என்னை ஏமாற்றி கல்யாணம் செய்துகிட்டாரு! ஒரு வருஷத்துல நாஞ்சில் விஜயன் மனைவி பரபரப்பு "புகார்"
சென்னை: என்னை ஏமாற்றிதான் திருமணம் செய்துக் கொண்டார் என கணவர் நாஞ்சில் விஜயன் மீது அவருடைய மனைவி மரியா ஒரு பேட்டியில் குற்றம்சாட்டியது வைரலாகி வருகிறது. சமூகவலைதளங்களிலும் "என்ன புரோ இப்படிஎல்லாம் ஏமாற்றலாமா" என கேள்வி எழுப்பப்படுகிறது.
விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன். இவர் அது இது எது, கலக்க போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகளில் காமெடி செய்து கலக்கியவர். பெரும்பாலும் பெண் வேடம் போட்டு நடித்து நடிப்பார். மிகவும் நேர்த்தியாக இருக்கும்.

இவர் லாக்டவுன் நேரத்தில் யூடியூப் சேனலை தொடங்கினார். அந்த சேனலுக்கு யூடியூபர் சூர்யா தேவியை பேட்டி எடுத்த போது வனிதா விஜயகுமார்- பீட்டர் பால் திருமணம் குறித்து தகாத வார்த்தைகளால் பேசியிருந்தார். இதையடுத்து வனிதா விஜயகுமார் சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்தார்.
மேலும் சூர்யா தேவி கஞ்சா வியாபாரி என்றும் நாஞ்சில் விஜயனுடன் அந்த பெண் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் வனிதா விஜயகுமார். இதையடுத்து சூர்யாதேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் இருவருக்கும் இடையே அடிதடி வரை போனது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு சூர்யாதேவியை அவதூறாக பேசி மிரட்டி தாக்கியதாக கூறப்பட்ட புகாரில் 2022 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸார் நாஞ்சில் விஜயனை கைது செய்தனர்.
அண்மையில் கூட ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் நாஞ்சில் விஜயன் சிக்கினார். பிரபல நடிகை ஒருவருடன் சேர்ந்து 1500 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை பிளாக்கில் 6000, 7000 என பெரிய தொகைக்கு விற்பனை செய்ததாக புகார்கள் எழுந்தன. அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிய நாஞ்சில் விஜயன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட வள்ளித் திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நாஞ்சில் விஜயன்.
இந்த நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு 10 மாதங்களுக்கு முன்பு இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இவர் தனது நண்பர்கள் மூலம் அறிமுகமான மரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நாஞ்சில் விஜயனும் மரியாவும் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில் மரியா, இவர் என்னை ஏமாற்றிதான் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்தின்போது எங்களிடம் அவரது வயதையே சொல்லவில்லை. ஆனால் இவருக்கு இப்போ அங்கிள் வயசு இருக்கும். என்னை பெண் பார்க்க வந்த போது கூட இவர் தலை, மீசை, எல்லாம் வெள்ளையாகவே இருந்தது.
கல்யாணத்திற்கு பிறகு ஒரு நாள் இவருக்கு எண்ணெய் தேய்த்து விட்டேன். அப்போதுதான் சாயம் வெளுத்தது (சிரிக்கிறார்). தலை பூரா வெள்ளை முடிதான் என்று தனது கணவர் பற்றி நகைச்சுவையாக கூறியிருந்தார். அதற்கு நாஞ்சில் நான் ஏமாற்றி எல்லாம் கல்யாணம் செய்யலை. என்னோட வயசையும் நான் மறைக்கவில்லை, இந்த வெள்ளை முடிக்கு மட்டும்தான் டை அடித்துவிட்டேன் என்றார். இவர் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக அறிமுகமான நாஞ்சில் விஜயன் ஒரே வாரத்தில் தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications