“நடுரோட்டில் நாஞ்சில் விஜயன் செய்த காரியம்!.. ஆட்டோவை வழிமறித்து சண்டை... ”புகார் மேல் புகார்
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டே இருக்கிறார். ஒரு பக்கம் நடிகை விஜே வைஷு கொடுத்த புகார், இன்னொரு பக்கம் முன்னாள் தோழி என கூறப்படும் சூர்யா தேவியின் பணப்புகார் என்று பரபரப்பு ஓயாத நிலையில், இப்போது நாஞ்சில் விஜயனை சுற்றி மேலும் ஒரு புதிய வீடியோ சமூக வலைதளங்களில் தீப்பிடித்தது போல பரவி வருகிறது.
இந்த முறை விஷயம் இன்னும் பெரிய சர்ச்சையாக மாறியிருப்பதற்கு காரணம், ஒரு பெண் பயணம் செய்த ஆட்டோவை நடுரோட்டில் வழிமறித்து நாஞ்சில் விஜயன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வெளியாகிய வீடியோ தான். அந்த வீடியோவில், நாஞ்சில் விஜயன் தனது உதவியாளருடன் சேர்ந்து ஆட்டோவை நிறுத்தி, அதில் இருந்த பெண்ணிடம் கடுமையாக பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த பலரும், "ஏற்கனவே பல சர்ச்சை இருக்கு... இதென்ன புதுசா?" என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

நடுரோட்டில் திடீர் தகராறு
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், ஒரு பெண் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது, நாஞ்சில் விஜயன் அவரை வழிமறித்து நிறுத்தி, அந்தப் பெண்ணிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அருகில் இருந்தவர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
வீடியோவில், "எதற்காக இப்படி வழிமறித்து நிறுத்துகிறார்கள்?", "பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையா?", "முன்பே தெரிந்தவர்களா?" என்ற கேள்விகள் நெட்டிசன்களிடையே எழுந்து கொண்டிருக்கின்றன. சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் யார் என்ன பேசினார்கள், அந்தப் பெண் என்ன விளக்கம் கொடுத்தார், நாஞ்சில் விஜயன் எதற்காக அவ்வளவு கோபமாக இருந்தார் என்ற விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நாஞ்சில் விஜயன் தரப்பு என்ன சொல்கிறது?
அந்த வீடியோவில் நாஞ்சில் விஜயன் அந்தப் பெண் தங்களுடைய கடையில் டிரஸ் வாங்கி, "ஜிபே மூலம் பணம் அனுப்புகிறேன்" என்று சொல்லிவிட்டு பணம் செலுத்தாமல் சென்றுவிட்டார் என நாஞ்சில் விஜயன் கூறுகிறார்.
அதாவது, பணம் கொடுக்காமல் ஏமாற்றிச் சென்றதால் தான் அவரைத் துரத்திச் சென்று ஆட்டோவை நிறுத்தி கேட்டதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண் இதை ஏற்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதுவே அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்து வீடியோவாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இங்கேயே விஷயம் இன்னும் குழப்பமாகிறது. ஏனென்றால், ஒரு தரப்பு "பணம் கொடுக்காமல் ஓடியவர்" என்று சொல்கிறது; மறுபக்கம் அந்தப் பெண் அதற்கு இணங்காத மாதிரி வீடியோவில் வாதிப்பது போல தெரிகிறது. உண்மை என்ன, யார் சொல்வது சரி, இது வெறும் பணத் தகராறா அல்லது வேறு பின்னணி ஏதாவது இருக்கிறதா என்பதே இப்போது பலரின் கேள்வியாக இருக்கிறது.













Click it and Unblock the Notifications