Nanjil Vijayan: சுசித்ரா டபுள் கேம் ஆடுறாங்க, ஒரு சைக்கோ! என்கிட்ட ஆதாரம் இருக்கு! வி.ஜே வைஷு பகீர் போஸ்ட்
சென்னை: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நாஞ்சில் விஜயன் மற்றும் வி.ஜே. வைஷு இடையேயான பிரச்சனை, தற்போது புதிய திசையை நோக்கி திரும்பியுள்ளது. நாஞ்சில் விஜயன் மீதான புகாரை வாபஸ் பெற்ற நிலையில், தற்போது பாடகி சுசித்ரா மீது வி.ஜே. வைஷு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம், சமூக வலைத்தளங்களில் புதிய விவாதங்களைத் தொடங்கியுள்ளது.

நாஞ்சில் விஜயன்
நாஞ்சில் விஜயன், விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர். தனது தனித்துவமான உடல்மொழிக்காகவும், அசத்தலான நகைச்சுவைக்காகவும் இவர் ரசிகர்களிடையே பெரும் பிரபலமானார். கலக்கப் போவது யாரு? போன்ற நிகழ்ச்சிகள் இவருக்குப் பெரும் அடையாளத்தைக் கொடுத்தன. பின்னர், பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தும், பல மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியும் சின்னத்திரை மற்றும் சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
நாஞ்சில் விஜயன் மீது வி.ஜே. வைஷுவின் புகார்
சில நாட்களுக்கு முன்பு, திருநங்கை வி.ஜே. வைஷு, நாஞ்சில் விஜயன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "நாஞ்சில் விஜயனும் நானும் பல வருடங்களாகப் பழகி வருகிறோம். அவர் என்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டார். நாஞ்சில் விஜயனுக்குத் திருமணம் நடத்தி வைத்ததே நான்தான். திருமணத்திற்குப் பிறகும்கூட என்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டார். ஆனால், அவருக்குக் குழந்தை பிறந்த பிறகு என்னைத் தவிர்த்துவிட்டார். மேலும், என்னிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணம் வாங்கித் திருப்பித் தரவில்லை" என்று பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமரசம் ஆன விவகாரம்
வி.ஜே. வைஷுவின் புகாருக்குப் பதிலளிக்கும் வகையில், நாஞ்சில் விஜயன் தனது மனைவியுடன் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், "நீங்கள் எனக்குத் தங்கை மாதிரி. திறமையான பெண் நீங்கள். என்னிடம் நேரடியாகப் பேசியிருக்கலாம். இப்படிச் செய்தது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, வி.ஜே. வைஷு திடீரென தனது புகாரை வாபஸ் பெற்றார். இது, அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா அல்லது பணப் பரிவர்த்தனை மூலம் சமரசம் செய்யப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்பியது.

சுசித்ரா மீது வி.ஜே. வைஷுவின் குற்றச்சாட்டுகள்
இந்த நிலையில், பாடகி சுசித்ரா குறித்து வி.ஜே. வைஷு பேசிய வீடியோவும், சுசித்ரா அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்டும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர், "நான் பேட்டி கொடுக்கப் போகின்றேன். அதில் ஜாய் கிரிஸில்டா பற்றியும் உன்னுடைய விஷயத்தைப் பற்றியும் பேசப் போகின்றேன். ஆனால், உனக்குச் சாதகமாகப் பேச முடியாது" எனச் சுசித்ரா தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
ஆனால், சுசித்ரா அளித்த ஒரு பேட்டியில், வி.ஜே. வைஷு குறித்து பல விஷயங்களைப் பேசியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, வி.ஜே. வைஷு, "சுசித்ரா ஒரு சைக்கோ. அவர் உண்மையாகவே மனநிலை பாதிக்கப்பட்டவர். அவர் டபுள் கேம் ஆடுகிறார். என்னை இந்த வேலைக்கு அறிமுகப்படுத்தியதே அவர்தான். ஆனால், இப்போது இப்படிப் பேசுகிறார். அவருக்குக் கஞ்சா இல்லாமல் இருக்க முடியாது" என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நாஞ்சில் விஜயன் விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில், வி.ஜே. வைஷுவின் இந்த புதிய குற்றச்சாட்டுகள், மீண்டும் திரை உலக விவாதங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications