Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புசுபுசுன்னு இருந்த நாதஸ்வரம் மலர் திருமணத்திற்கு பிறகு இப்படி மாறி விட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தவர்கள் சீரியலுக்கு வருவது புதிதல்ல இருந்தாலும் சீரியலில் டாப்ல இருப்பது ஒரு சில நடிகைகள்தான்.

அந்த வகையில் நாதஸ்வரம் சீரியலில் மலராக நடித்துக்கொண்டிருந்த சுருதிகா இணையதளத்தில் போட்டிருக்கும் போஸ்ட்கள் வைரலாக பரவி வருகிறது.

இவர் மலேசியாவில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் தற்போது சென்னையில் குடியேறி பக்கா சென்னை பெண்ணாக மாறி விட்டார்.

 கிராமத்துப் பெண்

கிராமத்துப் பெண்

வெண்ணிலா கபடி குழுவில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து இருப்பது ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. இந்த கேரக்டருக்கு பக்காவா பொருந்துகிற முக அழகும் குரலும் இவரது ரசிகர்களுக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கிறதாம். இவர் நடிகை மட்டுமல்ல சில கதாநாயகிகளுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

 தனுஷின் தங்கை

தனுஷின் தங்கை

வேங்கை படத்தில் தனுஷின் தங்கையாக கலக்கியிருப்பார். உண்மையாக ஒரு அண்ணன் தங்கச்சி பாசத்தை அப்படியே கண்முன் காட்டி இருப்பார். அப்பா மேலும் பாசமும் மரியாதையும் அழகாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இப்ப வரையிலும் தனுசை இவர் அண்ணனாக தான் பார்க்கிறாராம்.அவருடன் தங்கை போல உரிமையோடு பேசுவாராம்.

 நாதஸ்வரம்

நாதஸ்வரம்

சில படங்களில் இவர் சின்ன சின்ன ரோல்களில் நடித்து கொண்டிருந்தாலும் சீரியலில் நாதஸ்வரம் சீரியல் மூலமாகத்தான் கொடிகட்டி பறக்க ஆரம்பித்து இருக்கிறார். இந்த சீரியலில் மலரென்று கேரக்டரில் நடித்திருந்தார் என்று சொல்வதை விட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சீரியலில் இவர் பணக்கார வீட்டுப் பெண்ணாக நடித்திருப்பார்.

 கட்டாயத் திருமணம்

கட்டாயத் திருமணம்

பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் கதாநாயகனாக கோபி மீது காதல் கொண்டு அந்த சமயத்தில் இன்னொருவரின் கட்டாய திருமணத்தை இவர் வேண்டாம் என்று உதறித் தள்ளி விட்டு மறுபடியும் கோபியர் திருமணம் செய்து கொண்டு வாழ்வர். இது முதலில் சில ரசிகர்களுக்கு இந்த கேரக்டர் இரண்டாவது திருமணம் பண்ணுவது பிடிக்கவில்லை என்றாலும் கொஞ்ச நாட்கள் கழித்து ரசிகர்கள் இவரை ஏற்றுக் கொண்டார்கள்.

 திடீர் திருமணம்

திடீர் திருமணம்

இந்த சீரியலின் வெற்றிக்கு பிறகு பல சீரியல்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் .இந்த நிலையில் இவருக்கு திருமணம் முடிந்து ரசிகர்களை கொஞ்சம் ஷாக்காக வைத்து விட்டார். இவரது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரைப்படத் துறையினர் முதல் பிரபலங்கள் வரை கலந்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் தற்போது இவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார் .இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

 கணவர் வரலையே

கணவர் வரலையே

மார்ச் மாதம் இவரது கணவர் ஊருக்கு திரும்பி வருவதாக இருந்த நேரத்தில் இந்த லாக்டோன் வந்ததால் இவர் வர முடியவில்லையாம் இதனை நினைத்து சுருதிகா ரொம்ப பீல் பண்ணியிருக்கிறார். அதன்பிறகு சூட்டிங் நடைபெறாததால் வீட்டிலேயே இருந்து இவர் இப்போ பிட்டாகவும் கூடுதல் அழகாகவும் மாறிவிட்டாராம். இதைப்பற்றி ரசிகர்கள் கமெண்ட்களை போட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் நான் சூட்டிங் இல்லாமல் இப்போது வீட்டில் இருப்பதால் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்வதால் கொஞ்சம் மெலிந்து விட்டேன்.

Recommended Video

    சீரியல் நடிகை Navya Swamy க்கு கொரோனா உறுதி • Vani Rani, Aranmanai Kili
     நல்லா மெலிஞ்சுட்டாரு

    நல்லா மெலிஞ்சுட்டாரு

    நான் மெலிவதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை என்று கூறியிருக்கிறார். திருமணத்திற்கு பிறகு இவர்களது மாமியாரும் இவரிடம் நல்ல பாசமாக இருக்கிறாராம் . அதனால் என் திருமண வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இரண்டு பையன்கள் என்பதால் இவரை பெண் போல பார்த்துக் கொள்கிறாராம் .இதனால் சந்தோஷமாக இருப்பதால் கொஞ்சம் அழகு கூடி பளபளப்பாக இருக்கிறீர்களா என்று சில ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+