மீனாட்சிபுரம் நினைவிருக்கா? நாமக்கல் அரசு ஆர்டிஓ ஆபீசர் எடுத்த முடிவு.. இது சாதீய படுகொலை?: பிரபலம்
சென்னை: திருச்சியில் ஆர்டிஓ ஆக உள்ளார் சுப்பிரமணி (40). இவரது மனைவி பிரமிளா. இவர் நாமக்கல் ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியை ஆக உள்ளார். இவர்களது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.. அந்த காதலை கைவிட கோரியும் மகள் கைவிடாததால், மனமுடைந்த பெற்றோர் இருவரும், ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து எழுத்தாளர் ராஜகம்பீரன் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள எழுத்தாளர் ராஜகம்பீரன், "படித்த, கல்வியறிவு பெற்று, ஆர்டிஓ அரசு பணியில் இருக்கிறார் சுப்பிரமணி.. மனைவி பிரமீளா அரசு பள்ளி ஆசிரியை.. இவர்கள் 2 பேரின் மனதிலும் சாதி படிந்துள்ளது..

பொதுவாக, மகள் வேறு சாதி நபரை காதலிக்கிறார் என்றால், ஒன்று காதலர்களாக அவர்களை ஏற்றுக் கொள்வது அல்லது அவர்களை புறக்கணிப்பது என இந்த 2 வழிகள் உள்ளன., ஆனால், இந்த இரண்டுமேயில்லாமல், தங்களது பிள்ளைகளையே கூலிப்படை வைத்து ஆவண கொலை செய்வது, அல்லது வேறு சாதியை ஏற்க முடியாமல் தற்கொலை செய்வது என்பது எதிர்ப்பின் வகைகளாக சமூகத்தில் உள்ளன.
நாமக்கல் தம்பதி தற்கொலை
அப்படித்தான் நேற்று அதிகாலை 4 மணிக்கு, தம்பதி இருவரும் ரயில் முன்பு பாய்ந்து இறந்துள்ளனர்.. தற்கொலைக்கு எதிராகவும், ஜாதிக்கு எதிராகவும் இருக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்தான்.. அப்படியிருக்கும்போது, இந்த ஆசிரியை எப்படி தற்கொலை செய்தார்? அப்படியானால், இதுவரை தன்னுடைய மாணவ, மாணவிகளுக்கு என்னவிதமான கருத்துக்களை கற்பித்திருப்பார்?
கணவரின் ஆர்டிஓ பணி
அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத, ஒரு அப்பட்டமான பொய்தான் ஜாதி.. அனைத்துமே சாதியாகவே இங்கு உள்ளது.. ஒவ்வொரு குடும்பமும் நடைமுறையாக சாதி சங்கமாகவே இருக்கின்றன.. சாதியை ஒழிக்க முடியாவிட்டாலும், சாதி வன்மத்துக்குள் போகாமலாவது இருக்கலாமே? சாதிக்காக ஒருவரை கொலை செய்வதோ, அல்லது தங்களது உயிரை தாங்களே மாய்த்து கொள்வதோ என எக்ஸ்ட்ரீம் முடிவுகளுக்கு ஏன் இவர்கள் போக வேண்டும்?
இந்த நபர் ஆர்டிஓ பணியில் சேர்ந்தது , தன்னுடைய படிப்பினாலே தவிர சாதியினால் கிடையாது.. அந்தம்மா ஆசிரியை வேலைக்கு சென்றதும் படிப்பினால்தான்.. ஆக, அறிவியல்தான் வாழ்க்கையை நகர்த்துமே தவிர, இதுபோன்ற பொய்யான கற்பிதங்கள், உங்கள் வாழ்க்கையை உருவாக்கவில்லை..
பெற்றோர் இருவருமே ரயிலில் விழுந்து தற்கொலை செய்துள்ளதால், அந்த குற்ற உணர்ச்சிக்கு பெற்ற மகள் ஆளாகியிருக்கிறார்.. எப்படிப்பார்த்தாலும், வாழ்நாள் முழுக்க தன்னுடைய மகளை தண்டிக்கணும் என்கிற வன்மத்தை தவிர வேறு எதுவுமே இதற்குள் இல்லை..
மீனாட்சிபுரம்
கவுசல்யா-சங்கர் இருவரும் இந்துதானே? ஏன் ஆணவப்படுகொலை நடந்தது? பட்டியலினத்துக்கும், படையாட்சிக்கும் பகை ஏன் நீடித்தபடி உள்ளது? தென்மாவட்டங்களில் ஏன் தேவர்-தலித் என்ற முரண்பாடு நீடிக்கிறது?
அன்று மீனாட்சிபுரத்தில் இஸ்லாமியர்களாக மாறப்போகிறோம் என்றதுமே ஏன் பதட்டமாகிறார்கள்? மதமாற்றம் நடக்கும்போதெல்லாம் பதற்றம் அடைபவர்கள், அதே மதத்திற்குள் நிகழும் ஏற்றத்தாழ்வை நீக்கி, சமத்துவத்தை உண்டாக்க, இதுவரை என்னென்ன பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்?
ஆக, மதத்தை தாங்கி பிடிக்கக்கூடிய தூண்களாக சாதி இருக்கணும்.. சாதியின் மூலமாக யாருடைய உழைப்பாவது சுரண்டப்பட வேண்டும்.. இதற்காக பல உயிர்கள் போகணுமா? இன்று நடந்தது தற்கொலையா? சாதீய படுகொலையா?
தமிழ்நாட்டில் யாரும் சாதி பெயரை போடுவதில்லைதான்.. ஆனால், ஆழ்மனதுக்குள் எல்லோரிடமும் இருக்கவே செய்கிறது.. பகிரங்கமாக இல்லை என்பதற்காக, சாதியின் வேர்கள் ஓடிக் கொண்டிருப்பதை இல்லை என்று நாம் மறுக்க முடியாது..
வேலை செய்ய வேண்டிய கட்டாயம்
இது சாதி மறுப்புக்கான முற்போக்காளர்களுக்கான தோல்வியாகும்.. இடதுசாரிகளின் தோல்வி.. பெரியாரிஸ்டுகளின் தோல்வியாகும்.. சாமானிய மக்களிடத்தில் சென்று, இந்த கருத்தை பரப்புவதில் நாம் தோற்று போய்விட்டோம்..
இதற்கான வேலை திட்டங்களை நாம் உருவாக்க வேண்டும் என்பதுதான், ஒரு பாடமாக இன்று நடந்துள்ளது.. முற்போக்கு இயக்கங்களும், சாதி மறுப்பு இயக்கங்களும், பல தளங்களிலே வேலை செய்ய வேண்டிய அவசியம் இன்று வந்துள்ளது.. அதேசமயம், முற்போக்கு பேசுபவர்கள், முழுமையாக தன்னுடைய வாழ்க்கையை ஒப்படைத்து கொள்கிறார்களா? என்றும் ஒரு கேள்வி எழுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications