நாஞ்சில் விஜயனுக்கும் மரியாவுக்கும் திருமணம் செய்து வைத்த பாலாம்பிகா! நடிகன் படத்தில் நடித்தாரே!
சென்னை: நாஞ்சில் விஜயனுக்கும் மரியாவுக்கும் திருமணம் செய்து வைத்தது வைஷு இல்லை என்றும் பாலாம்பிகாதான் என்றும் நாஞ்சில் விஜயனின் மாமியார் தெரிவித்துள்ளார். யார் இந்த பாலாம்பிகா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு எனும் நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு காமெடியில் கலக்கியவர் நாஞ்சில் விஜயன். இவர் பலகாலமாக திருமணத்திற்கு பெண் தேடி கடைசியில் மரியா என்ற பெண்ணை கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இருவரும் சேர்ந்து காமெடியாக வீடியோக்களையும் போட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜே வைஷு என்ற திருநங்கை, நாஞ்சில் விஜயனை காதலிப்பதாகவும் அவர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு தற்போது தன்னுடன் பழக மறுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இது குறித்து வைஷு செய்தியாளர்களிடம் கூறுகையில், நாஞ்சிலும் நானும் 15 ஆண்டுகள் நண்பர்களாக இருக்கிறோம். இதில் 7 ஆண்டுகள் காதலித்து வருகிறோம்.
நாங்கள் இருவரும் பலமுறை தனியே தங்கியிருக்கிறோம். என்னுடன் பாலியல் உறவையும் நாஞ்சில் கொண்டிருக்கிறார். இவருக்கு மரியாவை நான்தான் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தேன். மரியாவின் தாயை எனக்கு பாலாம்பிகா அக்கா மூலம் தெரியும். அதனால் நாஞ்சிலின் தங்கை வளைகாப்பிற்கு அவர்களை வரச் சொன்னேன். அதன் மூலம்தான் இவர்களுக்கு திருமணம் ஆனது.
திருமணமாகியும் தன்னுடன் பழகிய நாஞ்சில், தற்போது குழந்தை பிறந்ததும் என்னை அவாய்ட் செய்கிறார். நான் பேசச் சென்றால் முகத்தை திருப்பிக் கொள்கிறார். நாங்கள் காதலிப்பது மரியாவுக்கும் அவரது அம்மாவுக்கும் நாஞ்சிலின் சகோதரிகள், குடும்பத்தினருக்கும் தெரியும். எனவே என்னுடன் அவர் மீண்டும் பழையபடி பழக வேண்டும் என தெரிவித்தார்.
ஆனால் இதை நாஞ்சில் விஜயனும் மரியாவும் மறுத்தனர். மேலும் தங்களுக்கு திருமணம் செய்து வைத்தது பாலாம்பிகாதான் என்றும் வைஷு இல்லை என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் வைஷு பல்வேறு சானல்களுக்கு பேட்டி அளித்து வரும் நிலையில் நடிகை பாலாம்பிகா பேட்டி கொடுத்துள்ளார்.
நடிகை ஷகிலாவுக்கு அவர் அளித்த பேட்டியில், "நாஞ்சிலுக்கு மரியாவையும் அவரது குடும்பத்தினரையும் அறிமுகம் செய்து வைத்தது நான்தான். ஆனால் வைஷு ஏன் இப்படி சொல்கிறார் என தெரியவில்லை. நாஞ்சிலுக்கு பெண் பார்ப்பது தெரிந்ததும், நான்தான் மரியா அம்மாவிடம் அவரை அழைத்துக் கொண்டு நாஞ்சில் தங்கை வளைகாப்புக்கு வருமாறு அழைத்தேன்.
அங்கு மரியாவை பார்த்ததும் நாஞ்சிலுக்கு பிடித்துவிட்டது. பிறகு பெண் கேட்ட போது சினிமாக்காரர்களுக்கு பெண் தர மாட்டேன் என மரியா அம்மா சொன்னார். நான்தான் நாஞ்சில் நல்ல பையன் நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம் என்றேன். இப்படியே ஓராண்டு போன நிலையில் பிறகு மரியாவை நாஞ்சிலுக்கு திருமணம் செய்து கொடுக்க அவருடைய அம்மா சம்மதித்தார். பின்னர் திருமணம் நடந்தது" என்றார்.
இந்த நிலையில் பாலாம்பிகா யார் என்பதை பார்க்கலாம். இவர் பழம்பெரும் இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்த ராமசாமியின் மகள்தான். நடிகர் முரளி நடித்த பாலம் படத்தில் முரளிக்கு தங்கையாக சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் நடிகன் படத்தில் குஷ்புவுக்கு தங்கையாக செமையாக லூட்டி அடித்திருப்பார். பாட்டுக்கு ஒரு தலைவன் படத்தில் விஜயகாந்த் தங்கையாக நடித்திருந்தார். திருமதி பழனிசாமி படத்திலும் சத்யராஜுக்கு தங்கை வேடம். இப்படி முன்னணி ஹீரோக்களுக்கு தங்கையாக இவர் நடித்துள்ளார். இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சீரியல்களில் நடித்து வருகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications