அம்மா திட்டிட்டாங்களா.. இன்னிக்கு ரொமான்ஸ் வேணாமா.. சரி மாமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் சின்னத்தம்பி சீரியலில், இப்போதுதான் சின்னத்தம்பியும், நந்தினியும் புருஷன் பொண்டாட்டியா சேர்ந்து வாழ ஆரம்பிச்சு இருக்காங்க.

இருந்தாலும், நந்தினியின் அப்பா கட்டிட கான்ட்ராக்ட் தொழிலை முடக்கி போட்ட எதிரியை பழிவாங்க அல்லது, அவனை எதிர்த்து மேலும் முன்னேற தானும் கட்டிடம் கட்டும் தொழிலில் இறங்க முயற்சி செய்யறான்.

நந்தினி வரைபடம், பிளான் பற்றிய விளக்கம், தொகை குறித்த விவரம் குடுத்து, புருஷனுக்கு உதவி செய்ய, கான்ட்ராக்ட், இவங்களுக்கே கிடைச்சுருது.

அம்மா

அம்மா

இருந்தாலும் சின்னத்தம்பியின் அம்மா பிள்ளையிடம் அகல கால் வைக்கறேன்னு திட்டறாங்க. இதனால மனசு சரியில்லாத சின்னத்தம்பி, பெட்ரூம் கட்டிலில் உம்முன்னு உட்கார்ந்துருக்கான்.

சரியில்லையா?

சரியில்லையா?

என்னங்க.. உங்களுக்காக குளிச்சுட்டு, மேக்கப் போட்டுக்கிட்டு, பாடி ஸ்ப்ரே அடிச்சுகிட்டு, பூ வச்சு, ஃப்ரீ ஹேர் விட்டுகிட்டு காத்திருக்கேன்.. நீங்க உம்முன்னு உட்கார்ந்து இருக்கீங்க. ஏதாச்சும் மனசு சரியில்லையான்னு கேட்கறா நந்தினி.

பேசினது

பேசினது

ஆமாம் நந்தினி.. அம்மா அப்படி பேசினது எனக்கு மனசுக்கு கஷ்டமா போச்சு. எப்படிடா ஜெயிக்கப் போறோம்னு சவாலாவும் இருக்குன்னு சொல்றான். அது சரிதாங்க.. இன்னிக்கு உங்களுக்கு மனசு சரியில்லாமத்தான் இருக்கும்னு சொல்றா நந்தினி

மாமா ரொமான்ஸ்

மாமா ரொமான்ஸ்

உங்களுக்குத்தான் மனசு சரியில்லை இல்லே மாமான்னு கேட்கறா நந்தினி. ஆமாம்னு சொல்றான் இவன். அப்டீன்னா இன்னிக்கு ரொமான்ஸ் ஒண்ணும் வேணாம் இல்லைங்கன்னு நந்தினி கேட்கறா. ம்ம்னு இவன் சொல்ல.. ரெண்டு பேரும் அப்படியே படுத்து தூங்கிடலாமான்னு கேட்கறா..ம்ம்னு மறுபடியும் இவன் சொல்ல.. சரி மாமா இன்னிக்கு மட்டும் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்னு சொல்றா.

ரொமான்ஸ்தான்

ரொமான்ஸ்தான்

இப்படி எல்லாம் நான் சொல்லுவேன்னு நினைச்சீங்களா.. அப்படியே குத்திருவேன்... வெளியில போங்கன்னு சொல்றா.. என்ன நந்தினின்னு சின்னத்தம்பி கேட்க.. வெளியில போயி, வாசல் படியில் நில்லுங்கன்னு சொல்றா. அவனும் நிக்க, அந்த இடத்தோட உங்க கவலை, டென்சன் எல்லாத்தையும் விட்டுட்டு பெட்ரூமுக்கு வாங்க. பெட்ரூம்ல ரொமான்ஸ் மட்டும்தாங்கன்னு சொல்றா.

அழகான பொண்டாட்டி

அழகான பொண்டாட்டி

இப்போ பாருங்க எவ்ளோ அழகான பொண்டாட்டி நான். அவங்க அதை சொன்னாங்க.. இவங்க இதை சொன்னனாங்கன்னு தினமும் மனசு சரியில்லாமத்தான் இருக்கும். அதை பார்த்தா குடும்ப சந்தோசம் எப்படிங்க. எல்லாத்தையும் தாங்கிக்கிட்டுத்தான் வாழணும்.. இப்போ சொல்லுங்க நான் எப்படி இருக்கேன்னு கேட்கறா..அழகா இருக்கே நந்தினின்னு சொல்ல, அப்போ அவ்ளோதானான்னு கேட்கறா.. இன்னும் இருக்கு நந்தினின்னு அவளை பெட்ல சாய்க்கறான்.

வேறென்ன.. அம்புட்டுதேன்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+