இது உலக மகா நடிப்புடா சாமி.. ராஜுவுக்காக உருகி அழும் சீரியல் கதாநாயகி... அதிர்ச்சியில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் புது கதையை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

கத்தி கேரக்டரில் நடிக்கும் ராஜுவை நினைத்து கதறி அழும் கதாநாயகியை கமெண்டுகளில் வச்சி செய்கின்றார்கள் ரசிகர்கள்.

நெட்டிசன்களிடம் சிக்கும் சீரியல்

நெட்டிசன்களிடம் சிக்கும் சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கதை தற்போது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியல் ஏற்கனவே முதல் பாகம் ஹிட்டானதை தொடர்ந்து இரண்டாவது பாகம் தொடங்கப்பட்டது. ஆனால் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் ஒற்றுமை இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக கதை பல்வேறு திருப்புமுனைகள் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியல் பலமுறை நெட்டிசன்களால் கலாய்க்க பட்டு கொண்டிருக்கிறது.

காமெடியில் அறிமுகமாகி கதாநாயகனாக கலக்கல்

காமெடியில் அறிமுகமாகி கதாநாயகனாக கலக்கல்

நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது பாகத்தில் கதாநாயகனாக செந்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஆரம்பத்தில் ரட்சிதா நடித்து வந்தார். தற்போது அவருக்கு பதிலாக மோனிஷா நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் காமெடி நடிகராக ஆரம்பத்தில் அறிமுகமாகி தற்போது கதாநாயகனுக்கு இணையாக நடித்துக் கொண்டிருந்த ராஜு இந்த நிகழ்ச்சியை விட்டுவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுவிட்டார். ஆனால் அவருடைய இடத்திற்கு இதுவரைக்கும் சீரியல் தரப்பிலிருந்து வேறு நடிகர்களை அறிமுகப்படுத்தவில்லை.

கதையையே மாற்றிவிட்டார்கள்

கதையையே மாற்றிவிட்டார்கள்

ராஜு இந்த சீரியலில் கத்தி கேரக்டரில் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பதிந்து விட்டதால் இவரை தவிர வேறு யாரையும் சீரியல் குழுவினர் அறிமுகப்படுத்தாமல் இருந்தாலும் கதையை மாற்றிவிட்டனர். கத்தியாக நடிக்கும் ராஜு யாரிடமும் சொல்லாமல் எங்கேயோ சென்று விட்டது போல இதுவரைக்கும் கதையை உருட்டிக் கொண்டிருக்கின்றனர். கேரக்டரை அடிக்கடி போனில் மட்டுமே காட்டி பார்த்து பீல் பண்ணி கொண்டிருக்கும் காயத்ரி ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்களும் வகைவகையாக கலாய்த்து வருகின்றனர்.

விஜய் டிவியின் குசும்பு

விஜய் டிவியின் குசும்பு

இன்றைய ப்ரமோவில் கத்தியை நினைத்து ஏங்கி கதறி அழும் காயத்ரிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக ரசிகர்கள் பலர் கமெண்ட்டுகளை அனுப்பி வருகின்றனர். வேற எங்க பிக்பாஸில் தான் உங்களுடைய கத்தி இருக்கிறார். இன்னும் 20 நாளில் வெளியே வந்ததும் சூட்டிங் வந்துவிடுவார், கதறி அழ வேண்டாம் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவிக்கு குசும்பு அதிகம் தான் முதலாவதாக பிக் பாஸ் ப்ரமோ போட்டு அதில் ராஜுவை காட்டிவிட்டு அடுத்ததாக இந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் ப்ரமோவை வெளியிட்டு இருக்கிறார்களே என்று வண்டி வண்டியாக கலாய்த்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+