தன்னை போல மாற்றுத்திறனாளியை, காதலித்து திருமணம் செய்த நாடோடிகள் பட நடிகை.. இப்படி ஒரு காரணமா?
சென்னை: சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் பிரபலமான அபிநயாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்று இருந்தது. 15 வருடங்களாக காதலித்து வந்த தன்னுடைய காதலரை குடும்பத்தினரின் சம்மதத்தோடு அபிநயா திருமணம் செய்திருந்தார். அவருடைய கணவர் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பொதுவாக சினிமாவில் நடிக்கும் ஒரு சிலரை பார்த்தாலே ஏதோ பக்கத்து வீட்டு பெண் போன்று இருப்பார்கள் அதுபோல ஒருவர்தான் நடிகை அபிநயா. இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். அதிலும் நாடோடிகள், ஈசன் போன்ற படங்கள் எல்லாம் அவருடைய நடிப்பை அழுத்தமாக காட்டி இருந்தது.

அழகான நடிப்பு
ஈசன் திரைப்படத்தில் வாய் பேச முடியாத கேரக்டரில் அபிநயா நடித்திருப்பார். ஆனால் நிஜத்திலேயே அபிநயாவிற்கு காது கேட்காது, வாய் பேச முடியாது. ஆனாலும் இந்த குறைபாடு தெரியாத வகையில் தன்னுடைய திறமையால் அவர் தமிழில் மட்டும் அல்லாமல் மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். நாடோடிகள் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான அபிநயா அதை தொடர்ந்து ஈசன், மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
விஷாலோடு கிசுகிசுப்பு
மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிக்கும் போது விஷாலை காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பு அபிநயா விளக்கம் கொடுத்து இருந்தார். அதில் விஷால் என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட். நான் பேசும் சைன் மொழியை கற்றுக் கொள்வதற்காக அவர் முயற்சி செய்திருக்கிறார். நான் பேசுவது அவருக்கு புரியும். அதுபோல நபர் பேசுவது எனக்கு புரியும். செட்டில் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கும் நபர். என்னிடம் ஒரு சகோதரி போல பாசமாக பேசுவார்.
அபிநயா பதிலடி
அவரிடம் எல்லா விஷயங்களையும் தைரியமாக பேசலாம் என்ற ஒரு நம்பிக்கையை கொடுப்பார். சிலர் காசு சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக என்ன வேணாலும் பேசுகிறார்கள். அவர்கள் எப்படியோ போகட்டும் என்று விரக்தியாக பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து சில மாதங்களிலேயே அபிநயாவுக்கும் அவருடைய காதலர்கள் கார்த்திக்கிற்கும் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. பிறகு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருக்கு திருமணம் நடைபெற்றது.
முதல் சந்திப்பு
இது பற்றி அபிநயா ஒரு பேட்டியில் பேசும்போது, அபிநயாவை போலவே அவருடைய கணவர் கார்த்திக்கும் பேச்சு மற்றும் காது கேட்கும் திறன் குறைபாடு உடையவர் என்று கூறி இருக்கிறார். நாடோடிகள் படத்தின் தெலுங்கு பதிப்பகத்தில் தமிழில் நடித்தார். அதே கேரக்டரில் தான் தெலுங்கிலும் அபிநயா நடித்திருந்தார். தெலுங்கில் அவருக்கு பிரபலம் கிடைத்ததும் அவரை போல குறைபாடு உடையவர்கள் பலரை இணைத்து ஒரு குரூப் உருவாக்கி இருக்கிறார்கள்.
காதலரை சந்தித்த தருணம்
அந்த குரூப் நடத்திய நிகழ்ச்சியில் அபிநயா கலந்து கொள்ளும்போது அங்கு கார்த்திக்கும் கலந்து கொண்டிருக்கிறார். கார்த்திக் அபிநயாவை போலவே பேச்சு மற்றும் செவித்திறன் சவால் கொண்டவர் என்பதால் இருவரும் முதலில் அறிமுகமாகி இருக்கிறார்கள். அப்போது கார்த்திக் அவருடைய அக்காவோடு தான் வந்திருக்கிறார். அவருடைய அக்காவும் அதே மாதிரி சவால் கொண்டவர் அதனால் எல்லோரும் நன்றாக பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.

வெவ்வேறு சமூகத்தினர்
அப்போது அபிநயாவிடம் கார்த்திக்கும் அவருடைய அக்காவும் பாசமாக பேசி பிரெண்ட்ஸ் ஆகி இருக்கிறார்கள். அபிநயாவிற்கு இந்த உலகத்திலேயே ரொம்ப பிடித்தது அவருடைய அம்மா தானாம். அம்மாவின் பாசத்தை கார்த்திக் இடம் உணர்ந்ததால் எங்கள் நட்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடிந்தது, கார்த்திக் உடைய குணம் அபிநயாவின் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்ததால் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்றாலும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கிறார்கள்.
திருமணத்திற்கான காரணம்
கார்த்திக் பிசினஸ்மேன் ஆக இருக்கிறாராம். ஒரு கம்பெனியில் டைரக்டராக இருக்கிறாராம். அதுபோல இவர்களுடைய திருமணத்தை இன்னும் சில வருடங்கள் கழித்து வைக்கலாம் என்று நினைத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் அபிநயாவின் அம்மா இறந்து போயிருக்கிறார். அதனால் அவர் தனியாக இருந்ததால் அபிநயாவிற்கு திருமணத்தை நடத்த வேண்டும் என்று குடும்பத்தினர் முடிவெடுத்திருக்கிறார்கள். அபிநயா மற்றும் அவருடைய கணவர் கார்த்திக் இருவரும் மகிழ்ச்சியாக வாழ நம்முடைய திருமண வாழ்த்துக்கள்.












Click it and Unblock the Notifications