Nachiyarpuram Serial: தம்பதியர் காதலர்களாக கலக்குங்க...!
சென்னை: சீரியல் நடிகை ரக்ஷிதா சன் டிவி முதல் பல தொலைக்காட்சி சேனல்களில் நடித்தவர். ஆனாலும் அவரை அடையாளம் காட்டியது விஜய் டிவிதான்.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாம் சீசன், மூன்றாவது சீசன் என்று ஆரம்பித்து பெரும் புகழடைந்தார்.அதற்குப் பிறகு விஜய் டிவியின் எந்த சீரியலிலும் இவர் நடிக்கவில்லை.
பல ரியாலிட்டி ஷோக்களில் கணவர் தினேஷுடன் கலந்துக் கொண்ட இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஜீ தமிழ் டிவியின் எதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கறது, நடுவராக இருப்பது என்று இருந்தார்.

ஜீ தமிழ் டிவி
அப்படியே ஜீ தமிழ் டிவியின் நாச்சியார்புரம் சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிப்பில் கலக்கி வருகிறார் . அது மட்டுமா இவரது காதல் கணவர் தினேஷ்தான் இவரது ஜோடியாகவும் இந்த சீரியலில் நடித்து இருக்கார். இருவரும் ரியல் தம்பதியாக இருந்தாலும், ரீலாக காதலர்களாக நடிக்கிறார்கள்.

மதுரை பையன்
ரக்ஷிதா பெங்களூரு பொண்ணு, இவர் காதலித்த தினேஷ் மதுரைப் பையன் இருவரும் பிரிவோம் சிந்திப்போம் சீரியலில் நடிக்கும்போது காதலிக்க ஆரம்பித்து பின்னர் கல்யாணமும் செய்துகொண்டு இருக்கிறார்கள். பெங்களூருவில் இருந்த போதே தமிழ் நன்றாக பேசுவேன். எங்களை சுத்தி தமிழ் பேசறவங்கதான் இருந்தாங்க என்று கூறுகிறார் ரக்ஷிதா.

பிடிக்கும் மதுரை
கணவர் ஊரு மதுரை ரொம்ப பிடிக்குமாம். மாமியார் எந்த வேலையும் செய்ய விடாமல் தனது கையில் வச்சு தாங்குவது போல பார்த்துப்பாங்க. அவ்வளவு அன்பு என் மேல என்றும் கூறி பூரித்துப் போகிறார். மதுரையில் இரவு வெகு நேரம் ஆனாலும் ரோட்டோர சாப்பாடு கடைகள், டீ கடைகள் இரவு வெகு நேரம் திறந்து இருக்கும்.

இட்லி சாப்பிட
அப்போது ஊர் சுற்றி வந்து இட்லி சாப்பிடவும் டீ சாப்பிடவும் ரொம்ப பிடிக்கும். அந்த ஊரில் விடிய விடிய தொழிலாளர்கள் வேலை செய்வார்கள். சாப்பிடுவார்கள், டீ குடிப்பார்கள் அதனால் எப்போதும் மதுரை நகரம் ஜேஜே என்று இருக்கும் என்று கூறுகிறார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications