சமந்தாவை பிரிந்த பிறகு.. ஷோபிதாவை திருமணம் செய்ய, நாக சைதன்யா போட்ட முக்கிய நிபந்தனை என்ன தெரியுமா?
ஹைதராபாத்: நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா, கடந்த 4ம் தேதி, "பொன்னியின் செல்வன் புகழ்" நடிகை ஷோபிதா துலிபாலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 300 விருந்தினர்கள் மத்தியில் எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்திற்கு பிறகு, இந்த ஜோடி முதன்முறையாக அனுராக் காஷ்யப்பின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
அங்கு முதன்முறையாக இருவரும் ஒரு நேர்காணலில் பங்கேற்று தங்கள் திருமணம் குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். திருமணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மற்றும் ஷோபிதாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து நாக சைதன்யா அப்போது சுவாரசியமாக சிலவற்றை விளக்கினார்.

மனைவிக்கு நிபந்தனை விதிக்கும் விஷயத்தில், தான், எந்தவித தயக்கமும் காட்டவில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அந்த நிபந்தனையை ஷோபிதா ஏற்றுக்கொண்டதாலேயே அவரை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறினார்.
அப்படி என்ன நிபந்தனை: நாக சைதன்யா ஆரம்பத்திலிருந்தே தெலுங்கு சூழலுக்கு தொடர்பில்லாமல் வளர்ந்தார். சென்னையில் வளர்ந்ததால் தமிழ் மற்றும் ஆங்கிலமே அதிகமாக பேசினார். இதனால் தெலுங்கில் பேசுவதற்கு அவர் சற்று தடுமாறுகிறார். ஹைதராபாத் வந்த பிறகு தெலுங்கு கொஞ்சம் பழக்கமானாலும், இன்னும் முழுமையாக சரளமாக தெலுங்கு பேச முடியவில்லை என்ற கவலை அவருக்கு உள்ளது.
சமந்தா: முன்னதாக, நாக சைதன்யா திருமணம் செய்து கொண்ட சமந்தாவும், ஆங்கிலம் மற்றும் மலையாளம் அதிகமாக பேசினார். வீட்டில் தெலுங்கு பேசுவது மிகவும் குறைவாக இருந்தது. இந்த நிலையில்தான், ஷோபிதா துலிபாலா தெலுங்கை பூர்வீகமாக கொண்ட பெண் என்பதால் கண்டிப்பாக வீட்டில் சரளமாக தெலுங்கில் பேச வேண்டும் என்ற நிபந்தனையை திருமணத்திற்கு முன்பே நாக சைதன்யா விதித்தார்.
தெலுங்கில் பேசும்படி கேட்பேன்: அதற்கு ஷோபிதாவும் சம்மதம் தெரிவித்தாராம். திருமணத்திற்கு முன்பு கூட தன்னை சந்தித்த பல சந்தர்ப்பங்களில் தெலுங்கில் பேசும்படி ஷோபிதாவை கேட்பேன் என்றும், அவரும் சம்மதிப்பார் என்றும், அதேபோல் திருமணம் ஆன பிறகும் வீட்டில் தெலுங்கில் தான் பேசிக்கொள்கிறோம் என்றும் நாக சைதன்யா கூறினார்.

மொத்தத்தில் நாக சைதன்யா விரும்பியபடியே ஒரு தெலுங்கு பெண்ணை திருமணம் செய்துகொண்டதோடு, தெலுங்கில் நன்றாக பேசக்கூடிய ஒரு பெண்ணையும் மனைவியாக அடைந்துள்ளார். அவரது விருப்பம் நிறைவேறியுள்ளது. ஆனால் சமந்தா இப்போது, என்ன செய்கிறாரோ என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமந்தா மீது சிலர் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர். நாக சைதன்யாவுடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்ந்திருந்தால் அனைவரும் சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்றும், நாக சைதன்யாவுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும், இரண்டு குழந்தைகளையாவது பெற்றிருந்தால் பிரிந்திருக்க மாட்டார்கள் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications