Naam iruvar namakku iruvar serial: பெய்யுதே மழை.. தேவி மடியில்... மாயன் செய்த மாயமென்ன?
சென்னை: கேட்டது கிடைத்ததா ? அனுபவிக்கணும். எப்படி ஏதுன்னு ஆராய கூடாது. இருந்தாலும் பெய்யென பெய்யுதே இந்த மழை மாயன் செய்த மாயம்தான் என்ன?
தேவியின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிய மாயனிடம் தனது சந்தோஷத்தை நிறைவை காட்டும் நேரம் இது.அதுதான் அவள் மவுனம் என்கிறாள்.
அதற்கேற்ப அவன் மவுனமான நேரம் பாடலை இசைக்க விடுகிறான். தேவி மாயனின் மனதை குளிர்விக்க மாயன் மழை வர செய்து அவளையே குளிர்விக்கிறான்.

நிறைஞ்ச மனசு
ஏண்டா எனக்கு பீஸ்ஃபுல்லா இருக்குன்னு சொல்றேனே இதுக்கு அர்த்தம் தெரியுதா உனக்குன்னு கேட்கிறாள் தேவி.அவள் முகம் நிறைய மகிழ்ச்சி. இதழ்கள் விரிக்காத மெல்லிய புன்னகை. அர்த்தம் தெரியாதுங்க... ஆனா உங்க முகத்தில் பல உணர்ச்சிகளை பார்க்கும்போது அர்த்தம் புரியுதுங்கன்னு சொல்றான் மாயன்.

ஒரு மாதிரி ஆள்
நீ ஒரு மாதிரியான ஆள்தாண்டான்னு தேவி சொல்ல, ஏங்க மொட்டையா இப்படி சொன்னான்னு இழுக்க.. பார்க்க கரடு முரடா இருந்தாலும் உனக்குள்ள எனக்கு புடிச்ச மாதிரி, என்னை சந்தோஷப படுத்தற மாதிரி ஒருத்தன் இருக்காண்டா. நீ பக்கத்துல இருந்தா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

மழை இருந்தால்
இந்த நேரத்துல மழை பெய்தா நல்லாருக்கும்னு தோணுது. மனசுக்கு இதமா இருக்கும்னு தோணுதுன்னு சொல்கிறாள். ஏங்க... உங்களுக்கு மழை பெய்யணும்..அவ்ளோதானே.. அப்படி வந்தா என்ன செய்வீங்கன்னு கேட்கிறான். என்ன செய்யணும்னு தேவி கேட்க, என்னை கட்டி புடிச்சு ஒரு உம்மா தரணும்னு சொன்னவன்.. இல்லைங்க சும்மா..சும்மான்னு மழுப்பிட்டு மழையில நனைஞ்சு என் கூட டான்ஸ் ஆடணும்னு கேட்கறான்.

திடீர்னு மழை
எப்படிடா திடீர்னு மழை பெய்யும்னு கேட்கும் போதே, மழையே பெய்யுன்னு சொன்ன மாதிரி மழை கொட்டுது. சொன்னபடி தேவியை இழுத்து சென்று அடடா மழைடா அடை மழைடான்னு டான்ஸ் ஆடறாங்க. திடீர்னு மழை நிற்க ரைட்டு, ரெண்டு ஸாங்டா ..ஏங்க.. ரெண்டு சாங் சொல்லி இருக்கேன் இன்னொரு டான்ஸுங்கன்னு சொல்றான்.
தேவியும் சிரித்தபடி ஓகே சொல்ல, மிக நெருக்கமாக மழையில் நனைந்தபடி பாடல். இடுப்பை அனைத்து பாடுகிறான். சுத்தி வந்து கையை இழுக்கிறான். கடைசியில் ஒரு காலை மண்டியிட்டு ஒரு காலை குத்த வைத்து,தேவியின் கையை பிடிச்சு அந்த காலில் உட்கார வைக்கிறான். தேவி உட்கார்ந்து அவன் முகத்தை பார்த்து, கன்னத்தில் கை வைத்து இதமாய் தடவி கண்ணோடு கண் நோக்கி சிரிக்கிறாள்.
இதுதான் மாயன் செய்த மாயம்..காதல் வலையில் விழுந்தாள் தேவி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications