் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் youtube சேனலில் மைனா நந்தினி மற்றும் யோகேஸ்வரன் இருவரும் இணைந்து ஷார்ட் பிலிம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இது பற்றி சமீபத்தில் மைனா நந்தினி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல பிரச்சனைகளை வைத்துதான் தான் ஷார்ட் பிலிம் எடுத்து வருவதாக கூறியிருந்தார்.

வருத்தமான காட்சி

தன்னுடைய ஷார்ட் பிலிம்களின் எபிசோடு எபிசோடாக கதை ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பல தலைப்புகளில் எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு எபிசோடு மலடி, விதவை என்று பெயர் வைத்திருக்கிறார். இது குறித்து எல்லோரும் கேட்கிறார்கள். ஆனால் இதில் விதவை என்று எபிசோடில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். ஏன் என்றால் என்னுடைய வாழ்க்கையில் அந்த ஒரு தருணத்தை நான் கடந்து வந்தேன்.

அழ வைத்த காட்சி

இந்த நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று சொல்கிற மாதிரிதான் நான் என்னுடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் நடைபெற்றது. விதவை எபிசோடில் என்னிடம் அந்த அம்மா உனக்கு இப்போ வேற ஆம்பளையே கிடைக்கலையா? என் பையன் தான் உனக்கு கிடைச்சானா? என் பையனையும் கொல்ல போறியா? என்று கேட்பார். அந்த வார்த்தையை கேட்டதும் என்னை அறியாமலேயே நான் கதறி அழுதுவிட்டேன்.

Vijay TV Myna Nandini

மனதிற்குள் கவலை

சில மணி நேரம் அழுது கொண்டே இருந்தேன். பிறகு தான் சூட்டிங் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். அந்த அளவிற்கு என்னுடைய மனதிற்குள் காயம் இருக்கிறது. வெளியே சிரித்துக்கொண்டிருப்பதால் எல்லோரும் இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோருடைய மனதிற்குள் வெளியே சொல்ல முடியாத கவலைகள் இருக்கிறது.

குழந்தை இல்லாத பிரச்சனை

அதுபோல மலடி என்ற எபிசோடில் நடிக்கும் போதும் எனக்கு அது பர்சனலா ஃபீல் ஆகிடுச்சு. ஏனென்றால் எனக்கு யோகேஸ்வரன் உடன் திருமணம் நடந்த 15 நாட்களுக்குள் பீரியட்ஸ் வந்துவிட்டது அப்போது என்னுடைய மாமியார் என்னிடம் வந்து என்ன இப்படி ஆயிடுச்சுன்னு கேட்டாங்க எனக்கு அது அதிர்ச்சியா இருந்துச்சு. அடுத்த மாசமும் எனக்கு பீரியட் வந்ததும் அதையே கேட்டாங்க. நான் வாரிசு பார்க்கணும்னு நினைக்கிறேன் ஆனா நீங்க இப்படி பண்ணிட்டு இருக்கீங்கனு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. அது ரொம்ப வருத்தமா இருந்துச்சு.

கமெண்ட்ஸ்

அடுத்த மாசத்தில் கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருந்தேன் நல்லவேளை கர்ப்பம் ஆகிட்டேன். ஆனால் இதே சூழ்நிலை இன்னும் எத்தனை பெண்கள் அனுபவிச்சிட்டு இருக்காங்க என்ற வருத்தத்தில் தான் அந்த காட்சிகளில் நடித்தேன். ஆனால் அந்த எபிசோடு வந்த பிறகு சிலர் இன்னும் அதே வேதனையில் இருப்பதாகவும், இதுபோல அவமானங்கள் சந்திப்பதாகவும் சொல்லி வருகிறார்கள்.

வருத்தம்

நான் 15 வருடங்களுக்கு முன்பு கணவரை இழந்து பட்ட வலியும் வேதனையும் எனக்கு மட்டும்தான் தெரியும். அதே பிரச்சனை இப்போதும் பலருக்கும் நடந்து கொண்டிருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது என அந்த பேட்டியில் மைனா நந்தினி பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+