ஆரம்பமே அமர்க்களம், நானும் ரவுடிதான்.. மல்லுக்கட்டும் சிவாங்கி.. வெங்கடேஷ் பட் இப்படி சொல்லிட்டாரே
சென்னை: சன் டிவியில் வரும் ஞாயிறு முதல் ஒவ்வொரு வாரமும் மதிய 12.30 மணிக்கு நானும் ரவுடிதான் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக சிவாங்கி களம் இறங்குகிறார். அதுபோல இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் சன் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நான்கு சீசன்களாக வெற்றிகரமாக இயக்கிய மீடியா மேஷன்ஸ் நிறுவனம் விஜய் டிவியில் இருந்து விலகிய பிறகு சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொடங்கி அதில் வெற்றியும் கண்டது. ஆரம்பமான முதல் சீசனிலேயே இந்த நிகழ்ச்சிக்கு என்று ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் மீடியா மிஷன்ஸ் நிறுவனம் நானும் ரௌடி தான் என்ற நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறது.

புதுமையான முயற்சி
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மோதும் பிரமாண்டமான விளையாட்டு நிகழ்ச்சியாக இருக்கிறது. அதுபோல பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் புதுமையாக முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிக்கும் படியான நினைவாற்றல், பொது அறிவு திறன் கலந்த கலவையான போட்டிகள் நிறைந்து காணப்படுகிறது.
தொகுப்பாளினியான சிவாங்கி
இதனால் குழந்தைகளோடு பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கலாம். ஒவ்வொரு எபிசோட்டிலும் நான்கு பரபரப்பான சுற்றுகள் இடம் பெறுவதில் பெரியவர்கள் சிறிய குழந்தைகள் எதிர்கொண்டு அவர்களை தோற்கடிக்க வேண்டும். சன் டிவியின் பிரபலமான அஸ்வந்த் பெரியவர்களின் அணியை வழிநடத்த, ஷிவாங்கி கிருஷ்ணகுமார் குழந்தைகள் சார்பாக பொறுப்பாளராக இருக்கிறார்.
குழந்தைகளுக்கான நிகழ்ச்சி
சில வருடங்களுக்கு முன்பு இமான் அண்ணாச்சி குட்டீஸ் சுட்டீஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருப்பார். அந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் குதர்க்கமான கேள்விகள் வித்தியாசமான சந்தேகங்கள் ரசிகர்களையும் ரசிக்க வைக்கும். அதே நேரத்தில் சிந்திக்க வைக்கும். அதுபோலத்தான் இந்த நிகழ்ச்சிகளிலும் பெரியவர்களை தோற்கடிப்பதற்காக குட்டி பசங்க பேசும் வார்த்தைகள் பிரமிக்க வைக்கிறது.
சிறப்பு விருந்தினர்கள்
இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்க இருக்கிறது. முதல் வாரத்தில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் நடிகர் தீனா, சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்னம் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அபி நட்சத்திரா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள். இதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
செஃப் வெங்கடேஷ் பட் காமெடி
அதில் குழந்தைகளோடு குழந்தையாக மாறி வெங்கடேஷ் பட் வாக்குவாதம் செய்கிறார். அப்போது ஒரு டைனோசரை பார்த்ததும் எனக்கு டைனோசர் பார்த்தாலே பயம் என்று சொல்ல, அதற்கு தீனா, பயப்படாதீங்க டைனோசர் வெஜிடேரியனை சாப்பிடாது என்று டைமிங் காமெடி அடித்திருக்கிறார். குக் வித் கோமாளி, டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் எப்படி காமெடியும் பரபரப்பும் நிறைந்ததாக இருக்குமோ அதுபோல இந்த நிகழ்ச்சியும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சன் டிவி எடுத்த முடிவு
ஏற்கனவே விஜய் டிவியில் இருந்து பல பிரபலங்கள் வெவ்வேறு சேனல்களுக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சேனலும் தங்களுடைய டிஆர்பியை தக்க வைத்துக் கொள்வதற்காக பிரபலமாக இருக்கும் நபர்களை தங்கள் வசம் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது சன் டிவி எடுத்துருக்கும் முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
புது நிகழ்ச்சி
ஆரம்பத்தில் இருந்தே சன் டிவி சேனலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் டிஆர்பியில் கூட டாப் 10 இடத்தில் சன் டிவி சீரியல்கள் தான் அதிகமாக இடம் பிடிக்கிறது. சன் டிவிக்கு போட்டியாக தான் பல சேனல்கள் தொடங்கப்பட்டது. இப்போது இளைஞர்களை கவறும் வகையில் சன் டிவியில் புதுப்புது நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. இது மக்கள் மத்தியில் ரசிக்கப்படுகிறதா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications